.
கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்
பொலிஸ் நாயின் உதவியுடன் 'குஷ்' போதைப்பொருள் மீட்பு - வெளிநாட்டு பயணி கைது!
வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த மோசடியில் வத்தேகம நகரசபை முன்னாள் தலைவர் கைது!
கார் விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியமட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பொலிஸ் நாயின் உதவியுடன் 'குஷ்' போதைப்பொருள் மீட்பு - வெளிநாட்டு பயணி கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட "குஷ்" போதைப்பொளுடன் வெளிநாட்டு பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தபோது, "ராண்டி" என்ற அதிகாரப்பூர்வ பொலிஸ் நாயின் உதவியுடன் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இந்தியா - சென்னையை சேர்ந்த 33 வயது புகைப்படக் கலைஞர் என தெரியவந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை (13) 09.45 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர், இந்தியாவின் மதுரைக்குப் புறப்படுவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-139 வரும் வரை போக்குவரத்து முனையத்தில் இருந்துள்ளார்.
இலங்கை ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரது பொதிகளை ஸ்கேன் செய்தபோது, அருகில் பணியில் இருந்த "ராண்டி" என்ற பொலிஸ் நாய், போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.
பொலிஸாரின் 1603 "ராண்டி" என்ற லாப்ரடோர் வகையைச் சேர்ந்த நாய், பல வெற்றிகரமான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளது.
இதன்போது, பொதிகளிலிருந்து சுமார் 85.42 மில்லியன் ரூபா மதிப்புடைய 08 கிலோகிராம் 542 கிராம் எடையுள்ள "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த மோசடியில் வத்தேகம நகரசபை முன்னாள் தலைவர் கைது!
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சொகுசு ஜீப்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில்மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment