.
மீலாதுன் நபி ஆவணத் திரைப்படத்தின் பாடல்களை பிரபல இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சென்னையில் வெளியிட்டார். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன். பாடல்கள் அனைத்தும் மிகவும் பக்தி பரவசத்துடன் இறைவனை நேரில் பார்த்து பாடும் போது வரும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இந்தப் படத்தின் பாடல்களை நண்பர் எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார் மிகவும் புதுமையான முறையில் ஒரு சில இசைக்கருவிகளை வைத்து பாடல்களை இனிமையான மெல்லிசையாக இசையமைத்துள்ளார். பாடல்களை கேட்கும்போது மனதிற்கு இதமாக இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் பாடல்களை பாடகர் சாகுல் அமீது அவர்களின் சகோதரர் சம்சுதீன், நாகூர் ஹனிபாவின் மகன் நௌஷாத், ரஹீமா பேகம், விஜய் டிவி பரிதா ஆகியோர் மிகச் சிறப்பாக பாடியுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இப்படத்தின் பாடல் காணொளிகளையும் பார்த்தேன். பாடல் வரிகள், அதில் வரும் செயற்கை நுண்ணறிவு காட்சிகள் மற்றும் இயக்கம் அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்துள்ளார் நண்பர் மில்லத் அகமது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். இது ஒரு புதிய முயற்சி, இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் வருகிற 31-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. நீங்கள் வந்து பாருங்கள், நானும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் இறையருளால் வெற்றிபெறும் என்று ஸ்ரீகாந்த் தேவா வாழ்த்தினார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. காரணம் இயக்குநர் மில்லத் அகமது பாடல்களில் இசையை இருக்கக் கூடாது, அதே சமயம் பாடல்கள் ஒவ்வொன்றும் பக்தி பரவசத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இதுதான் எனது முதல் இஸ்லாமியப் படத்திற்கு இசையமைக்கிறேன். பிறகு ஒரே ஒரு இசைக் கருவிகளை மட்டும் வைத்து பாடல்களுக்கு இசையமைத்தேன். அப்போதுதான் பாடகர்களாலும் எளிதாக பாட இயலும். மேலும் அவர் கேட்டப்படி அந்தப் பக்தி உணர்வை அனைத்து பாடல்களிலும் கொண்டு வந்துள்ளோம். ரசிகர்களாகிய நீங்கள்தான் பாடல்களைக் கேட்டு உங்கள் ஆதரவை எங்களுக்கு தர வேண்டும் என்று இசை அமைப்பாளர் எஸ்.ஆர். ராம் கூறினார்.
இப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று ஆங்கிலப் பாடல், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவிதமான அனுபவத்தையும், கதையையும் சொல்கிறது. இதில் வரும் பாடல்கள் அனைத்தையும் ஜி6 மூவிஸ் யூடியூப் சேனலில் கண்டு மகிழலாம் என்று இயக்குநர் மில்லத் அகமது தெரிவித்தார். இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண இருக்கிறது.

No comments:
Post a Comment