.
விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் மார்ச் மாதம் 31ம் திகதி விடுவித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பணம் சேகரித்த குற்றத்திற்காக 2007ம் ஆண்டு இந்த மூவரும் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் பயங்கரவாதக் குழுவிற்கு பணம் அனுப்பியதற்கான குறைந்த குற்றத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து 31ம் திகதி மார்ச் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கின் முடிவைப் பார்ப்பதற்காக வந்திருந்த பல ஆதரவாளர்கள் 1000 டொலர்கள் நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முடிவைக் கேட்டதும் அவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
சிட்னியில் வசித்து வருபவரான ஆறுமுகம் ராஜீவன், 44, மெல்மேனில் வசித்து வருபவர்களான ஆருரன் விநாயகமூர்த்தி 35, மற்றும் சிவாயன் யாதவன் 39 ஆகியோர் ஈழப் புலிகளுக்கு பணம் அனுப்பிய ஒரே குற்றத்திற்காக ஒப்புக்கொண்டார்கள்
இந்த மூவரும் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களிடம் பணம் சேகரித்து இலங்கையில் தனிநாடு கேட்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பியிருந்தார்கள் என நீதவான் Paul Coghlan கூறினார். இந்த மூவரும் நல்ல நோக்கத்திற்காக தமிழர்களுக்கு உதவி புரிந்து இருந்தாலும் இவர்களின் பொறுப்பற்ற செயலால் இந்த நிதி துர்ப்பிரயோசனம் செய்யப்பட்டிருக்கலாம் என அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்த மூவரும் தமிழ்ப் புலிகள் பயங்கரவாதக் குழு என சில நாடுகளால் தீர்மானிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டதைத் தெரிந்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியாவிலும் இப்படி தடை செய்யப்படுவதற்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுத்தவர்கள் எனவும் நீதவான் Paul Coghlan கூறினார்.
Paul Coghlan விநாயமூர்த்தியின் இரண்டாவது குற்றமாகிய $97,000 பெறுமதியான மின்சார உபகரணங்களை தமிழ்ப் புலிகளுக்கு அனுப்பியது தனக்கு வேதனையை தந்தது எனவும் கூறினார்.
நீதவான் Paul Coghlan விநாயமூர்த்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து நாலுவருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார். அவர் யாதவனுக்கும் ராஜிவனுக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து மூன்று வருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார்.
'சிறிலங்காவில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு உதவவேண்டும் என்ற பேரவாவினால் நீங்கள் ஒவ்வொருவரும் உந்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்' என அவர் தொடர்ந்தார்.
'உங்களது இலக்கு மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே அமைந்ததென நான் கூறுவதற்கு இன்னமும் நான் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் செயற்பாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.'
சிறிலங்காவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியிலேயே இவர்கள் இந்தக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர் ஹோல்சன் இந்தக் காலப்பகுதியில் நாட்டினது வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடைமுறை நிழல் அரசொன்றை நிருவகித்து வந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிக்கென அனுப்பப்பட்ட நிதி தவறாக பயன் படுத்தப்பட்டதாக எந்தத் தகவலுமில்லை என்பதை அவர் அவதானத்துடன் குறிப்பிட்டார்.
நீதியரசர் ஹோல்சன் ஒரு மணி நேரமாக இந்த வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்பான சர்தேக கருத்து இவர்களுக்குத் தெரிந்திருக்காமல் இருந்திருக்காது என முடிவெடுத்த நீதியரசர் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற விருப்பத்தினால் இவர்கள் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கடைசியில் கூறினார்.
No comments:
Post a Comment