இலக்கிய , ஊடகப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா அவர்களினால் 1972 பெப்ரவரி மாதம் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்தான் எழுத்தாளர் மு. கனகராசன்.
யாழ்ப்பாணம் மானிப்பாயைச்சேர்ந்தவர். எனினும் நீண்டகாலமாக தென்னிலங்கைவாசி. எமது நீர்கொழும்பூர் இல்லத்தில் குறிப்பிட்ட 1972 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் வெளியான மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழின் வெளியீட்டு அரங்கில்தான் முதல் முதலில் கனகராசனை சந்தித்தேன்.
அன்று முதல் மகரகமை புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் அவர் மறையும் வரையில் ஏதோ ஒரு வழியில் அவருடன் தொடர்பிலிருந்தேன்.
அந்தமரணப்படுக்கையிலும் அவர் தனது மனைவி அசுந்தாவிடம், “ தனக்கு ஏதும் நடந்துவிட்டால், உடனடியாக அறிவிக்கவேண்டிய இருவர் “ என்று ஒரு சிறிய காகிதத்தில் எழுதிக்கொடுத்திருக்கிறார்.