.
ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஆகஸ்டு 27, 28 ம் திகதிகளில் மலேசியாவில் பெனாங் என்னும் இடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதல் தடவையாக நான் கலந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து நானும் ஆழியாளும் சென்றிருந்தோம்.
இந்தப் பெண்கள் சந்திப்பு நிகழ்வுக்கு மையப்புள்ளி போல் செயல்படுகின்றவர் ஊடறு ரஞ்சி. இவர் சுவிசில் இருந்துகொண்டே அனைத்தையும் ஒருங்கிணைத்தார்.
மணிமொழியும் யோகியும் அவருக்குப் பேருதவியாக மலேசியாவிலிருந்து மற்றைய ஒழுங்குகளை மேற்கொண்டனர்.
இலங்கையில் இருந்து யாழினி,
புறொஃபி, விஜயலக்சுமி, கோகிலா, ஷாமிலா,
சந்திரலேகா, பவனீதா, ஜெசீமா ஆகியோரும் இந்தியாவிலிருந்து புதிய மாதவி, மாலதி மைத்ரி,
கல்பனா, ரஜனி, விஜயலக்சுமி,
பாரதி ஆகியோரும் மலேசியாவிலிருந்து மணிமொழி, யோகி, பிரேமா, கஸ்தூரி,
சிவரஞ்சனி, ரமேஸ்வரி ஆகியோரும் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.