1970ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில்
தயாரிப்பாளராகவும், டைரக்டராகவும் நுழைந்தவர் சித்திரமஹால் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் மருந்துக்கு கடை ஒன்றை நடத்தி வந்த இவர் எப்படியோ சினிமாவுக்கு வந்து விட்டார். வந்தவர் செல்லப்பெண் , ஓடும் நதி என்று இரண்டு படங்களைத் தயாரித்து விட்டு பின்னர் தேன் கிண்ணம், ஹலோ பார்ட்னர் என்று இரண்டு படங்களை தயாரித்து இயக்கினார். இப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து உங்கள் விருப்பம் என்ற படத்தை தன்னுடைய சித்ரமஹால் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார்.
ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் இன்றி தவித்துக் கொண்டிருந்த பஞ்சு
அருணாசலத்தின் திறமையை அடையாளம் கண்டு முதன் முதலில் அவருக்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பை தனது ஹலோ பார்ட்னர் படத்தின் மூலம் தந்தவர் கிருஷ்ணமூர்த்தி . இதன் காரணமாக இவரின் கல்யாணமாம் கல்யாணம், சண்முகப்பிரியா, உங்க வீடு கல்யாணம் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி திரைத்துறையில் தன்னை ஓரளவு நிலை நிறுத்திக் கொண்டார் பஞ்சு அருணாசலம்.

கிருஷ்ணமூர்த்தி படம் எடுத்தால் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரே சந்தோசம். காரணம் அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் நகைச்சுவைப் படங்கள்தான். இதனால் ஏராளமான காமெடி நடிகர்கள் இவரின் படங்களில் நடிப்பார்கள். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வகையில் 1974ம் வருடம் அவர் தயாரித்து இயக்கிய படம் தான் உங்கள் விருப்பம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாரானது.
படத்தின் ஹீரோ ஜெய்சங்கர். அவருக்கு ஜோடி ஜெயசித்ரா. இவர்களுடன் தேங்காய் சீனிவாசன்,மனோரமா, கே ஏ தங்கவேலு, வி கே ராமசாமி, சசிகுமார், எம் ஆர் ஆர் வாசு , சி ஐ டி சகுந்தலா, வி கோபாலகிருஷ்ணன், எஸ் ராமராவ், எஸ் என் லஷ்மி, ஒரு விரல் கிருஷ்ணராவ், என்று ஒரு கோஷ்டியே படத்தில் இடம் பெற்றது. இதன் காரணமாக படம் முழுவதும் ஒரே கலகப்பாகவும், ரகளையாகவும் இருந்தது.
படத்தில் தேங்காய் சீனிவாசன் பெண் வேடத்தில் பாட்டு டீச்சராக வந்து கலக்குகிறார். மனோரமாவுடன் டூயட் பாடுகிறார். பெண் வேடத்தில் இருக்கும் தேங்காய் மீது சபலப்படும் தங்கவேலு அவருக்கு திருட்டுத் தாலி கட்டி விடுகிறார். இவர்களின் கூத்து ஒரு புறம் இருக்க ஜெய்சங்கரும், தேங்காயும் ஒரு தலையை கூடையில் வைத்துக் கொண்டு வி கே ராமசாமியை மிரட்டி அட்டகாசம் பண்ணுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் எம் ஆர் ஆர் வாசு சாமியார் வேடத்தில் வந்து ரகளை செய்கிறார். எல்லாமே தமாஷ்தான்!
பாதிப் படம் பஞ்சு என்று பேர் பெற்றிருந்த பஞ்சு அருணாசலத்துக்கு
1974 நல்ல ஆண்டாக அமைந்தது. அவர் எழுதிய கல்யாணமாம் கல்யாணம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப் படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. நகைச்சுவை படங்களுக்கு பஞ்சு பெஸ்ட் என்ற பேரும் அவருக்கு கிட்டியது. அவர் எழுதிய நகைச்சுவை வசனங்களும் ரசிகர்களின் வரவேற்பைக் பெற்றது. தான் ஒரு கவிஞனாக இருந்த போதும் படத்துக்கான பாடல்களை எழுதும் வாய்ப்பை தன் குருநாதர் கண்ணதாசனிடம் வழங்கினார் பஞ்சு அருணாசலம். மஞ்சள் பூசி மஞ்சம் வந்த சீதா வா வா , அடேய் அப்பா அடேய் அப்பா பிறந்ததா காதல் இப்போது ஆகிய பாடல்கள் விஜயபாஸ்கர் இசையில் பிரபலமாகின.

சேலத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் படம் தயாரிப்பதை 1974ம் ஆண்டு முதல் குறைத்துக் கொண்டது. அந்த கால கட்டத்தில் அவர்களின் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு ஏதும் நடக்காமல் இருந்த போது ஜெய்சங்கர் தனக்கு வேண்டிய தயாரிப்பாளர்களை அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தும் படி கேட்டுக் கொண்டார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இதனால் குறைந்த செலவில் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள். ஸ்டுடியோவுக்கு வருமானம் கிட்டியது. அந்த வகையில் உங்கள் விருப்பம் படமும் அங்கு உருவானது. படத்தை ஒளிப்பதிவு செய்தவர் தத். படத் தொகுப்பை எல் . பாலு கையாண்டார்.
நகைச்சுவை படம் என்பதால் படம் முழுவதும் கலகப்பாகவே
இருந்தது. சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி படத்தை போர் அடிக்காமல் இயக்கி இருந்தார். இதன் பிறகு மேலும் சில படங்களை இயக்கிய அவர் பின்னர் எம் ஜி ஆரின் அ தி மு க கட்சியில் சேர்ந்து சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார். மறைந்து விட்ட சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியின் தொண்ணூற்று ஏழாவது பிறந்த தினம் செப்டெம்பர் 18ம் திகதியாகும்.

No comments:
Post a Comment