தமிழ் திரையுலகில் தனக்கென்று ஓர் இடத்தை பெற்றிருப்பவர் பி.
கண்ணம்பா . தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இவர் தமிழில் உணர்ச்சிகரமாக வசனம் பேசி நடிப்பதை பார்த்து திரையுலகமே வியந்து பாராட்டியது. குறிப்பாக கண்ணகி படத்தில் இவர் பேசிய அனல் கக்கும் வசனங்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்ததன.
அன்றைய சூப்பர் ஸ்டார்களான எம் .கே .தியாகராஜ பாகவதர், பி. யு .சின்னப்பா, இருவருடனும் இவர் நடித்த அசோக்குமார், கண்ணகி, மஹாமாயா,மங்கையற்கரசி போன்ற படங்கள் அடைந்த வெற்றிக்கு இவர் நடிப்பும் கரணம் என்று கணிக்கப்பட்டது. பின்னர் சிவாஜியுடன் இவர் நடித்த மனோகரா இவர் நடிப்புக்கு ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது. எம் ஜி ஆருடன் இவர் அம்மா வேடத்தில் நடித்த தாய்க்கு பின் தாரம், தாய் சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனயன் எல்லாமே ஹிட் படங்கள்தான்.
இந்த கண்ணாம்பா நடிப்பதுடன் நின்று விடாமல் சொந்தமாகவும் சில
படங்களை தயாரித்து அவை அவரின் கணவர்கே.பி. நாகபூஷணத்தின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி கண்டன. 1963 ம் வருடம் எம் ஜி ஆரின் அம்மாவாக நடித்துக் கொண்டிருந்த கண்ணாம்பா எம் ஜி ஆர் நடிப்பில் சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார்.

பூவாளூர் சுந்தரராமன் எழுதிய வானொலி நாடகமான திருட்டுத் தாலி என்ற கதையை, தாலி பாக்கியம் என்ற பெயரில் படமாக்குவதென்றும், வசனத்தை கே. பாலசந்தர் எழுதுவதென்றும், எம் ஏ திருமுகம் இயக்குவது என்றும் தீர்மானமானது. வழக்கம் போல் எம் ஜி ஆரின் அம்மா வேடத்தில் கண்ணாம்பா நடிப்பது என்றும் முடிவானது.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் சமயம் நிலைமை தலை கீழாக மாறத் தொடங்கியது. தான் நடித்த தெய்வத் தாய் படத்தின் மூலம் வசனகர்த்தாவான பாலசந்தர் எழுதிய வசனங்கள் எம் ஜி ஆருக்கு பிடிக்காமல் போய் விட்டது. அது மட்டுமன்றி பாலசந்தருடன் சேர்ந்து நாகேஷ் தான் வசனங்களை எழுதுகிறார் என்ற சந்தேகமும் எம் ஜி ஆருக்கு ஏனோ தோன்றி விட்டது. விளைவு படத்தில் இருந்து பாலசந்தர் நீக்கப் பட்டார். அவருக்கு பதில் ஆரூர்தாஸ் நியமிக்கப்பட்டார். சொந்தப் படம் என்பதால் தான் தான் படத்தை இயக்க வேண்டும் என்று கண்ணாம்பாவின் கணவர் கே பி நாகபூஷணம் வற்புறுத்தவே திருமுகம் அகற்றப்பட்டு அவர் டைரக்டரானார்.
படப்பிடிப்பு தொடங்கப் போகும் சமயம் மற்றுமோர் இடி வந்து இறங்கியது. கண்ணாம்பாவுக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறிய பட்டு தீவிர சிகிச்சைக்கு அவர் ஆளாக்கப் படவே , படத்தில் இருந்து அவர் ஒதுங்க , அம்மா வேடத்தில் எம் வி ராஜம்மா நடிக்கலானார்.
