உலகச் செய்திகள்


ஐ.எஸ்.ஸுக்கு எதி­ரான சண்­டையில் கள­மி­றங்­கி­யது ஈரான்

ஆப்­கா­னிஸ்­தானில் பொலிஸ் தலை­மை­யகம் மீது தலிபான் தீவி­ர­வா­திகள் தாக்­குதல் ; 20 பேர் பலி

படங்கள்: இந்தியாவில் கடும் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக அதிகரிப்பு

படு­கொலைத் தாக்­கு­தலில் மயி­ரி­ழையில் உயிர்தப்­பிய லிபிய பிர­தமர் அல்– தின்னி : மெய்ப்­பா­து­கா­வலர் காயம்












ஐ.எஸ்.ஸுக்கு எதி­ரான சண்­டையில் கள­மி­றங்­கி­யது ஈரான்

25/05/2015 ஈராக்கில் இஸ்­லா­மிய தேச (ஐ.எஸ்.) பயங்­க­ர­வா­தி­க­ளுடன் சண்­டை­யிட்டு வரும் அந்த நாட்டுப் படை­யி­ன­ருக்குப் பக்­க­ப­ல­மாக ஈரான் வீரர்கள் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.



இது­கு­றித்து அமெ­ரிக்க இரா­ணுவ அதி­கா­ரிகள் வெள்­ளிக்­கி­ழமை கூறி­ய­தா­வது:
கடந்த சில நாட்­க­ளாகஇ ஈராக்கின் பீஜி எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலையை ஐ.எஸ். தீவிரவா­தி­க­ளி­ட­மி­ருந்து மீட்­ப­தற்­கான தாக்­குதல் நட­வ­டிக்­கை­களை ஈராக் ஷியா பிரிவுப் படை­யினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்குப் பக்­க­ப­ல­மாகஇ குறைந்த எண்­ணிக்­கை­யி­லான ஈரான் நாட்டு வீரர்கள் சண்­டையில் ஈடு­பட்­டுள்­ளனர்.
தொலை­தூர எறி­குண்­டுகள்இ சிறிய வகை ஏவு­க­ணை­களைக் கொண்டும்இ கன­ரக ஆயு­தங்­களைக் கொண்டும் ஐ.எஸ். நிலைகள் மீது ஈரான் வீரர்கள் தாக்­குதல் நிகழ்த்தி வரு­கின்­றனர்.
மேலும்இ ஈராக் வீரர்­க­ளுக்கு உத­வி­யாக ஆளில்லா உளவு விமா­னங்­களைக் கொண்டு தக­வல்கள் சேக­ரித்துத் தரு­கின்­றனர் என்று அந்த அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

எனினும் பீஜி சுத்­தி­க­ரிப்பு ஆலை மீட்பு நட­வ­டிக்­கைகள் குறித்த அமெ­ரிக்­காவின் அதி­கா­ரப்­பூர்வ அறிக்­கையில்இ ஈரானின் பங்­கேற்பு குறித்து குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. குவைத்­தி­லுள்ள அமெ­ரிக்க இரா­ணுவ தலை­மை­யகம் இது­கு­றித்து வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:
பீஜி சுத்­தி­க­ரிப்பு ஆலைப் பகு­தியில் தொடர்பு துண்­டிக்­கப்­பட்ட ஈராக் இரா­ணு­வத்­தி­ன­ருடன் மீண்டும் தொடர்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு உத­வி­யாக ஆயு­தங்­களும்இ கூடுதல் வீரர்­களும் அனுப்­பப்­பட்­டுள்­ளனர் என்று அறிக்­கை யில் கூறப்­பட்­டுள்­ளது.
ஈராக் போரில் ஈரான் வீரர்கள் பங்­கேற்­றது குறித்து செய்­தி­யா­ளர்கள் கேட்­ட­தற்கு அது­கு­றித்து கருத்துக் கூற குவைத்­தி­லுள்ள அமெ­ரிக்க இரா­ணுவத் தள­பதி மறுத்­து­விட்டார்.
ஈராக் போரில் ஈரான் கள­மி­றங்­கு­வது அமெ­ரிக்­கா­வுக்கு கவ­லை­ய­ளித்­தாலும் ஈராக்கின் அனு­ம­தி­யுடன் அவர்கள் சண்­டையில் ஈடு­ப­டும்­வரை அமெ­ரிக்கா ஆட்­சேபம் தெரி­விக்­காது என அதி­கா­ரிகள் கூறினர்.

ஈராக்கின் முக்­கிய எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை­களில் ஒன்­றான பீஜி ஆலையின் கணி­ச­மான பகு­தியை ஐ.எஸ். பயங்­க­வா­திகள் அண்­மையில் கைப்­பற்­றினர். ஐ.எஸ். இடம் இழந்த ரமாடி நகரை மீட்கும் நோக்கில் முன்­னேறி வரும் ஈராக்­கிய இரா­ணுவம் அந்த நக­ரை­யொட்­டிய பகு­தியை அந்த அமைப்­பி­ட­மி­ருந்து சனிக்­கி­ழமை மீட்­டது.  நன்றி வீரகேசரி 







ஆப்­கா­னிஸ்­தானில் பொலிஸ் தலை­மை­யகம் மீது தலிபான் தீவி­ர­வா­திகள் தாக்­குதல் ; 20 பேர் பலி

27/05/2015 தென் ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள பொலிஸ் தலை­மை­ய­க­மொன்றின் மீது செவ்­வாய்க்­கி­ழமை தாக்­கு­தலை நடத்­திய தலிபான் தீவி­ர­வா­திகள்இ 20 க்கு மேற்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களை கொன்­றுள்­ளனர்.

ஹெல்மண்ட் மாகா­ணத்­தி­லுள்ள 3 பிர­தே­சங்­களில் பாது­காப்பு உத்­தி­யோ­கத் ­தர்­க­ளுக்கும் தலிபான் தீவி­ர­வா­தி­க­ளுக்­கு­மி­டையே தொடர்ந்து மோதல்கள் இடம்­பெற்று வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

பிராந்­தி­யத்­தி­லுள்ள 3 இரா­ணுவ சோத­னைச்­சா­வ­டி­களை கைப்­பற்­றி­யுள்ள தீவி­ர­வா­திகள் மாவட்ட தலை­மை­ய­கங்­களை சுற்றி வளைத்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
மேற்­படி தாக்­கு­தல்­களில் பலியானவர் களில் 13 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 7 இராணுவ உத்தியோகத்தர்களும் உள்ள டங்குகின்றனர்.   நன்றி வீரகேசரி 









படங்கள்: இந்தியாவில் கடும் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக அதிகரிப்பு


27/05/2015 இந்தியாவில் ஆந்திரபிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக உயர்வடைந்துள்ளது.

ஆந்திரபிரதேஷில் 852 பேரும் தெலுங்கானாவில் 266 பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





நன்றி வீரகேசரி 











படு­கொலைத் தாக்­கு­தலில் மயி­ரி­ழையில் உயிர்தப்­பிய லிபிய பிர­தமர் அல்– தின்னி : மெய்ப்­பா­து­கா­வலர் காயம்

28/05/2015 லிபிய பிர­தமர் அப்­துல்லாஹ் அல் –தின்னி படு­கொலை முயற்­சி­யொன்றில் மயி­ரி­ழையில் உயிர் தப்­பி­யுள்ளார். தோபுருக் நகரில் அவர் பயணம் செய்த கார் மீது துப்­பாக்­கி­தா­ரிகள் சூட்டை நடத்­தி­யுள்­ளனர்.

நகரில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றக் கூட்டத் தொடரில் பங்­கேற்று விட்டு பிர­தமர் திரும்பிக் கொண்­டி­ருந்த போதே அவ­ரது கார் மீது துப்­பாக்கி வேட்­டுகள் தீர்க்­கப்­பட்­டுள்­ளன. இதன் போது துப்­பாக்கி ரவைகள் அவ­ரது காரின் மேற்­ப­ரப்பை துளைத்துச் சென்­றுள்­ளன.

இந்த சம்­ப­வத்தில் பிர­தமர் எது­வித காய­மு­மின்றி உயிர் தப்­பி­யுள்ள போதும், அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர்களில் ஒருவர் காய­ம­டைந்­துள்ளார். 2011 ஆம் ஆண்டு மும்மர் கடாபி ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட பின்னர் லிபியா அர­சியல் குழப்ப நிலையை எதிர்­கொண்­டுள்­ளது.
அல்–தின்னி 2014 ஆம் ஆண்டில் போரா­ளி­களால் தலை­ந­க­ரி­லி­ருந்து வெளி­யேறும் நிர்ப்­பந்­தத்­திற்கு உள்­ளான பின்னர், தோபுருக் நக­ரி­லி­ருந்து ஆட்­சியைத் தொடர முயற்­சித்து வரு­கிறார்.
இந்­நி­லையில் அல் – தின்­னியின் ஆட்­சிக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தோபு­ருக்கி­ லுள்ள பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்­திற்கு வெளியே மக்கள் செவ்­வாய்க்­கி­ழமை எதிர் ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதன்போது அந்தக் கட்டடத்திற்கு வெளி யேயிருந்த காரொன்று ஆர்ப்பாட்டக்காரர்க ளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி




No comments: