உலக செய்திகள்

 .

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் பலி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் இடையில் தொலைபேசி உரையாடல்

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் பலி!



இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர்.

இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்கள், இராணுவத்தின் உத்தரவின் பேரில் காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்களை ஏற்றிச் சென்ற லொரி ஆகியவற்றின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில் சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம், சனிக்கிழமை அதிகாலை, காசா நகரத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவரின் குடும்பத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

இது "மருத்துவர்களை நகரத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதற்காக இயக்கப்பட்ட இரத்தக்களரி பயங்கரவாத செய்தி" என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் இடையில் தொலைபேசி உரையாடல்



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் இடையே வெள்ளிக்கிழமை(நேற்று) தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க வீடியோ செயலியான டிக்டோக்கின் செயற்பாடுகள் தொடர்பில், இறுதி செய்ய உள்ளதாகவும், வர்த்தகம் குறித்தும் விவாதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது, தானும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் டிக்டோக்கின் அமெரிக்க செயற்பாடுகளின் எதிர்காலம் குறித்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் எனும் தளத்தில் குறித்த உரையாடல் பயனுடையதாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒப்பந்தத்திற்கு சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் அனுமதி அளித்ததை டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தின் படி, டிக்டோக்கின் அமெரிக்க வணிகத்தை அமெரிக்க முதலீட்டாளர்கள் குழுவிற்கு விற்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் சீனாவின் அதிகாரப்பூர்வ அரச செய்தி நிறுவனமான சின்ஜுவா அவர்களின் விவாதத்தின் முடிவை தெளிவாகக் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


No comments: