COUNTING & CRACKING

COUNTING & CRACKING



COUNTING & CRACKING
Waitlist for Seats: For sold out performances, we also operate a waitlist for seats. The waitlist is available to take names at the Sydney Town Hall Box office between:
* 5:30pm and 6:30pm (for 7pm performances)
* 11:30am – 12:30pm (for 1pm performances). Please note that the waitlist is only available in person and is subject to availability. People do return tickets or advise us when they can’t use their tickets and we then release them shortly before the show commences.


THU 17/1/19 1:00PM
   SOLD OUT!
THU 17/1/19 7:00PM
   SOLD OUT!
FRI 18/1/19 7:00PM
   SOLD OUT!
SAT 19/1/19 1:00PM
   SOLD OUT!
SAT 19/1/19 7:00PM
   SOLD OUT!
SUN 20/1/19 1:00PM
   SOLD OUT!
TUE 22/1/19 7:00PM
   SOLD OUT!
WED 23/1/19 7:00PM
   SOLD OUT!
THU 24/1/19 1:00PM
   SOLD OUT!
THU 24/1/19 7:00PM
   SOLD OUT!
FRI 25/1/19 7:00PM
   SOLD OUT!
SAT 26/1/19 1:00PM
   SOLD OUT!
SAT 26/1/19 7:00PM
   SOLD OUT!
SUN 27/1/19 1:00PM
   SOLD OUT!
TUE 29/1/19 7:00PM
   SOLD OUT!
WED 30/1/19 7:00PM
   SOLD OUT!
THU 31/1/19 1:00PM
   SOLD OUT!
THU 31/1/19 7:00PM
   SOLD OUT!
FRI 1/2/19 7:00PM
   SOLD OUT!
SAT 2/2/19 1:00PM
   SOLD OUT!
SAT 2/2/19 7:00PM
   SOLD OUT!

தமிழ் சினிமா - கனா - திரை விமர்சனம்


Image result for kanaa

.


தமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள் இங்கு ஹிட் அடித்துள்ளது, ஆனால், அது அனைத்துமே ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தான் இருக்கும். இந்த முறை பெண்களுக்கு அதுவும் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் படம் கனா. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கனாவை நிறைவேற்றியதா இந்த கனா? பார்ப்போம்.

கதைக்களம்

ஸ்போர்ட்ஸ் கதை என்றாலே டெம்ப்ளேட்டாக ஒரு சில ஒன் லைன் இருக்கும், அதே போல் தான், தமிழகத்தில் குக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் எப்படி இனடர்நேஷ்னல் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்ப்பிடிக்கின்றார் என்பதே இந்த கனா.
வெறும் விளையாட்டு என்று மட்டுமில்லாமல் அதில் ஒரு விவசாயி தன் மகளை எப்படி பல எதிர்ப்புகளை மீறி இந்தியாவே போற்றும் ஒரு வீரங்கனையாக மாற்றுகின்றார் என்பதை மிக உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளது கனா.

இலங்கைச் செய்திகள்

.

புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் - அரசாங்கம் 

“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல” 

ஜனாதிபதி  வேட்பாளர்  தொடர்பில்   இதுரையில்  தீர்மானம்   எடுக்கவில்லை - பொதுஜன   பெரமுன 



.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. 
அரசியல் அமைப்புக்கான வரைபு அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. 
ஆகவே இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அனைவரினதும் நிலைபாட்டினையும் பெற்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை நரூபித்ததன் பின்னர் மக்கள் தீர்ப்பினூடாகவே நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 
அலரிமாளிகையில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான பாரிய விமர்சனங்கள் தற்போது தேவையற்றதாகும். 
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கம் நடவடிக்கைகள் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டும் இல்லை.
 2015 ஆம் ஆண்டே புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. 
2015 அம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரே அரசியல் அமைப்புசபையினூடாக அதன் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



குமார் சங்காகார சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே என்னிடம் கலந்துரையாடினார்.மேலும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் குமார் சங்ககாரவுக்கும் தனக்கும் இடையில்  எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே இருவரும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் குமார் சங்கக்காரவுக்கும் இடையில் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 
இன்று புதன்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஜனாதிபதி  வேட்பாளர்  தொடர்பில்   இதுரையில்  தீர்மானம்   எடுக்கவில்லை - பொதுஜன   பெரமுன 


