இந்நிலை ஏனடிசொல் குதம்பாய்! -கவிதை -சங்கர சுப்பிரமணியன்.

 .

நெஞ்சு பொறுக்குதில்லையே
பாரதி சொன்ன வார்த்தைகளை
நினைக்கையிலே நெஞ்சு பொறுக்குதில்லையே

சிலர் அந்த மரத்தில் என்றார்
இந்த குளத்தில் என்றார்
சொன்னதை மறந்து விட்டார்
அது எந்த மரம் அது எந்த குளம்
என்று என்னையே திரும்ப கேட்டார்

வஞ்சகப்பேய்கள் என்றார்
அது வாழ்வது இங்கே என்றார்
எங்கென்று இன்று கேட்டால்
வஞ்சகப்பேய்களா என்று கேட்டார்

காலங்கள் மாறக் கண்டேன்
குதிரை கழுதையாக கண்டேன்
பரிணாம வளர்ச்சி இதுதானோ                        

பதைக்கிறதே இதையும் எண்ணி

ஐந்து தலை பாம்பென்பார்
ஆறுதலை என்று சொன்னால்
நெடுநாள் பகை வளர்த்து நிற்பார்
இந்நிலை ஏனடி சொல் குதம்பாய்!

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: