கன்னிநிலை
மாறாத கனி;மொழித் தமிழைக்
கவினியவெம் தாய்மொழியைக் காத்து வளர்த்து
மன்னினின்று காதலொடு மறமும் போற்றி
மானமொடு ஒழுக்கமதை மதித்தே உயிராய்
துன்னும்அறம் ஓங்கவாழ்ந்த தமிழரின் வாழ்வோ
தொன்மைமிகு புகலரிய அழிவிலாச் சரித்திரம்!
பொன்;னனைய
விழுமியங்கள் அத்தனை யுமுலகம்
போற்றிவர வேற்றதிலே ஆச்சரி யமேது?
வருந்தடைகள் அத்தனையும் தகர்த் தெறிந்து
வாழ்க்கையிலே வெற்றிபெற வழிவ குத்து
அருந்துணையாய் அவனுயர்வுக் கிருந்த தெல்லாம்
அலுக்காத விடாமுயற்சியோ டயரா உழைப்புமே!
விருந்தோம்பி வாழ்வதையே உயர்ந்த பண்பாய்
வேட்புடனே கொண்டாடி வியக்கங்;; கொண்டான்!
பெரும்பதவி வகித்தாலும் பேராசை கொளாது
பெற்றவற்றை மனநிறைவொடு பேறாய் ஏற்றான்!
நன்றிமறவா நெஞ்சுறுதி நாளுங் கொண்டு
நானிலத்தில் பிறர்போற்ற நலமாய் வாழ்ந்தான்!
என்றுமவன் எட்டப்பராய் ஏதிலா ராக
இருக்காது இறைதன்னை மனதி ருத்தி
வென்றெதிலும் வெற்றிபெற்றே விருத்தி கண்டான்!
விளையாட்டிற் கென்றாலும் பிறரின் மனமோ
கன்றிடாது புரிந்துணர்வு கவின அணைத்துக்
காசினியில்; திருப்தியாய்க் காதலில் மலர்ந்தான்!
;
புலம்பெயர்ந்து தமிழனின்று புகுந்த நாட்டில்
போற்றிவந்த விழுமியங்கள் காற்றில் அந்தோ
கலந்ததுபோல் மங்கிவரக் காண்கின் றோமே!
காரணந்தான் என்னவென்று கலங்கு கின்றேன்!
அலங்கோலம் சிலவீட்டில் ஆட்சி செய்யும்!
அநியாயம்! விவாகரத்துக்(கு) அளவே இல்லை!
குலவிளக்காய் வளர்த்தெடுத்த பிள்ளைபெற் றோரைக்
கொடுமையம்மா!
கோழையின்றி முதுமை நிலையில்
தலைமுழுகி விட்டதுபோல் முதியோர் இல்லம்
சரியான இடமென்;று சேர்க்கின் றாரே!
மறமும்
- வீரமும்
கவினிய – எழில்மிகு
வேட்பு
- விருப்பம்
வியக்கம் - பெருமை
கவின - சிறக்க
ஏதிலார் - அன்பு இல்லாதவர்
விருத்தி
- இலாபம் (செல்வம்)
கவின - சிறக்க
காசினி – உலகம்
கோடாமை - நேர்மை
கோழை – இரக்கம்
-------------- தொடரும்
No comments:
Post a Comment