சிட்னியில் திருக்குறள் போட்டிகள் 2014 - 02.03.2014

.


இப் போட்டிகள் மார்ச்  மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டிகளில் (20 மாணவர்களுக்கு குறையாமல் பங்குபற்றியிருந்தால்) முதல் இடங்களைப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசாக 23 - 03 - 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழர் மண்டபத்தில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மாநாட்டில் அளிக்கப்படும்.

நடாத்தப்படும்  போட்டிகளும் பிரிவுகளும்

திருக்குறள் ஓப்புவித்தல் போட்டி

பாலர் ஆரம்ப பிரிவு    (02.03.2009 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)
பாலர் பிரிவு    (02.03.2007 க்கும் 01.03.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்)    கீழ்ப்பிரிவு    (02.03.2005 க்கும் 01.03.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள்)    மத்தியபிரிவு    (02.03.2002 க்கும் 01.03.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்)

 திருக்குறள் கட்டுரைப் போட்டி
மேற்பிரிவு  (02.03.1999 க்கும் 01.03.2002 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
அதிமேற்பிரிவு (01.03.1999 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்)




போட்டிகளுக்கான விண்ணப்படிவம்

போட்டிகளுக்கான விண்ணப்படிவத்தையும் மேலதிக விபரங்களையும் (கீழே தரப்படுள்ளன ) பின்வரும் போட்டிக் குழு அங்கத்தவர்களிடம்   பெற்றுக்கொள்ளலாம்.

திருமதி க ஜெகநாதன்           02 9749 1842
திரு த நந்திவர்மன்        0409 914 365
திரு அன்பு ஜெயா            0423 515 263
திரு கு கருணாசலதேவா        0418 442 674
திரு ப பஞ்சாட்சரம்        0434 006 841
திரு சி தியாகராஜா      0414 631 860
திரு ரவி ஆனந்தராஜா        0424 674 642
திருமதி பிரேமினி அமலன்        0419 252 232

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 01 March 2014 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக Sydney Tamil Ilakkiya Kalai Manram,  21 Rose Crescent,  Regents Park NSW 2143 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது மேற்குறிப்பிட்ட திருக்குறள் போட்டிக் குழு அங்கத்தவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். ஒருநபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக  $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.


விண்ணப்பப் படிவம்
--------------------------------------------------------------------------------------------------------------
திருக்குறள் போட்டி - 2014

கீழே குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகள் மார்ச்  மாதம் 2 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கையம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் நடைபெறும்.

பங்குபற்றுவரின் பெயர்:

பிறந்த திகதி:

பெற்றோரின் பெயர்:

விலாசம்:


தொலைபேசி இலக்கம்:



Email Address:



கீழே பொருத்தமான இடத்தில் புள்ளடி இடுக
----------------------------------------------------------------------------------------------------------------
பிற்பகல் 2 மணி
பாலர் ஆரம்ப பிரிவு
(5 வயதிற்கு கீழ்    02.03.2009 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)           திருக்குறள் ஓப்புவித்தல் போட்டி
---------------------------------------------------------------------------------------------------------------
 பிற்பகல் 2:30 மணி
பாலர் பிரிவு
(7 வயதிற்கு கீழ்    02.03.2007 க்கும் 01.03.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்)            திருக்குறள் ஓப்புவித்தல் போட்டி
----------------------------------------------------------------------------------------------------------------
 பிற்பகல் 3 மணி
கீழ்ப்பிரிவு
(9 வயதிற்கு கீழ்    02.03.2005 க்கும் 01.03.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள்)   
 திருக்குறள் ஓப்புவித்தல் போட்டி
--------------------------------------------------------------------------------------------------------------------
 பிற்பகல் 3:30 மணி
மத்தியபிரிவு
(12 வயதிற்கு கீழ்    02.03.2002 க்கும் 01.03.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்)   
 திருக்குறள் ஓப்புவித்தல் போட்டி
 ------------------------------------------------------------------------------------------------------------------
  பிற்பகல் 3 மணி
மேற்பிரிவு
(15 வயதிற்கு கீழ்    02.03.1999 க்கும் 01.03.2002 க்கும் இடையில் பிறந்தவர்கள்)   
 திருக்குறள் கட்டுரைப் போட்டி
 -------------------------------------------------------------------------------------------------------------------
  பிற்பகல் 3 மணி
அதிமேற்பிரிவு
15 வயதிற்கு மேல்    01.03.1999 இலும் அதன் முன்பும்  பிறந்தவர்கள்   
 திருக்குறள் கட்டுரைப் போட்டி
 --------------------------------------------------------------------------------------------------------------------
நான் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் போட்டி விதி முறைகளுக்கிணங்க நடந்து கொள்வேன்.


-----------------------------------------
பெற்றோரின் கையொப்பம்
திகதி
---------------------------------------------------------------------------------------------------------------------











திருக்குறள் போட்டிகள் 2014

போட்டி விதி முறைகள்

திருக்குறள் மனனப் போட்டி

1.    ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள். நடுவர்களின் தீர்ப்பே முடிவானது.

2.    போட்டியாளர்கள் பங்கு கொள்ளும் ஒழுங்கு சீட்டிழுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.

3.    புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்:
மனனம் செய்யும் திறமை (40 புள்ளிகள்) – தடங்கலின்றி திருக்குறளை ஒப்புவிக்கவேண்டும். மாணவர்கள் திருக்குறளை சரியாக மனனம் செய்திருக்க வேண்டும். மாணவர்கள் ஒப்புவிக்கும் போது கருத்துப் பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்.
உச்சரிப்பு (40 புள்ளிகள்) – மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும். அதாவது சொற்களையும் எழுத்துக்களையும் கேட்பவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் தெளிவாக உச்சரிக்க வேண்டும். கீழ்ப்பிரிவில் மட்டும் மழலை உச்சரிப்பு இருத்தல் பிழையன்று.
சபை மரபு (20 புள்ளிகள்) – சபைக்கு வருதல், சபையில் உள்ளவர்களை விழித்தல், சபைக்கு முன் நிற்றல், சபையை விட்டகலல் என்பவற்றிற்கு வயதிற்கேற்ற பக்குவமும் தமிழர் மரபிற்கேற்ற செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும். ஒப்புவித்து முடித்தவுடன் இயற்கையான முறையில் வணக்கம் தெரிவித்து தனது இருப்பிடம் சென்று அமர்தல் வேண்டும்.

4.    போட்டிகளில் (20 மாணவர்களுக்கு குறையாமல் பங்குபற்றியிருந்தால்) முதல் இடங்களைப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசாக 23 – 03 – 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மாநாட்டில் அளிக்கப்படும்.

திருக்குறள் கட்டுரைப் போட்டி

மேற் பிரிவு மாணவர்கள்;

1.    போட்டியன்று கொடுக்கப்பட்ட குறள் அதன் உரையின் அடிப்படையில் 10 வசனங்களுக்குக் (வாக்கியங்களுக்கு) குறையாமலும் 15 வசனங்களுக்கு மேற்படாமலும் ஒரு கட்டுரை எழுதவேண்டும்.

2.    கட்டுரையில் அடங்கியுள்ள பொருள், அதன் தரத்திற்கு ஏற்ப நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்படும். நடுவர்களின் தீர்ப்பே முடிவானது.

3.    கட்டுரை எழுத 30 நிமிடங்கள் அளிக்கப்படும்.

4.    எழுதுவற்குத் தேவையான தாள்கள் கொடுக்கப்படும். மாணவர்கள் மற்ற உபகரணங்களைக் கொண்டுவரவேண்டும்.

5.    போட்டிகளில் (20 மாணவர்களுக்கு குறையாமல் பங்குபற்றியிருந்தால்) முதல் இடத்தைப் பெற்றவருக்கு தங்கப்பதக்கம் பரிசாக 23 – 03 – 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும்  திருக்குறள் மாநாட்டில் அளிக்கப்படும்.

அதிமேற் பிரிவு மாணவர்கள்:

1.    போட்டியன்று கொடுக்கப்பட்ட இரண்டு குறள்கள் அவற்றின் உரைகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டுரையும் 10 வசனங்களுக்குக் (வாக்கியங்களுக்கு) குறையாமலும் 15 வசனங்களுக்கு மேற்படாமலும் இரண்டு கட்டுரைகள் எழுதவேண்டும்.

2.    கட்டுரையில் அடங்கியுள்ள பொருள், அதன் தரத்திற்கு ஏற்ப நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்படும். நடுவர்களின் தீர்ப்பே முடிவானது.

3.    இரண்டு கட்டுரைகள் எழுத மொத்தம் 60 நிமிடங்கள் அளிக்கப்படும்.

4.    எழுதுவற்குத் தேவையான தாள்கள் கொடுக்கப்படும். மாணவர்கள் மற்ற உபகரணங்களைக் கொண்டுவரவேண்டும்.

5.    போட்டிகளில் (20 மாணவர்களுக்கு குறையாமல் பங்குபற்றியிருந்தால்) முதல் இடத்தைப் பெற்றவருக்கு தங்கப்பதக்கம் பரிசாக 23 – 03 – 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மாநாட்டில் அளிக்கப்படும்.



----------------------------------------------------------------------------------------------------------------

பாலர் ஆரம்ப பிரிவு

திருக்குறள் மனனப் போட்டி
பிற்பகல் 2 மணி 02 – 03 – 2014

கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு குறள்களையும் மனனம் செய்தல் வேண்டும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.



---------------------------------------------------------------------------------------------------------------

பாலர் பிரிவு

திருக்குறள் மனனப் போட்டி
பிற்பகல் 2:30 மணி 02 – 03 - 2014

கீழே கொடுக்கப்பட்ட நான்கு குறள்களையும் மனனம் செய்தல் வேண்டும். அவற்றுள் மூன்று குறள்கள் கேட்கப்படும்.

1.    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடிசேரா தார்.


2.    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


3.    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.


4.    இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

-------------------------------------------------------------------------------------------------------------

கீழ்ப் பிரிவு

திருக்குறள் மனனப் போட்டி
பிற்பகல் 3:00 மணி 02 – 03 - 2014

கீழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்திருத்தல் வேண்டும். அவற்றுள் ஐந்து  குறள்கள் மட்டும் கேட்கப்படும்.

1.    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும.;

2.    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

3.    கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின.;

4.    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

5.    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

6.    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
       தீமை இலாத சொலல்.


-------------------------------------------------------------------------------------------------------------

மத்திய பிரிவு

திருக்குறள் மனனப் போட்டி
பிற்பகல் 3:30 மணி 02 – 03 - 2014

கீழே கொடுக்கப்பட்ட எட்டுக் குறள்களையும் மனனம் செய்திருத்தல் வேண்டும். அவற்றுள் ஆறு  குறள்கள் மட்டும் கேட்கப்படும்.

1.    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

2.    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

3.    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

4.    முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும.;

5.    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

6.    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

7.    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

8.    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

----------------------------------------------------------------------------------------------------------



மேற் பிரிவு

திருக்குறள் கட்டுரைப்; போட்டி
பிற்பகல் 3:00 மணி 02 – 03 - 2014

ஏதாவது ஒரு அதிகாரத்திலிருந்து ஒரு குறளும் அதன் பொழிப்பும் கொடுக்கப்படும். அதனை அடிப்படையாகக் கொண்டு 10 வசனங்கட்குக் குறையாமலும் 15 வசனங்கட்கு மேற்படாமலும் ஒரு கட்டுரை எழுதுதல் வேண்டும். கட்டுரை எழுத 30 நிமிடங்கள் அளிக்கப்படும்.

குறளும் பொழிப்புரையும் போட்டியன்று கொடுக்கப்படும்.

எழுதுவற்குத் தேவையான தாள்கள் கொடுக்கப்படும். மாணவர்கள் மற்ற உபகரணங்களைக் கொண்டுவரவேண்டும்.


-----------------------------------------------------------------------------------------------------------------


அதிமேற் பிரிவு

திருக்குறள் கட்டுரைப்; போட்டி
பிற்பகல் 3:00 மணி 02 – 03 - 2014

இரு குறள்களும் அதன் பொழிப்பும் கொடுக்கப்படும். அவற்றினை அடிப்படையாகக் கொண்டு 2 கட்டுரைகள் எழுதுதல் வேண்டும். ஒவ்வொரு கட்டுரையும் பத்து வசனங்கட்குக் குறையாமலும் 15 வசனங்கட்கு மேற்படாமலும் அமைதல் வேண்டும். இரண்டு கட்டுரைகள் எழுத மொத்தம் 60 நிமிடங்கள் அளிக்கப்படும்.

குறள்களும் பொழிப்புரையும் போட்டியன்று கொடுக்கப்படும்.

எழுதுவற்குத் தேவையான தாள்கள் கொடுக்கப்படும். மாணவர்கள் மற்ற உபகரணங்களைக் கொண்டுவரவேண்டும்.








No comments: