மெல்பனில் இலக்கியச்சந்திப்பு - வாசிப்பு அனுபவப்பகிர்வு

.


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில்
 VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில்  மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.
கருத்துரை
இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. 'செங்கதிரோன்' த. கோபாலகிருஷ்ணன் "கிழக்கிலங்கை கலை, இலக்கியச்  செல்நெறி" என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.
வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் தொடர்ச்சியாக நடத்திவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் இம்முறை மூன்று நூல்கள் இடம்பெறுகின்றன.
வானத்தைப்பிளந்த கதை ( செழியன் எழுதியது) ஈழப்போராட்ட நாட்குறிப்பு - விமர்சனஉரை: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
நைல்நதிக்கரையோரம் ( நடேசன் எழுதியது) பயண இலக்கியம் - அறிமுகவுரை சாந்தி சிவக்குமார்.
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - (பெருமாள்முருகன் எழுதியது )    நாவல் - மதிப்பீட்டுரை :  நடேசன்.
கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்நிகழ்ச்சியைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெறும். சங்கத்தின் உறுப்பினர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
Email:     atlas25012016@gmail.com             Web: www.atlasonline.org


No comments: