இலங்கைச் செய்திகள்


யாழ் நோக்கி பயணித்த பஸ் விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு, 40 பேர் காயம்

யாழ். சென்ற சிறப்பு சி.‍‍ஐ.டி. குழு மாவை எம்.பி.யிடம் விசா­ரணை

யாழில் கணவன், மனைவி கைது : காரணம் தெரியுமா? பொதுமக்களே அவதானம்

இலங்கையின் நகரொன்றுடன் சகோதர நகராக இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்…!

யாழில் டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகம்யாழ் நோக்கி பயணித்த பஸ் விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு, 40 பேர் காயம்

06/11/2017 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், 40 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பஸ் வண்டியானது அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே இந்த விபத்து இடம்பெற்றிருகலாமென தெரிவிக்கப்படுகின்ற நிலையில் புத்தளம் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 நன்றி வீரகேசரி
 யாழ். சென்ற சிறப்பு சி.‍‍ஐ.டி. குழு மாவை எம்.பி.யிடம் விசா­ரணை

06/11/2017 புங்­கு­டு­தீவு பகு­தியில்  படு­கொலை செய்­யப்­பட்ட மாணவி வித்­யாவின் கொலை தொடர்­பி­லான பிர­தான குற்­ற­வாளி சுவிஸ் குமார் முதலில் கைது­செய்­யப்­பட்ட போது தப்பிச் சென்­றமை தொடர்பில் அவ­ருக்கு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் உதவி செய்த அத்­தனை சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்ய குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழு விசா­ர­ணை­களை  தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.
இது தொடர்பில் ஏற்­க­னவே வட­மா­கா­ணத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித ஜய­சிங்க கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள நிலை­யி­லேயே இந்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அதன்­படி யாழ்ப்­பாணம் சென்ற குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி விசேட விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா தலை­மை­யி­லான சிறப்புக் குழு, யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. 
கடந்த வெள்ளிக்கிழமை குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாணி அபே­சே­க­ரவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பி.ரே.திசே­ரவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 
இதன்போது சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவ­காரம் தொடர்பில் தற்­போதும் தேடப்­பட்­டு­வரும் யாழ். பொலிஸ் நிலை­யத்தில் அப்­பொ­ழுது கட­மை­யாற்­றிய முன்னாள் உப­ பொலிஸ் பரி­சோ­தகர் ஸ்ரீக­ஜனின் வீட்­டையும் விசேட சி.ஐ.டி. குழு சுற்றி வளைத்து தேடுதல் நடத்­தி­யது. 
எனினும் இதன்­போது அவர் அங்­கி­ருக்­க­வில்லை எனவும், பெரும்­பாலும் சட்ட விரோ­த­மாக நாட்டை விட்டு அவர் தப்பிச் சென்று இருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார். 
நேற்று முன்­தி­னமே சுவிஸ்குமார் தப்­பித்த விவ­கா­ரத்தில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி.யிடம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டுள்­ள­துடன்,  விசே­ட­மாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வுக்கும் அவ­ருக்கும் இடை­யி­லான தொடர்­புகள் வித்தியா படு­கொ­லையின் பின்னர் ஊர்­கா­வற்றுறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, கொழும்பு பல்­க­லைக்க­ழ­கத்தின் சட்­டபீட விரி­வு­ரை­யாளர் தமிழ் மாறன் உள்­ளிட்­டோ­ருடன் சேர்ந்து நடத்­திய விசேட மக்கள் சந்­திப்பு தொடர்பில் இவ்­வி­சா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. 
இத­னை­விட தப்­பி­ச்செல்ல முற்­பட்ட சுவிஸ்­கு­மாரை பொதுமக்கள் கட்டி வைத்­தி­ருந்த போது அங்கு இடம்­பெற்­றி­ருந்த சம்­ப­வங்­களை ஒளிப்­ப­திவு செய்த தொலைக்­காட்சி ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரின் சாட்­சியம் உள்­ளிட்ட மேலும் பல சாட்­சி­யங்­க­ளையும் வாக்­கு­மூ­லங்­க­ளையும் விசேட பொலிஸ் குழு பதிவு செய்­துள்­ளது. 
அத்­துடன் பிறிதொரு குற்­றச்­சாட்டு தொடர்பில் சிறை­யி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரி­யான சிந்­தக பண்­டார, சுவிஸ்குமார் ஆகி­யோ­ரிடம் சிறைச்­சா­லைக்குள் வைத்து விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்­புக்­குழு ஊர்­கா­வற்­றுறை நீதி­வானின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளது. 
இந்நிலையில் சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவகாரத்தில் மேலும் சில முக்கிய நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ள தாகவும் விரைவில் அதனோடு தொடர்பு டைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் சுட் டிக்காட்டினார்.  நன்றி வீரகேசரி
யாழில் கணவன், மனைவி கைது : காரணம் தெரியுமா? பொதுமக்களே அவதானம்

07/11/2017 யாழ்ப்பாணத்தில் போலி நாயணத்தாள்களை அச்சிட்டுவந்த கணவன், மனைவி ஆகியேரை இன்று காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவவையடுத்து, யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை - மணியந்தோட்டம்  பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு சுற்றிவளைத்த போதே குறித்த இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது 24 வயதுடைய கணவனும், 19 வயதுடைய மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் , போலிநாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய இரு அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர் இயந்திரம், மடிக்கணினி, 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 400 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் 148 ஆகியவற்றை பொலிஸார்  கைப்பற்றினர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போலிநாணயத்தாள்களில் பெறுமதி 2.06 மில்லியன் ரூபாவென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் போலி நாணயத்தாள்களை அச்சிடும் குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை, போலிநாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதனால், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் போலி நாணயத்தாள்கள் ஏதேனும் கிடைக்குமாகவிருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி


இலங்கையின் நகரொன்றுடன் சகோதர நகராக இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்…! 

07/11/2017 தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். சர்வதேச மன்றங்களில் தென்கொரியாவுக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் சகோதர நகரமொன்றுடன் இணைப்பை ஏற்படுத்த சியோல் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நகரங்களுக்கிடையிலான இத்தகைய இணைப்பு நகர அபிவிருத்தி மூலோபாயங்களை கற்றுக்கொள்ள இருதரப்புக்கும் உதவும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை மற்றும் தென்கொரிய குடியரசுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 40 ஆண்டுகள் நிறைவடைவதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த 40 ஆண்டுகளில் எவ்வாறான பலமான உறவுகளை கட்டியெழுப்பமுடியும் என்பது குறித்து சிந்திப்பதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்றும் குறிப்பிட்டார்.
சியோல் நகரத்தின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் சாங் வொன் சாம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரியாழில் டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகம்

09/11/2017 யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016 ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கமும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாக கூறி யுள்ளதுடன் நுளம்பிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கின்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 1700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் சுமார் 4700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேசமயம் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்ப ட்டிருக்கின்றது.
மேலும் மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போது யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகிவருகின்றது.
இந்நிலையில் நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது.
எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது. உதாரணமாக மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெறமுடியாதுள்ளது. எனவே அந்த மீன் குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவலாம். அதேபோல் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்கவேண்டும் என பணிப்பாளர் மேலும் கேட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி

No comments: