விஜய தசமி வெற்றியின் திருநாள் !

 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண். .. அவுஸ்திரேலியா

விஜய தசமி வெற்றியின் திருநாள்
வீரம் செல்வி  கல்வி வரட்டும்
ஈரம் இரக்கம் ஈகை வரட்டும்
எல்லோர் வாழ்வும் மலர்ச்சி பெறட்டும்

துன்பம் துயரம் தொலைந்து போகட்டும்
இன்பம் மகிழ்வு எங்கும் நிறையட்டும்
அன்பும் அறனும் அகத்தில் அமரட்டும்
அனைவர் வாழ்வும் ஆனந்தம் ஆகட்டும்

பகைமை என்பது பறந்தே போகட்டும்
உறவு என்றுமே ஓங்கி வளரட்டும்
பணிவு மனமதில் பதிந்து நிற்கட்டும்
பாரில் தீமைகள் மடிந்து போகட்டும்

கல்வி ஓங்கட்டும் கலைகள் வளரட்டும்
கடமை கண்ணியம் கருத்தில் அமரட்டும்
செல்வம் நிறையட்டும் வறுமை ஒழியட்டும்
நல்ல விஷயங்கள் எங்கும் பெருகட்டும்

அறிவொடு அமைதி எங்கும் நிறையட்டும்
அறியாமை என்பது அகன்றே போகட்டும்
அகிலத்தில் ஆனந்தம் பொங்கி வழியட்டும்
ஆண்டவன் நினைப்பை அகத்தில் அமர்த்துவோம் 





No comments: