தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

 












 
    







மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண்  … ஆஸ்திரேலியா



பாரதி வந்தார் பற்பல பாடினார்
பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
கன்னித் தமிழின் காவலன் ஆனார்

பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார் 
நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
நாடே அவரின் உயிராய் இருந்தது

பாரதி காலம் கவிமணி இருந்தார்
நாமக் கல்லின் நற்கவி இருந்தார் 
எட்டய புரத்து பாரதி மூச்சை
சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

நேர்வழியில் வாழ்வாய் – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)

தன்னலம் மட்டுமே சரியென

உன்னை உயர்த்திட ஒதுங்கினால்

என்றுமே வெற்றிதான் இல்லையென்றே

நன்றாய் நெஞ்சினில் நாட்டுவாய்!        (1)

 

செய்யும் தொழிலைச் செம்மையாய்

செய்து வாழ்தலே சிறப்பாம்,

பொய்யை அதிலே புகுத்தினாலே

எய்தும் வெற்றிதான் இல்லையே!   (2)

 

உன்வழி நேர்வழி ஒன்றுதான்

என்றே வாழ்தலில் இன்பமே!

இன்றே அவ்வழி ஏற்றிடுவாய்

நன்றே வாழ்வாய் நாளுமே!        (3)

கவிதை

 



-சங்கர சுப்பிரமணியன்.



லிமரைக்கூ கவிதை: (ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில் வரும் லிமரிக் கவிதையை தமிழில் மூன்று மற்றும் ஐந்து அடிகளில் லிமரைக்கூ கவிதைகளாக விஞர்கள் எழுதினர். இது சென்ரியு போல் தோன்றினாலும் சிந்திக்க வைக்கும்.)



பறக்குது பட்டம் வாலுடன்
வாலில்லா மனிதர்களும் பறக்கிறார்கள்
வாலுள்ளபறவை தத்துகிறது

நிறைமாத கர்ப்பிணி துடிக்கிறாள்
கண்ணெதிரில் தனியார் மருத்துவமனை
பணமிருந்தால் துடித்திருக்கமாட்டாள்

காந்தியோ நேர்மையின் அடையாளம்
வராதபணத்தை காந்தி கணக்கென்பர்
வருகின்றபணம் எக்கணக்காம்

பஞ்சவர்ணக் கிளி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 1965ம் ஆண்டு மூன்று இளம் நடிகர்கள் தமிழ் திரைக்கு


அறிமுகமானார்கள். ஜெய்சங்கர் , ஸ்ரீகாந்த், சிவகுமார் ஆகியோரே அவர்கள். இந்த மூவரில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகமாக சிவகுமார் துணை வேடம் ஒன்றில் அறிமுகமானார். ஆனால் இவர்களில் ஜெய்சங்கரைத்தான் அதிஷ்ட தேவதை விரைவாக அரவணைத்துக் கொண்டாள். இதனால் முதல் படமான இரவும் பகலும் வெளி வந்து வெற்றி கண்ட கையோடு இரண்டாவது படமான பஞ்சவர்ணக் கிளி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சான்ஸ் ஜெய்சங்கரை தேடி வந்தது.

 

பிரபலத் தயாரிப்பாளரான ஜி என் வேலுமணி தயாரித்த இந்தப்

படத்தில் மற்றுமோர் ஹீரோவாக முத்துராமனும் நடித்தார். ஆனாலும் படத்தின் கதை பஞ்சவர்ணக் கிளியான கே ஆர் விஜயாவை சுற்றியே அமைக்கப்பட்டிருந்தது. ஜெய்சங்கருக்கு இரட்டை வேடம் என்ற போதும் படம் முழுவதும் வரும் வேடம் அவர் ஏற்ற வில்லன் வேடம்தான். தனது இரண்டாவது படத்திலேயே துணிந்து வில்லன் வேடத்தில் நடித்திருந்த அவர் அப் பாத்திரத்தை இலாவகமாக கையாண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
 

பஞ்சவர்ணக் கிளிக்கு எப்படி பல நிறங்களோ அதே போல் வாணிக்கும் பல வேடங்கள் . தாயுடன் வாழும் வாணி சிறந்த பாடகி. அவள் குரலை கேட்டு அவளை பாராமல் காதலிக்கிறான் கண்ணன். திருமணம் கூடி வரும் வேலை அவளின் அத்தை மகன் பர்மா பாலு மூலம் அவளுக்கு அடுத்தடுத்து சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சித்ரா என்ற பேரில் கண்ணனின் அண்ணன் சேகரின் விதவை மனைவியாக , அவனின் குழந்தையுடன் நடமாட வேண்டிய இக்கட்டான நிலை அவளுக்கு ஏற்படுகிறது. ஆக மகளாக, பாடகியாக, காதலியாக, மனைவியாக, தாயாக , அண்ணியாக அவள் காட்சி தருகிறாள் . இறுதியில் அவளுக்கு வாழ்வு கிடைத்ததா என்பதே மீதி கதை.

இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதி அநுர உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பாப்பரசரின் மறைவுக்கு இரங்கல்

அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் -  ஹரிணி அமரசூரிய

மைத்திரிபால சிறிசேனவிடம் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை ஆராய்ந்து விசாரிக்கும் குழுவில் ஷானி அபேசேகர   


ஜனாதிபதி அநுர உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பாப்பரசரின் மறைவுக்கு இரங்கல் 

Published By: Digital Desk 3

21 Apr, 2025 | 05:00 PM

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவரது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

பாப்பரசருக்கு கடந்த பெப்ரவரி 14 ஆம்  திகதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், வைத்தியர்களின் கண்காணிப்பில் இருந்த பாப்பரசர் பிரான்சிஸ் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், இன்று திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததுள்ளார். காலை 7.35 மணிக்கு பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 

உலகச் செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் திருவுடல் நல்லடக்கம்

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு 

பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி

இந்திய விமானங்களிற்கு தனது வான்எல்லையை மூடியது பாக்கிஸ்தான் - வர்த்தக நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் - ரொய்ட்டர்

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி


பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் திருவுடல் நல்லடக்கம் 

26 Apr, 2025 | 05:42 PM

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் திருவுடல் இன்று சனிக்கிழமை (26)நல்லடக்கம் செய்யப்பட்டதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸ் ஏப்ரல் 21ஆம் திகதி வாத்திக்கானில் உள்ள தனது இல்லத்தில் 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.  

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனை இத்தாலியின் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை 10 மணிக்கு

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

24-05- 2025  Sat: தமிழ் வளர்த்த சான்றோர் விழா - அருள்மிகு சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபம் - மாலை 4.45 மணி

25-05- 2025  Sun:   திருக்குறள் மனனப் போட்டி –   சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டம் - முற்பகல் 9.00 மணி

25-05- 2025 Sun:   சமய அறிவுத் திறன் போட்டியும், திருமுறை ஒப்புவித்தல் போட்டியும்  -சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டம் - முற்பகல் 11.00 மணி

07-06- 2025  Sat: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta

08-06- 2025  Sun: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta

15-06- 2025  Sun :  சைவமன்றம் வழங்கும் இசை நடன நிகழ்வு

25-06- 2025  Sat:  ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

திருக்குறள் மனனப் போட்டி – 25/05/2025

 



சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த திருக்குறள் மனனப் போட்டிகள் மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2010 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2006 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 

பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக 

மே மாதம் 24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள்,  புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்

சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டியும், திருமுறை ஒப்புவித்தல் போட்டியும் - 25/05/2025


சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த சமய அறிவுத் திறன்
போட்டிககளும்,  திருமுறை ஒப்புவித்தல் போட்டிகளும்   மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் முற்பகல் 11 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.


போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும்  போட்டிகளும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு

01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு

01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு

01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு

01.08.2010 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு

01.08.2006 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

பங்குபற்றுவர்களின் முழுப்பெயர், பிறந்த திகதி மற்றும் பங்குபற்றும் போட்டிகள் ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம்  24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacompetition@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள், சமயஅறிவுப்போட்டிகளுக்கான மாதிரி கேள்வி பதில்கள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

13ம் ஆண்டில் சிட்னியில் சித்திரைத் திருவிழா - 4 மே 2025


 



சிட்னி இசை விழா 2025

 












சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025