பொதுஜன பெரனமுன  முன்னணியின்  ஜனாதிபதி  வேட்பாளர்  மற்றும்   சுதந்திர  கட்சியினுடனான புதிய  கூட்டணி  தொடர்பில்   இதுரையில்  எவ்விதமான  தீர்க்கமான தீர்மானங்களையும்   எடுக்கவில்லை.    
இரு தரப்பினரும்   தங்களின் தனிப்பட்ட  கருத்துக்களையே   குறிப்பிடுகின்றனர்.   தனிப்பட்ட   கருத்துக்கள்    கட்சிக்குள்  பாரிய   பிளவினையையும்,  எதிர்கால அரசியல்  திட்டங்களுக்கும்   பாரிய   விளைவுகளை    ஏற்படுத்தும் . 
ஆகவே   இவ்விடயங்களுக்கு பொதுஜன  பெரமுன முன்னணி   விரைவில்   மாற்று  நடவடிக்கையினை முன்னெடுக்கும்  என     பொதுஜன   பெரமுன முன்னணியின்  பொதுச்செயலாளர்  சாகர   காரியவசம்  தெரிவித்தார்.
 ஜனாதிபதி    வேட்பாளர்   தொடர்பில்     பொதுஜன  பெரமுன   முன்னணியினர்  மத்தியில்  காணப்படுகின்ற  கருத்து     வேறுப்பாடுகள்  தொடர்பில்  வினவிய    போதே  அவர்    மேற்கண்டவாறு    குறிப்பிட்டார்.
அவர்   மேலும்  குறிப்பிடுகையில், 
முரண்படுகின்ற    கருத்துக்களுக்கு  விரைவில்  ஒரு  தீர்வு   முன்வைக்கப்படும்.      சுதந்திர   கட்சியும்,  பொதுஜன   பெரமுன   முன்னணியும்   இணைந்து  செயற்படுவது  வரவேற்கத்தக்கது.    
எவ்வாறு  இருப்பினும் ஒருபோதும்   நாங்கள்  புதிய  கூட்டணி   விடயத்தில்  தொடர்ந்து  குறிப்பிட்டு  வருகின்ற   விடயங்களை  ஒருபோதும்   எவருக்காகவும்  விட்டுக்  கொடுக்கமாட்டோம்.   இவ்விடயத்தில்  பொதுஜன  பெரமுன   முன்னணியின்  உறுப்பினர்கள்  அனைவரும்   உறுதியாகவே  உள்ளோம்  என்றார்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்





நேர்படப் பேசு - தி வினோதினி

.

நேர்படப் பேசு

இங்கேதான்
நான் இங்கேதான் நின்றுகொண்டிருக்கிறேன்
நீங்கள் என் முதுகிற்கு பின்னால் அல்ல
முகத்திற்கு முன்னால் உமிழுங்கள் உங்கள் வார்த்தைகளை
என் புன்னகையை பரிசாக்குவேன்

என் இரு செவிகளும் திறந்தேயிருக்கின்றன
ஒன்று உள்வாங்குவதற்கும்
மற்றொன்றால் வெளியிடுவதற்குமாக
என் நெஞ்சுக்கூட்டில் அதி வெளிகளில்லை
உங்கள் சாக்கடை சிந்தனைகளை தேக்கிவைப்பதற்கு
என் செவிகள் திறந்தேயிருக்கின்றன

திட்டுவதானாலும் திட்டிவிடுங்கள்
உங்கள் வார்த்தைகளின் விகாரங்களை தாங்குமளவிற்கு
தைரியமாகவே வளர்ந்திருக்கிறேன்
எனினும் என் தைரியத்தை பார்த்து நீங்கள்
பயம் கொள்ளத் தேவையில்லை
வீண் விவாதங்களில் உங்களை சந்திக்க
என் நாட்காட்டியில் இடைவெளிகள் ஏதுமில்லை.

தி வினோதினி

nantri /eluthu.com

சொல்லத்துடித்த வானம் செ .பாஸ்கரன்

.

Image may contain: sky, cloud, night, outdoor and nature

மலை முகட்டை
தென்றல் தழுவியது
தளராத மலைகூட
தடுமாறியது
தென்றல் சிரித்தது
ஊ ஊ என்று 
ஊதித்தள்ளியது
தள்ளி நின்று
பார்த்த மேகம்
மலை முகட்டை காணாது
துடித்தது 
கண்ணீர் விட்டு அழுதது
தென்றல் அல்ல 
புயல் என்று 
தெரிந்து கொண்டபோது
சிகரத்தை இளந்திருந்தது
மலை

ஊர்வதுவே, பறப்பதுவே, நடப்பதுவே (நடைக்குறிப்பு) – யோகன்

கறுப்பு நிற பெரிய பல்லிகள் கோடை காலத்தில் வெளிவந்து வெயில் குளிப்பது போல பற்றைகளுக்கருகிலும் , பாதையோரத்திலும் படுத்துக் கிடக்கின்றன.   தற்செயலாகப் பார்க்கையில் பாம்பின் தலை போலத்  தோற்றங் காட்டிப் பயமுறுத்தும் இவைகளால் பெரும்பாலும்  ஆபத்தில்லை.
அன்று இந்த வகைக் கறுப்பு பல்லி யொன்று மெதுவாக தெருவை ஊர்ந்து கடக்கையில் ஒரு காரின் சக்கரங்களில் நசிபடாது தப்பியது.   தொடர்ந்து ஊர்ந்தது  பல்லி . ஆனால் பாவம் பின்னல்  வந்த காரின் சக்கரம் சரியாக பல்லியின் கதையை  முடித்தது. அதன் வெண்புற அடி வயிறு தெரிய பரிதாபமாக இறந்து விட்டதை  தெருக்கரையில் நின்று பார்த்திருந்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது?  
சில செக்கன்களில் கூட்டமாக வந்திறங்கின சில குக்குபாரோக்கள். சரிதான் அவைக்கு ஒரு டேக் எவே   கிடைத்து விட்டது என்ற திருப்தியில் நான் நடையைத் தொடர்ந்தேன். திரும்பி அந்த வழியாகப் போகையில் பல்லி  அங்கு கிடக்கவில்லை.
கொக்கட்டூ  என்ற வகைப்படும் கிளி  இனங்கள் இங்கு பல நூறு வட்டமடித்துப் பறக்கின்றன.  சாம்பல் நிற செட்டைகளும், மென் சிவப்பு கழுத்துமாக இருக்கும் இவை தெருவிலும்  திடீரென்று கூட்டமாக தரை இறங்கும்.
இன்னொருநாள் இப்படி இரைகளை தேடுவதற்காக கொக்கட்டூ கிளிகள் சாலையில் இறங்கின. இரைகள் பொறுக்கின.  வந்தது கரிய கார் ஒன்று. இமைப்பதற்குள் கிளிகள் யாவும் மேலே எழுந்தன ஒன்றைத்தவிர. அது இரையில் கொண்ட கவனம் கலையுமுன் காரின் முகப்பு அதனை அறைந்து மோதியது.  பாவம் தெருக்கரையில் காயப்பட்டு அரை உயிரில்  கிடந்தது கிளி.

இனிய கானங்கள் 2019 20 Jan 2019

.
Image may contain: text

திகடசக்கரம் -அ. முத்துலிங்கம்

.
எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்'. முந்திய பிறவியில் நான் செய் வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது. நான் எங்கே போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்.

ஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்து வந்தான். ஆள் உயரமாகவும், வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்து பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்கமாக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.


அவன் வடதுருவம் என்றால், நான் தென்துருவம். அவன் நெருப்பு என்றால் நான் ஐஸ். அவன் நீட்டி நீட்டிப் பேசினால் நான் சுருக்கமாகத் தான் பேசுவேன். எப்பவும் அவசரப்பட்டு ஓடிய படியே இருப்பான். நான் அப்படி இல்லை, குழாயில் வரும் நீர் போல மளமளவென்று சிந்தனைகளை வரவரக் கொட்டிக் கொண்டே இருப்பான். நானோ ஆற அமர யோசித்து ஒரே ஒரு வசனம் பேசினாலே அது பெரிய காரியம். இப்படியாக நாங்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் எப்படியோ ஒரு முடிச்சைப் போட்டு விட்டார்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் எரிக்ஸனுடன் தொடர்ச்சியாக பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான். அப்படி அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.

* * *

பிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்



.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் சகோதரனுமான கணேஸ் காலமாகியுள்ளார்.
அண்மைக் காலமாக மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் காலமாகியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ்மிக்க நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகனாக இவர் வலம்வந்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் போராட்ட காலங்களில் இவரின் குடும்பம் பல அளப்பரிய சேவைகளை செய்துள்ளதுடன், கணேஸ் கலையின் வெளிப்பாடாக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவராக காணப்படும் இவர், 2009 ஆம் ஆண்டு போரின் போது தனது ஒரு காலினை இழந்தபோதும்,  தனது கலையினை தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து வளர்த்துவந்துள்ளார்.
அதற்கமைய இவரின் பிள்ளைகள் தற்பொழுதும் கலைப்பயணத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேசி தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் விக்டோரியா - 2019 01. 20

ஒரு இலக்கியனின் பருதிப் பார்வை அனுபவத் தொடர் - 01 கதைகளின் ஊடாக மனித மனங்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் அழைத்துச்செல்லும் சட்டநாதன் - முருகபூபதி


" பங்குனியின் கடைக்கூறு, வெய்யில் மணலை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அந்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல், அவள் - அந்தச்சிறுமி, சொர்ணம் மகள் பெரியபுலம் வெளிமுழுவதும் பம்பரமாய் சுழன்று வந்தாள். அவளது தலையில் ஒரு பெரிய நார்க்கடகம். கடகம் நிறைந்துவரும் எரு. அவள் இப்போது செல்லமுத்தாச்சிக்கு எருப்பொறுக்கிறாள்."
இந்த வரிகளுடன் தொடங்கும் அந்தக்கிராமத்துச் சிறுமியும் ஒரு சிட்டுக்குருவியும் என்ற சிறுகதையை   1972 ஆம் ஆண்டு டிசம்பரில் கொழும்பிலிருந்து வெளிவந்த பூரணி காலாண்டிதழில் படித்தேன்.
நாற்பத்தியாறு வருடங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டு நவம்பரில், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதியில், உயிரில் கலந்த வாசம் தொடர்நாவலில், " எரு எடுப்பதற்கு ஒரு நாற்கடகத்தை நான் கையில் எடுத்துக்கொண்டேன். எல்லாம் அம்மாவை ஏமாற்றுவதற்குத்தான்."  எனத்தொடங்கும் ஒரு அங்கத்தை படித்துக்கொண்டிருக்கின்றேன்.
இந்த வரிகளை எழுதியிருக்கும் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமான படைப்பிலக்கிய ஆளுமை க. சட்டநாதனின் ஆயிரக்கணக்கான வரிகளை கடந்துள்ள நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் படித்துவருகின்றேன்.
  பூரணியில்  1972 இல் நான் முதலில் படித்த சட்டநாதனின் சிறுகதை,  அந்தக் கிராமத்துச்சிறுமி என்ற பெயரில் 1980 இல் வெளியான சட்டநாதனின் முதல் கதைத்தொகுப்பான மாற்றம் நூலில்  இடம்பெற்றுள்ளது.

சைவ மன்றம் - தைப் பொங்கல் 15/01/2019






இலக்கிய அறிவு 1 - படித்ததில் பிடித்தது - கலைஞானி


பத்துப் பாட்டு நூல்கள் எவை தெரியுமா ?

பத்துப்பாட்டு

  1. திருமுருகாற்றுப்படை
  2. குறிஞ்சிப் பாட்டு
  3. மலைபடுகடாம்
  4. மதுரைக் காஞ்சி
  5. முல்லைப் பாட்டு
  6. நெடுநல்வாடை
  7. பட்டினப் பாலை
  8. பெரும்பாணாற்றுப்படை
  9. பொருநர் ஆற்றுப்படை
  10. சிறுபாணாற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைக்கப்பட்ட்து   திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.இதுகடைச்சங்கநூல்களில் ஒன்றுஎன்பது மரபுவழிச்செய்தியாகும். இதுபிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக்  கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்றுவழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை) , குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
பாடியவர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன் :: முருகப்பெருமான்
திணை :: பாடாண்திணை
துறை :: ஆற்றுப்படை           
பாவகை :: ஆசிரியப்பா
மொத்த அடிகள் :: 317

வயலின் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்


இசை என்பது இசைய வைப்பது எனப் பொருள் படும்.’இசைக்கு இசையாதவன் மனிதனே அல்ல’ என அறிஞர் சோக்கிரட்டீஸ் சொன்னார். ஒருவன் இசைக்கு இசையவில்லை எனில் அவன் கொலையும் செய்யக்கூடிய பாதகனாக இருப்பான் என்பது அதன் கருத்து.

பாமரன் முதல் பல்மொழிப்பண்டிதன் வரை எவரையும் தன் வசப்படுத்துவது இசை. இந்த இசையானது தன்னையே மறக்கச் செய்வது. இது மொழி,பிரதேசம் அத்தனையையும் கடந்து உயர்ந்து நிற்பது.

இவ்வாறு மொழியைக் கடந்து நிற்பது வாத்திய இசைக்கும் பொருந்தும். அருமையான இசையைக் கேட்கும் போது எமது உள்ளம் அதில் லயிக்கிறது.சாதாரண மனிதனையே இசை இவ்வாறு கவர்ந்தால் அதில் மேதைகளாக இருப்பவர்கள் பற்றிக் கூறவும் வேண்டுமா?

இந்தியப் பெரும் கண்டத்தை ஐரோப்பியர் ஆண்டு வந்த காலத்திலே அவர்களது நாகரிகமும் இந்தியாவிற்கு வந்தது.அவர்களது Band வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.இசைப்பிரியர்களான மன்னர்களின் சமஸ்தானங்களிலே மேலைத்தேயக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். வயலின் அல்லது பிடில் என அழைக்கப்படும் வாத்தியம் இவ்வாறே இந்தியாவை வந்தடைந்தது.

இன்று கர்நாடக இசைக்கச்சேரிகள் எதுவுமே வயலின் பக்கவாத்தியம் இல்லாமல் நடைபெறுவது கிடையாது. இசை மேதை முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுச்சாமி தீட்சிதர் ஓர் ஆங்கிலேயரிடம் இருந்து வயலினைக் கற்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. அதே காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் வடிவேலுப்பிள்ள. அவரும் வயலினைக் கற்றுக் கொண்டார்.

நாட்டியப் பரம்பரையில் வந்த வடிவேலு தான் இந்த வாத்தியத்தை முதலிலே நாட்டிய நிகழ்ச்சிகளில் பயன் படுத்தினாராம். இவை யாவும் நடந்தது இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாகும்.

இவர்களைத் தொடர்ந்து பல வித்துவான்கள் வயலினை வாசித்தது மட்டுமல்லாது கர்நாடக இசைக்கும் மேலும் மெருகூட்டினார்கள். வயலின் மனிதனின் குரலோடு இசைந்து செல்லக்கூடிய ஒரு வாத்தியமாகும்.இதனால் கர்நாடக இசைக்கச்சேரிகளில் இந்த வயலின் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டது. எங்கிருந்து வந்தாலும் எமது இசைக்கு வயலினால் மெருகூட்ட முடியும் என்னும் போது எமது கலைஞர்கள் அதனை அன்புடம் அணைத்துக் கொண்டார்கள்.

இந்த வயலின் கர்நாடக இசைக் கச்சேரிகளில் ஒத்திசையாக வாசிக்கப்படுகிறது. அது தவிர, பலர் தனியாகவே இந்த வாத்தியத்தை வாசித்துக் கச்சேரி செய்வது வழக்கம். தற்போது இந்த வாத்தியம் இருவராக அல்லது மூவராக சேர்ந்தும் வாசிக்கப்பட்டு வருகிறது.

தைப்பொங்கல் திருவிழா 15/01/2019





வாசகர் முற்றம் - அங்கம் 01 "வாசிப்பு மனிதர்களை முழுமையாக்கும்" - மகாத்மா காந்தி " வாசகர் வட்டங்கள் நண்பர்களை உருவாக்கும்" - முத்துக்கிருஷ்ணன் மெல்பனில் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சிவக்குமார் - முருகபூபதி


முன்னுரைக்குறிப்பு
பல வருடங்களுக்கு முன்னர் தமிழக இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் ( க.நா.சு) - (1912-1988) அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த படித்திருக்கிறீர்களா? நூலின் இரண்டு பாகங்களும் படித்தேன். இன்றும் என்வசம் அந்த நூல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. "பாதுகாப்பு" எனச்சொல்வதன் அர்த்தம் புரியும்தானே!?
கா. ந. சு. வாசகருக்கு மாத்திரமல்ல படைப்பாளிகளுக்கும் தரமான நூல்களை இனம்காண்பித்திருந்தார். அவர் படித்த சிறந்த தமிழ் நூல்களை நயந்து மற்றவர்களும் அவற்றைத் தேடி எடுத்துப்படிக்கத்தூண்டுவிதமாக எழுதினார். அவரிடத்தில் அங்கீகாரம் பெறுவது எளிதானது அல்ல என்பார்கள். அவரது குறிப்பிட்ட நூல்களை படித்ததுமுதல், நானும் எனக்குப்படித்ததில் பிடித்தமான நூல்களைப்பற்றி " படித்தோம் சொல்கின்றோம்" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவருகின்றேன். இலங்கை, தமிழக, மற்றும் புகலிட படைப்பாளிகளின் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எனது ஊடக, இதழியல் நண்பர்களும் அவற்றை விரும்பி ஏற்று பிரசுரித்தும் பதிவேற்றியும் வருகின்றனர். அவற்றைப்படிக்கும் அன்பர்களில் சிலரும் என்னுடன் தொடர்புகொண்டு தமது எதிர்வினைகளை தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட நூல்களை எங்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விசாரிப்பதுண்டு.