விருந்தாய் அமையும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா


        மலரின் மணமும் 
             புலரும் பொழுதும்
       
உலரும் வேளை 
              பருகும் நீரும்
       
      நிலவின் ஒளியில் 
                தழுவும் துணையும்
          தொடரும் குயிலின்
                  இசையின் இதமும்
         
      தடவும் தென்றல்
                  காற்றின் சுகமும்
            உழவின் வியர்வை
                 உணர்த்தும்  உயர்வும் 
         
     அம்மா உணவும்
        அப்பா அன்பும்
      இணையும் துணையின்
         தொடரும் உறவும்
   

     மழலை முகத்தில்
              விரியும் சிரிப்பும்
         மனத்தை நிறைக்க
               விருந்தா யமையும் ! 


    
            
                
-->
          No comments: