உலகச் செய்திகள்


வடகொரியாவிற்கு கடிவாளம் இடுவதில் கணிசமான முன்னேற்றத்தை நாம் கண்டுள்ளோம்

மத்திய தரைக்கடல் பயணத்தில் 2,839 பேர் உயிரிழப்பு : 26 பெண்களின் சடலங்கள் மீட்பு





வடகொரியாவிற்கு கடிவாளம் இடுவதில் கணிசமான முன்னேற்றத்தை நாம் கண்டுள்ளோம்

08/11/2017 வடகொரியாவானது உலகளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அச்சுறுத்தலாக உள்ளது, இருப்பினும் வடகொரியாவிற்கு கடிவாளம் இடுவதில் கணிசமான முன்னேற்றத்தை நாம் கண்டுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.


தென் கொரிய சியோல் நக­ருக்கு விஜயம் செய்­துள்ள ட்ரம்ப் அந்­நாட்டு ஜனா­தி­பதி மூன் ஜே இன்­னுடன் இணைந்து  ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே  இவ்­வாறு தெரி­வித்தார்.
அதே­ச­மயம் வட கொரியா முழு­மை­யான அணு­சக்தி வல்­ல­மையைப் பெறு­வதை நோக்கி  தொடர்ந்து செல்­லு­மாயின்,  அந்­நாட்­டுக்கு எதி­ராக முழு­மை­யான இரா­ணுவ பலத்தைப் பிர­யோ­கிக்க அமெ­ரிக்கா தயா­ரா­க­வுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.
ஆனால் வட கொரியா  இது தொடர்பில் உடன்­ப­டிக்­கை­யொன்றை மேற்­கொள்ள பேச்­சு­ வார்த்தை மேசைக்கு வரு­மாயின் அது அந்­நாட்டு மக்­க­ளுக்கும் உலக மக்­க­ளுக்கும் நன்­மை­ய­ளிப்­ப­தாக அமையும் என ட்ரம்ப் மேலும் கூறினார்.
வட கொரியா உல­க­ளா­விய ரீதியில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டப்­படும் உலக அச்­சு­றுத்­த­லொன்­றா­க­வுள்­ள­தாக அவர்  குறிப்­பிட்டார். “நாம் வட கொரி­யாவைக் கையாள்­வதில் பெரு­ம­ளவு முன்­னேற்­றத்தை கண்­டுள்ளோம்.  இந்த விவ­கா­ரத்தில் சீன ஜனா­தி­பதி பெரும் உத­வி­யா­க­வுள்ளார்" என அவர் தெரி­வித்தார். ட்ரம்ப் ஜப்­பா­னுக்­கான சுற்றுப் பய­ணத்தை பூர்த்­தி­செய்­த­தை­ய­டுத்தே  தென் கொரி­யா­வுக்கு விஜயம் செய்­துள்­ளமை  குறிப்­பி­டத்­தக்­கது.
 ட்ரம்ப் முன்னர் கருத்து வெளி­யி­டு­கையில், தென் கொரியா, வட கொரி­யாவை திருப்­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
அத்­துடன் அமெ­ரிக்­கா­வுக்கும் தென் கொரி­யா­வுக்­கு­மி­டையில் மேற்­கொள்­ளப்­பட்ட சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை குறித்தும் அவர்  முன்னர்  கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தென் கொரியாவுக்கான ட்ரம்பின் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் பல பிராந்தியங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.  நன்றி வீரகேசரி











மத்திய தரைக்கடல் பயணத்தில் 2,839 பேர் உயிரிழப்பு : 26 பெண்களின் சடலங்கள் மீட்பு

08/11/2017 மத்திய தரைக்கடலில்  கண்டெடுக்கப்பட்ட 26  பெண்களின் சடலங்கள் தொடர்பில்  இத்தாலி அரசு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு  அடைக்கலம் தேடி  ஆபத்தான  கடல் வழிப்  பயணங்களை மேற்கொள்ளும்  அகதிகள்  பல பொழுதுகளில் விபத்தில் சிக்கி  பெருமளவில் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில்  மத்திய தரைக்கடலில் 26 இளம் பெண்களின் உடல்களை  இத்தாலி அரசின் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இதில் 14 முதல் 18 வயது வரை கொண்ட அந்தப் பெண்கள் நைஜர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இந்த ஆபத்தான கடல் பாதையில் பயணித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

படகு மூழ்கியதால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று பொதுவாக கூறப்பட்டாலும்,அவர்களின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம்  இன்னும் வெளியாகவில்லை.   இந்த உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அது தொடர்பான விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என  அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரையில்  2,839  பேர் ஆபத்தான மத்திய மத்திய தரைக்கடல்  பயணத்தின் போது  உயரிழந்துள்ளதாக  இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 150,982  பேர்  இந்த கடல் வழிப்பயணங்கள் மூலம்  ஐரோப்பிய கடற்கரைகளை அடைந்துள்ளனர் என்றும்  கூறப்படுகின்றது.  நன்றி வீரகேசரி





No comments: