இலங்கைச் செய்திகள்

 யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி பாராட்டு

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம் இனரீதியானதல்ல - அமைச்சர் உபாலி பன்னிலகே

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை!

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு !

அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து விகாரை விவகாரத்திற்கு தீர்வை விரைவில் முன்வைப்பதாக தெரிவிக்கின்றார் - ஆனால்இங்கே புதிய கட்டிடத்தை திறக்கின்றனர் - தமிழ் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் - தையிட்டிகாணி உரிமையாளர்


யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

21 Mar, 2025 | 09:37 AM

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தனர். அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேட்சை குழுக்களும் நியமன பத்திரத்தை தாக்கல் செய்தனர். 

அதில் 114 கட்சிகளினதும், 10 சுயேட்சை குழுக்களினதும், நியமன பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 22 கட்சிகளுடையதும், 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. யாழ் . மாநகர சபையில் தமிழ் மக்கள் கூட்டணி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  ஈரோஸ் ஆகிய கட்சிகளினதும், ஞானப்பிரகாசம் சுலக்சன் , கௌசல்யா நரேந்திரன் ஆகியோரின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.வல்வெட்டித்துறை நகர சபையில், இராமச்சந்திரன் சுரேன் மற்றும் யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோரது சுயேட்சை குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நகர சபையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியினுடையதும், மகாலிங்கம் சதீஸ் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகியவற்றில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் துரைராசா சுஜிந்தனின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் சபரிமுத்து ஸ்டாலின் என்பவரது சுயேச்சை குழு நிராகரிக்கப்பட்டுள்ளது.  

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில், ஸ்ரீலங்கா கம்பினியுஸ் கட்சியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிக்காமம் கிழக்கு பிரதேச சபையில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி தென்மேற்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் , தவம் தவநிலைதாசன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் ரெஜி ராஜேஸ்வரன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையில் வைத்திலிங்கம் ஜெகதாஸ் மற்றும் குணரட்ணம் குகானந்தன் ஆகியோரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளினதும் , திலீப் ஜீவரஞ்சன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபைகளில் அனைத்து நியமன பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 






எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

Published By: Digital Desk 2

20 Mar, 2025 | 04:52 PM

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை வியாழக்கிழமை (20) கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளுக்கே வேட்பு மனுக்களை கையளித்துள்ளோம். ஏனைய தீவகம் உள்ளிட்ட 06 சபைகளில் போட்டியிடவில்லை.

யாழ். மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தின் கட்சிக்கே எமது ஆதரவை வழங்குவோம். அவர்களுக்கே வாக்களிக்குமாறு கோருவோம்.

தற்போதுள்ள தமிழ் தலைமைகளில் கஜேந்திரகுமார் பென்னம்பலமே விலை போகாதவராக இருக்கின்றார் எனவே அவருக்கே எமது ஆதரவை வழங்குவோம்.

ஆட்சியில் உள்ளவர்கள் எம்மை பார்த்து பயப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் கூறாத விடயத்தை கூறியதாக கூறி எனது உரைகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்கள். 

அதேபோன்று எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் கோரிய போதிலும் எனக்கான பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். எனது உயிருக்கு சிறுபான்மை இனத்தவர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை வியாழக்கிழமை (20) கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளுக்கே வேட்பு மனுக்களை கையளித்துள்ளோம். ஏனைய தீவகம் உள்ளிட்ட 06 சபைகளில் போட்டியிடவில்லை.

யாழ். மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தின் கட்சிக்கே எமது ஆதரவை வழங்குவோம். அவர்களுக்கே வாக்களிக்குமாறு கோருவோம்.

தற்போதுள்ள தமிழ் தலைமைகளில் கஜேந்திரகுமார் பென்னம்பலமே விலை போகாதவராக இருக்கின்றார் எனவே அவருக்கே எமது ஆதரவை வழங்குவோம்.

ஆட்சியில் உள்ளவர்கள் எம்மை பார்த்து பயப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் கூறாத விடயத்தை கூறியதாக கூறி எனது உரைகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்கள். 

அதேபோன்று எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் கோரிய போதிலும் எனக்கான பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். எனது உயிருக்கு சிறுபான்மை இனத்தவர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 





அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி பாராட்டு

21 Mar, 2025 | 01:19 PM
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர வலயத்தை பாதுகாத்து அமைதியான இந்து சமுத்திர வலயத்தை பேணுவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் அட்மிரல் பபாரோ பாராட்டினார். 

இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு  இடையில் காணப்படும் வலுவான தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவும், இலங்கை அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ளவும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாக அட்மிரல் ஜே.பபாரோ தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு துறையின் மனித வள அபிவிருத்திக்கு ஐக்கிய அமெரிக்காவினால்  ஆரம்ப காலத்திலிருந்து இதுவரையில் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது நன்றி தெரிவித்தார். 

வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) லெப்டினன் கேணல் அன்டனி நெல்சன், ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் சிரேஷ்ட வௌிநாட்டு கொள்கை ஆலோசகர் டேவிட் ரென்ஸ் (David Ranz) உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். 


நன்றி வீரகேசரி 





அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம் இனரீதியானதல்ல - அமைச்சர் உபாலி பன்னிலகே

Published By: Digital Desk 2

20 Mar, 2025 | 07:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை இன ரீதியாக பார்ப்பது முற்றிலும் தவறானது. தீவிரமான  பரிசீலனைக்கு அமைவாகவே சபாநாயகர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதற்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த பாராளுமன்றத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்,  ஆர்.சம்பந்தன் ஆகிய சிரேஷ்ட அரசியல்  தலைவர்கள் இருந்துள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் பதவி வகித்துள்ளார்கள். தேசிய ரீதியான பிரச்சினைகள் தோற்றம்  பெறும் போது நடுநிலையாக இருந்தும் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்கள் மீது எமக்கு சிறந்த கௌரவம் உள்ளது.

பாராளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம்  சக  பிரதிநிதிகளிடம் இணக்கமாகவே செயற்படுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில்  சபாநாயகர் அண்மையில் விசேட அறிவிப்பை சபையில் விடுத்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் எமது சிரேஷ்ட  சக உறுப்பினராக  எஸ். சிறிதரன் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

எமது சக  பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது எமக்கு அதீத கௌரவம் உள்ளது. ஆகவே இந்த  விடயத்தை இனரீதியாக பார்க்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். யார் தவறிழைத்தாலும் அதற்கான பிரதிபலனை பெற வேண்டும்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சபாநாயகர்  தீவிரமாக ஆராய்ந்து, அவரது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களுக்கு அமைவாகவே  தீர்மானம் எடுத்துள்ளார்.இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட  கவனம் செலுத்தியுள்ளது என்றார்.  நன்றி வீரகேசரி 





யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை!

20 Mar, 2025 | 05:40 PM
image

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வணக்கஸ்தலங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் வீடுகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதால் கல்வி கற்கும் மாணவர்கள் வயோதிபர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்கள் உட்பட பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வணக்கஸ்தலங்கள் மற்றும் ஒலி வழங்குநர்கள் குறித்த பிரதேசத்திற்குள் ஒலி எழுப்புவதற்கு இனி மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த அறிவிப்பு வடமராட்சிகிழக்கு  பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தியால் விடுக்கப்பட்டு அனைத்து பிரதேசங்களிலும் சுவரொட்டி மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி 







கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு !

22 Mar, 2025 | 12:28 PM
image

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் மற்றும்  பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை (22) மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திட்டனர்.

பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  கடந்த 15 ம் திகதி சைச்சாத்திடப்பட்டது. 

இதனையடுத்து, எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர்.   

இந்தநிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானதையடுத்து, பிரிந்திருந்த கருணா - பிள்ளையான் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 





அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து விகாரை விவகாரத்திற்கு தீர்வை விரைவில் முன்வைப்பதாக தெரிவிக்கின்றார் - ஆனால்இங்கே புதிய கட்டிடத்தை திறக்கின்றனர் - தமிழ் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் - தையிட்டிகாணி உரிமையாளர்

Published By: Rajeeban

23 Mar, 2025 | 11:17 AM
image

அனுரஅரசாங்கத்தின் அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் தீர்வை தருவதாக சொல்லியுள்ள அதே சந்தர்ப்பத்தில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் புதிய கட்டிட திறப்பு இடம்பெறவுள்ளது இது வேதனைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள காணி உரிமையாளர் சாருஜன் பத்மநாதன் தமிழ் மக்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்த போராட்டத்தை போய தினத்தின்தான் நடத்திக்கொண்டிருந்தோம் , போராட்டம் வலுப்பெற்ற நிலையில அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத நிலையில, யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் 20 ம் திகதி எங்களை அழைத்து,இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார். 

பௌத்த சாசன அமைச்சர்.அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார், அவர் அங்கு தெளிவாக சொல்லியிருந்த விடயம் மக்களின்காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று.இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம்.

இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள் இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என  அவர் சொல்லியுள்ள நிலையில  அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம்,

மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும் , சகல மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.   நன்றி வீரகேசரி 




No comments: