.
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்
- சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ
முத்து நகர் விவசாயிகள் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்
செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை - சமல் ராஜபக்ச
திட்டவட்டம்
எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்
மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது
news 01
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்
- சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ
.jpg)
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்
என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.
பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள
கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும்
பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும்
கருத்து தெரிவிக்கையில்,
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு
செய்வது அவசியமாகும்.
அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும்
சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும்
பாதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த
விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி
முறைமையை விரிவாக்குவது அவசியமாகும்.
95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான
முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும்
கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ
மேலும் தெரிவித்தார்.
news 02
முத்து நகர் விவசாயிகள் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்.jpg)
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் நேற்று (25) சனிக்கிழமையுடன் 39 ஆவது
நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக
நடாத்தி வருகின்றனர்.
தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார்
நிறுவனங்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து அன்றாட ஜீவனோபாயத்தை
இழந்த நிலையில் போராடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் விவசாயிகள் தங்கள் ஆதங்கங்களை தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள பிரதியமைச்சர் ஒருவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி
விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார்.
விவசாய நீர்ப்பாசன குளங்களை அழித்தும் பொய்களை கூறி வருவதுதானா இவர்களின்
சிஷ்டம் சேன்ஜ் எனவும் தெரிவிக்கின்றனர்.
news 03
செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை - சமல் ராஜபக்ச
திட்டவட்டம்.jpg)
பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரி இஷாரா
செவ்வந்தியை வெளிநாட்டில் வைத்து இலங்கைப் பொலிஸ் படை கைது செய்ததை நாம்
வரவேற்கின்றோம். இந்த இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித
தொடர்பும் இல்லை.- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்
சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இஷாரா செவ்வந்தியிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்த வேண்டும். பாதாள
உலகக் குழுவினர் தமது விருப்பப்படி இஷாரா செவ்வந்தியை இயக்கியுள்ளனர்.
அவரைச் சும்மா விட முடியாது. அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரினதும்
பெயர் விவரங்களையும் அரசு வெளியிட்டு அவர்களைக் கைது செய்து சிறையில்
அடைக்க வேண்டும்.
இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சமூக
ஊடகங்களில் வெளிவரும் போலித் தகவல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்."
- என்றார்.
news 04
எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்
எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல்
பாதுகாவலர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று நாடு திரும்பினர்.
எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை
கப்பல் பாதுகாவலர்களை (Naval Guards) விடுவித்துக் கொள்ள வெளிநாட்டு
அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை
எடுத்தது.
Seagull Maritime நிறுவனத்திற்குச் சொந்தமான ஐரோப்பிய கப்பல் ஒன்று,
அஸர்பைஜான் கப்பற்தளபதியின் தலைமையில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது,
எரித்திரிய கடல் பகுதிக்குள் நுழைந்ததால், அதில் பணிபுரிந்த 6 மாலுமிகள்
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 ஆம் திகதி முதல் அந்நாட்டு
அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை விடுவிப்பதற்காக பல உயர்மட்டத் தலையீடுகள் செய்ய
வேண்டியிருந்ததுடன், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம் இதற்கான
ஒருங்கிணைப்பை வழங்கியது.
இலங்கை பாதுகாப்புப் படையில் பணியாற்றியுள்ள இந்த இலங்கையர்களை
விடுவிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் நேரடியாக தலையிட்டு தேவையான
ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
அமைச்சரின் இராஜதந்திரத் தலையீட்டின் பேரில், 6 இலங்கை மாலுமிகளும்
நேற்று (24) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த 6 மாலுமிகளை வரவேற்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக
விவகாரப் பிரிவு மற்றும் ஆபிரிக்க விவகாரப் பிரிவின் அதிகாரிகள்
கலந்துகொண்டதுடன், வந்தடைந்த அறுவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகத்
தெரிவிக்கப்படுகிறது
news 05
மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது
.jpg)
யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில்
மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில்,
பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ள
நிலையில் அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய
அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட
நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப்
புறப்பட்டுள்ளது.
நன்றி
ATBC
.jpg)
No comments:
Post a Comment