இலங்கையில் பாரதி - அங்கம் 15 -- முருகபூபதி


.

இலங்கைவாழ் தமிழ்ப்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதித்துவத்தை பெற்றிருப்பதாக சொல்லப்படும் இன்றைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியும் அதற்கு முன்னர் தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரசும் இயங்கின. இன்றும் இவ்விரு கட்சிகளும் நடைமுறையில் இயங்கினாலும்,  இவை தவிர பல தமிழ் விடுதலை இயக்கங்களும் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்த காலப்பகுதியில் தோன்றின.
இந்தத் தமிழ் அரசியல் அணிகளுக்கு  பாரதியின் கருத்துக்களில் மிகுந்த பற்றுதலும் ஈடுபாடுமிருந்தன. இந்த அணிகளைச்சார்ந்து நிற்போர் தம் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பாரதியிடம் குடியிருந்த 'தமிழ் உணர்வையே' பிரதிபலித்தனர்.
               இடதுசாரி இயக்கங்களிலும் முற்போக்கு இலக்கிய முகாம்களிலும் இருந்த தமிழ் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் பாரதியின் தேசிய - சர்வதேசிய குணாம்சங்களை எவ்வாறு மேற்கோள் காட்டியும் பிரயோகித்தும் எழுதினார்களோ, பேசினார்களோ,    அதேபோன்று " தமிழ் அரசியல் அணிகள் " பாரதியின் தமிழ் உணர்வை, மொழிப்பற்றை தேச விடுதலை குறித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி  தத்தம் இயக்கரீதியிலான நடவடிக்கைகளுக்கு சார்பாகவும் சாதகமாகவும் பயன்படுத்திவந்தார்கள்.
அத்தகையதொரு முகாமிலிருந்து சுதந்திரன் ஏட்டை வெளியிட்ட சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்திலிருந்துதான் கலை, இலக்கிய மாத இதழான ' சுடர்' வெளிவந்தது.


திருவாசகத்தின் பெருமை 23 04 2017

.

இலங்கைச் செய்திகள்



மட்டக்களப்பில்  வேலையற்ற பட்டதாரிகள் 50 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் 

எமக்கு பொது­மன்­னிப்பை வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தியை கோர வேண்டும் : தமிழ் அர­சியல் கைதிகள் கோரிக்கை

தீவிரமைடைந்து வரும் இன்புலுவென்சா நோய்

கேப்பாபுலவில் 43நாட்களாக தொடரும் வீதி வாழ்க்கை, அரச அதிபர் அலுவலகத்தில் தீர்வுக்கோரி மகஜர் கையளிப்பு..!



வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் க.சிவப்பிரகாசம் அமெரிக்காவில் மறைந்தார்

.


வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம் கடந்த வெள்ளியன்று 14 ஆம் திகதி அமெரிக்காவில் வேர்ஜினியா மாநில மருத்துவமனையில்  காலமானார்.
கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவருக்கு வயது 83.
1966 ஆம் ஆண்டு முதல்,  ஆரம்பத்தில் வீரகேசரியின் இணை ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும்  1983 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார்.  1983 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.  அதன்பின்னர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார்.
அங்கு நீண்டகாலம் பொஸ்டன் மாநிலத்தில் வசித்தார். அவருடைய அன்புத்துணைவியாரும் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் அவர்களுக்கு இரண்டு பேரக்குழந்தைகள்.
இலங்கையின் வடபுலத்தில் மாதகலில் பிறந்திருக்கும் சிவப்பிரகாசம்   1958  இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார  பட்டதாரியானவர்.
 அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும்  ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம்  மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின்  நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய  சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன்  குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார். பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் , லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகியது.


Sri Venkateswara Temple Association Inc.23 04 2017

.

Thirunavukkarasar( Appar) Guru Pooja

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி

Thirunavukkarasar( Appar) Guru Pooja

All devotees are invited to attend this program and to participate in ‘Thevaram’ chanting. A copy of ‘Thirumurai’ book for chanting will be made available.
Devotees may participate in the whole programme or a part thereof at their own convenience.

Date:      23- 04-2017 - SUNDAY
Venue:   Shiva Temple complex

8:30 am:       Abhishekam, alankaram and maha deeparadhana  for Niruthi Valampuri Ganapathy followed by abhishekam for Moolavar & panchaloka  idols of Thirunavukkaasar( Appar).
Chanting of Appar’s Thevaram.


12:30 pm:  Special Pooja for Appar’s panchaloka idol and procession within Siva complex

படித்தோம் சொல்கின்றோம்: - முருகபூபதி

.

சாத்திரியின் தரிசனங்களாக எமது மக்களின் அவலங்கள்
படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்...?
                                                           
" எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன...? இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்..."
இந்த வரிகளுடன் சாத்திரியின் ராணியக்கா என்ற சிறுகதை முடிகிறது. இந்த ராணியக்கா மட்டுமல்ல அவரைப்போன்ற பல ராணியக்காக்களின் கதைகள் மட்டுமல்ல ஈழத்தின் அனைத்து மக்களுமே என்ன பாவம் செய்தார்கள்...? என்ற கேள்விதான் ஒரு வாசகன் என்ற  நிலையிலிருந்து எம்மிடம் எழுகின்றது.
ஈழத்திற்கான போரைத்தொடங்கியவர்களில் பலர் இன்றில்லை. அவர்களைப்பின்பற்றியவர்கள் பரதேசிகளாக சென்றுவிட்டனர். சென்றவிடத்தில் ஈழத்தின் நினைவுகள் துரத்திக்கொண்டிருக்கின்றன.
சாதாரண மனிதனாக இருந்தால் அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் நீண்ட பெருமூச்சை காற்றில் பரவச்செய்துவிட்டு மற்றவேலைகளை கவனிக்கலாம்.


காலத்தின் வாசனை: பாரதியார் எப்போது போலீஸ்காரர் ஆனார்?

.


பாரதியார் போலீஸ்காரர் ஆன கதையை அப்பா சொல்லிக் கேட்க வேண்டும். சாங்கோபாங்கமாய்ச் சொல்லுவார். இது என்ன கூத்து என்றுதானே கேட்கிறீர்கள்.. கூத்தேதான்! இருபது வருடங்களுக்கு முன்னால் பாரதியாரை போலீஸ்காரர் ஆக்கியதே என் அப்பாதான்!
ஆர்யா வரைந்த பாரதி!
எங்கள் வீட்டில் ஆர்யா வரைந்த பாரதியார் படம் இருக்கிறது. அப்பா சென்னை போய்விட்டு வரும்போது, அதைப் பயபக்தியோடு கொண்டுவந்து கையோடு அய்யங்கடைத் தெருவில் பிரேம்போட்டு வந்து மாட்டிவிட்டார். திடீரென்று எங்கள் வீட்டுக்கு ஒரு புதுவிதமான சோபை ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு தடவை வீடு மாறும்போதும் “பாரதி படத்தை எடுத்துப் பத்திரமாக வச்சுட்டியா?” என்று கேட்பார் அப்பா.
நாங்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்த போது பாரதியார் படத்தை வெகுபத்திரமாகக் கொண்டுவந்தார். சென்னை புறநகர் பகுதியில் நாங்கள் ஒரு அத்துவானக் காட்டில் குடியேறினோம். சுற்றுப்புறத்தில் வீடுகளே இல்லை. எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் திருடர் பயம் இருந்தது. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் குடியேறிவிட்டோம்.
குழந்தைகளைப் பள்ளிக் கூடத்தில் விட்டு விட்டு, நானும் என் மனைவியும் அலுவலகம் சென்றால் இரவுதான் வீடு திரும்புவோம்.
அச்சமில்லை.. அச்சமில்லை!
அப்பா வீட்டில் தனியாக இருப்பார். அவர் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரி யராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். எதற்கெடுத்தாலும் பாரதி பாடல் ஒன்றை முணுமுணுப்பார். என் குழந்தைகள் சிறு வயதிலேயே பாரதி படத்தைப் பார்த்துவிட்டு “அச்சமில்லை… அச்சமில்லை..!’’ என்று மழலைக் குரலில் பாட ஆரம்பித்து விடுவார்கள்.
எல்லோரும் நல்லவரே!

தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2017 - (குறும்படங்களுக்கு மட்டும்)

.


 பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது.

விருதுத் தொகை:

ரூபாய் 25000/-

தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும்.

விதிமுறைகள்:

* பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- "PADACHURUL" என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD யாக, கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் படத்தை கொடுக்க விரும்புபவர்கள், 250 பணத்தை கொடுத்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.


உலகச் செய்திகள்


அமெரிக்கா - வடகொரியா இடையே முறுகல் நிலை தீவிரம்; அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை

117 வடகொரியர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் மலேசிய அரசின் அறிவிப்பு

வைத்தியர் ஒருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய நிறுவனம்: அதிருப்தியில் மக்கள்! (காணொளி)

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு; ஆசிரியை, எட்டு வயது மாணவன் மரணம்

எகிப்து தேவாலயத்தில் இடம்பெற்ற கொடூரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு :  ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை! (காணொளி இணைப்பு)



NEET – National Eligibility cum Entrance Test (UG) - Muduvai Hidayath

.

MBBS/BDS படிப்புக்களுக்கு இந்த NEET தேர்வில் தேறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தேர்வு எதிர்வரும் 7-May-2017 – இன்று தொடங்கினாலும் இன்னும் 35 நாட்கள் அவகாசமிருக்கிறது சுமார் 2 கிலோவிலிருந்து 5 கிலோவரையுள்ள புத்தகங்கள், மாதிரி கேள்வித்தாள்கள், ஆன்லைன் மாதிரித் தேர்வுகள், ஆன்லைன் பாட விளக்கங்கள், நேர்முகப் பயிற்சிகள் என்று மாணவர்கள் பொழுதைக் கழிக்கமுடியும். சந்தடி சாக்கில் கல்லாக் கட்ட பல கல்வி ஆர்வலர்கள் சந்தைக்கு வந்து அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் துணிமனிகள் தேர்வு செய்வதுபோல இப்போது பிள்ளைகளுக்கான பயிற்சி மையங்களையோ அல்லது பாடப்புத்தகங்களையோ தேர்வு செய்யவேண்டிய நிலை.
இந்த 35 நாட்களுக்கு நமது ஆலோசனை எவ்வித பலனும் அளிக்க முடியுமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்தப் பதிவின் தொடர்ச்சியாக அல்லது இந்தப் பதிவின் முடிவில் பின் குறிப்பாக சில ஆலோசனைகள் கொடுத்துள்ளேன். ஆனால், இந்த பதிவின் பிரதானக் கருத்து – மிகவும் முக்கியமானது இதுதான்.

மெல்பனில் 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா 06-05-2017

.

மெல்லிசையரங்கு - வாசிப்பு அனுபவ அரங்கு - மொழிபெயர்ப்பு  அரங்கு - சிறப்புரைகள் - ஆவணப்படக்காட்சி
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ' ஞானம்' இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன  ஆகியோர் வருகை  தருகின்றனர்.
 எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017)  சனிக்கிழமை மாலை 5 மணிக்கு  மெல்பனில் விழா நடைபெறும் இடம்:   Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபம்  ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170)
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலாக  எழுத்தாளர் விழா நடைபெற்றுவருகிறது.
கடந்த காலங்களில் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் நடைபெற்றிருக்கும் தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு மீண்டும் மெல்பனில் சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில்  நடைபெறவிருக்கிறது. குறிப்பிட்ட (மாநில) நகரங்களிலுமிருந்தும் பலர் வருகைதரவுள்ளனர்.


தமிழ் சினிமா

டோரா


நயன்தாரா படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் தனி ஈர்ப்பு இருக்கும். தனக்கென்று ஒர் பாணியில் செல்லும் அவர், இந்த படம் மூலம் தான் டான் என நிரூபித்திருக்கிறாரா என்பதை அவர் நடித்துள்ள இந்த டோரா என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பது போல ஃபிளாஷ் பேக்குடன் கதை துவங்குகிறது. தம்பி ராமையாவின் மகளாக வரும் அவரின் பவளக்கொடி கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறார்.
தன் அத்தை குடும்பத்தாருடன் ஏற்பட்ட போட்டிக்காக கால் டாக்சி நிறுவனம் துவங்க சபதம் எடுத்து கார் வாங்க ஷோரூம் செல்கிறார்கள். அங்கு பல ரக கார்கள் இருக்க ஒரு பழைய மாடல் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஏதோ அவரது உள்ளுணர்வு சொல்கிறது.
அதே வேளை வட நாட்டு இளைஞர்கள் மூன்று பேர் பணத்திற்காக கொலை, கொள்ளை சம்வங்களில் ஈடுபட கதை வேறொரு பக்கம் நகர்கிறது. இவர்கள் குறித்து போலீஸ் விசாரணை ஒருபக்கம் நடைகிறது.
காரின் மூலம் சந்திக்கும் சில அமானுஷ்யங்களால் நிலை புரியாமல் இருக்கிறார் நயன், ஒரு கட்டத்தில் அந்த 3 குற்றவாளிகளில் ஒருவர் நயனின் கார் , விபத்தில் சிக்க போலிஸில் அவரும் சிக்குகிறார்.
மற்ற குற்றவாளிகள் என்ன ஆனார்கள். காரில் இருக்கும் அமானுஷ்ய சக்திக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, அவர் அதோடு போலிசில் மாட்ட காரணம் என்ன, அதிலிருந்து நயன்தாரா தப்பித்தாரா என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதைகளில் மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாரா இந்த படத்தில் மீண்டும் தன் திறமையை காட்டியிருக்கிறார். அதோடு படத்தில் சமூகத்திற்காக தன் நடிப்பின் மூலம் அவர் மேசேஜ் சொல்லும் விதம் தனி.
தம்பி ராமையா சொல்லவே வேண்டாம். ஒரு அனுபவமிக்க நடிகர் என்பதை அவரது நடிப்பே சொல்கிறது. அப்பாவாக மட்டுமில்லாமல் ஒரு காமெடியான அவர் செய்யும் வேலைகள் படத்திற்கு கூடுதல் மார்க்.
ஹீரோயினை மைய்யப்படுத்திய கதை என்றாலும் கார் இதன் ஹீரோ என்றே சொல்லலாம். காருக்கும் காவல்துறைக்கும் ஒரு கட்டத்தில் நடக்கும் சவால்கள் நம்மை அசையவிடாமல் செய்கிறது.
தற்போது சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை குறித்த விஷயத்தையும் படத்தில் வைத்து சரியாக கதை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் தாஸ் ராமசாமி.
தீம் மீயூசிக், ஓரிரு பாடல்கள் என விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் புதிதாக இருந்தாலும் பேய் படத்திற்கான எஃபெக்டை கொடுத்திருக்கிறார்கள்.

கிளாப்ஸ்

நயன்தாரா இந்த கதையை தேர்வு செய்த போதே தெரிகிறது படம் ஓகே என்று. தம்பி ராமையாவிற்கு நிகராக அவர் செய்யும் காமெடி ரசிக்க வைக்கின்றது.
தம்பி ராமையா எல்லா காட்சிகளிலும் சிரிக்க வைத்து கிளாப்ஸ் அள்ளுகிறார். காருக்காக அவர் செய்யும் அட்டகாசம் சூப்பர்.
படத்தின் சீன்களுக்கேற்றவாறு, திகிலுக்கு ஏற்றபடி பின்ணனியில் வைத்திருக்கும் மியூசிக் சரியான விதம்.

பல்ப்ஸ்

ஒரே ஒரு இடத்தில் லாஜிக் இடித்தாலும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

மொத்தத்தில் நயன்தாரா நடித்துள்ள டோரா குடும்பத்துடன் பார்க்கலாம். நன்றாக எஞ்ஜாய் பண்ணலாம். கார் ட்ரைவ் ஓகே.Dora Movie Public Opinion
Music:

நன்றி  Cineulagam 

சிங்கமில்லாக் காடு

.

தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து, நடிகர் கமல்ஹாசன் எழுதியதாக கவிதை ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த கவிதை தன்னுடையதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிங்கமில்லாக் காடு என்ற பெயரில் நீளும் அந்தக் கவிதையில், ஜெயலலிதா மரணம் குறித்தும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போன்றும் அந்தக் கவிதை அமைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் உலா வரும் அந்தக் கவிதை, தன்னுடையைதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுத்துள்ளார். தான் தவறு செய்திருந்தால் ஒப்புக் கொள்வேன் என்றும், அந்த பதிவு தன்னுடையதல்ல என்றும் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.


புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!

வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்

திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

இலங்கைச் செய்திகள்


அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சர் வட மாகாணத்திற்கு விஜயம்

குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த.!

வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும்: ஆஸி. அமைச்சரிடம் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கோரிக்கை

 "முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது" : மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா?

சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் வட மாகாண முதல்வரை சந்தித்தனர்

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

வருகிறது ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை!

முள்ளிக்குளம் மக்களை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள்



Suga Raagas - 15/04/2017




உலகச் செய்திகள்


சின்னத்திரை நடிகையின் ஜிம் மாஸ்டர் கணவர் தற்கொலை

வடகொரியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தென்கொரியா..! 

 ஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 31 பேர் பலி

சிரியாவில் இரசாயனத் தாக்குதல்? சிறுவர்கள் உட்பட 58 பேர் பலி!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் ஐந்து பேர் பலி!



தமிழ் சினிமா

கவண்


Kavanதமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி,ராஜேந்தர், மடோனா, விக்ராந்த் என நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி கோ போலவே மற்றொரு அரசியல் மற்றும் மீடியா களத்துடன் வெளிவந்துள்ள படம் கவண். கவண் அனைவரையும் கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் சேதுபதி, மடோனா ஆகியோர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்கின்றனர். அந்த தொலைக்காட்சியின் TRP-யை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்க்கின்றனர்.
விஜய் சேதுபதி கற்பூரம் போல் எந்த வேலையாக இருந்தாலும் உடனே செய்து அசத்துகின்றார், அந்த சேனலில் பிரபல கட்சி தலைவர் ஒருவரை எப்போதும் கேலி, கிண்டல் செய்து வெளியிடுகின்றனர்.
அவர் ஒரு கட்டத்தில் அந்த தொலைக்காட்சியுடன் ஒரு டீல் செய்கின்றார், அதிலிருந்து அவர் மீது கலங்கப்படுத்தப்பட்ட தவறுகள் எல்லாம் மீடியா நியாயமாக்குகின்றது.
இதன் பின்னணியில் நல்ல நோக்கத்திற்காக போராடும் விக்ராந்த் மற்று அவரின் காதலி பாதிக்கப்பட, மீடியாவால் நல்லது செய்ய முடியும் என விஜய் சேதுபதி, டி.ஆர் உடன் கூட்டணி அமைத்து ஆடும் ருத்ரதாண்டவம் தான் மீதிக்கதை.