கிராமத்தின் பெரிய மனிதரான நல்லசிவம் தாரம் இழந்தவர். அவரின்
ஒரே மகள் வள்ளி. முருகன் கிராமத்தில் தாயுடன் வாழும் பட்டதாரி. ஊருக்கு நல்லது செய்வதே அவன் இலட்சியம் . முருகனும், வள்ளியும் காதலர்கள். அவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோருக்கும் முழு சம்மதம். இரண்டாம் திருமணம் செய்ய தீர்மானிக்கும் நல்லசிவம் , கமலத்தைப் பெண் பார்ப்பதற்கு தன்னுடன் முருகனையும் அழைத்து செல்கிறார். நல்லசிவத்தையும், முருகனையும் அருகருகே பார்க்கு கமலம் முருகன் தான் மணமகன் என்று கருதி திருமணத்துக்கு சம்மதித்து விடுகிறாள். கல்யாண மேடையில் நல்லசிவம் தாலி கட்டும் போது தான் அவளுக்கு உண்மை தெரிகிறது. நல்லசிவம் வீட்டில் புதுக் குடித்தனம் ஆரம்பிக்கும் அவள் மனம் முருகன் மீது நாட்டம் கொள்கிறது. மறைமுகமாக தன் காதலை முருகனிடம் அவ்வப்போது சொல்லும் கமலம் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை பட்டவர்த்தமாக சொல்லி விடுகிறாள்.

முருகனோ அவள் ஆசையை அடியோடு நிராகரித்து விடுகிறான். ஆனாலும் இவர்கள் பேசியதை கேட்டு விடும் ஊர் மோசக்காரனான நமசிவாயம் கமலத்தை மிரட்டி , முருகன் மீது தனக்குள்ள பகைக்கு பழி வாங்க கமலத்தை பகடைக் காயாக பயன் படுத்துகிறான். இதனால் முருகன், நல்லசிவம் இருவர் உறவிலும் விரிசல் தோன்றுகிறது. முருகனை வஞ்சம் தீர்க்க துடிக்கும் நல்லசிவம் கமலத்துடன் சேர்ந்து வள்ளியை அதட்டி, மிரட்டி அவள் கையாலேயே அவள் கழுத்தில் தாலி ஒன்றை கட்டும்படி செய்கிறார். பின்னர் ஊர் பஞ்சாயத்தில் முருகன் தன் மகள் கழுத்தில் திருட்டுத் தாலி கட்டி விட்டான் என்று புகார் பண்ணுகிறார். பஞ்சாயத் தீர்ப்பு படி முருகன் ஊரில் இருந்து விரட்டப் படுகிறான். கமலம், நல்லசிவம், நமசிவாயம் இவர்களின் பகையை வென்று முருகன் வள்ளியை எவ்வாறு கரம் பிடித்தான் என்பதே மீதிக் கதை.
எம் ஜி ஆரை பொறுத்த வரை இது ஒரு வித்தியாசமான கதை. படம் முழுதும் கிராமத்தில் எடுக்கப் பட்டதால் வேட்டி, சர்ட்டோடு வருகிறார். தகாத காதலை மறுக்கும் போதும், தாயை பிரியும் போதும், உணர்ச்சிகரமாக நடிக்கிறார். படம் முழுதும் அளவோடு நடிக்கும் அவர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புகிறார். சரோஜாதேவிக்கு வழமையான பாத்திரம் கஷ்டமின்றி செய்கிறார். கமலமாக வரும் எம் என் ராஜம் தன் அனுப நடிப்பால் பாத்திரத்தை நிறைவு செய்கிறார். நாகேஷ், மனோரமா காமெடி படத்துக்கு தேவைதான். நம்பியார், எஸ் வி சுப்பையா, எம் வி ராஜம்மா , வி நாகையா ஆகியோரும் படத்தில் உள்ளனர் .
படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் கருத்தோடு அமைந்தன. நீங்க என் வாயிலே ஊத்தின விஷம் தொண்டையில் நிக்குது அத எப்படியாது விழுங்கிடுறேன் , ஒரு நல்ல குடும்பத்திலே பிறந்த பொண்ணு இனொரு குடும்பத்துக்கு வரும் போது அவளால எவ்வளவோ பெருமை கிடைக்குது, நீ சொல்ற சாஸ்திரத்தை விட எனக்கு மனம் தான் பெரிசு போன்ற வசனங்கள் பளிச்சென்று தெறித்தன. வாலியின் பாடல்களுக்கு கே வி மகாதேவன் இசை. உள்ளம் உன் கோயில் உன் உருவம் அதில் தெய்வம், இப்படியே இருந்து விட்டால், கண் பட்டது கொஞ்சம் பாடல்கள் இனிமை. சண்முகம் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்துக்கு ஆரூர்தாஸின் வசனம் பலம் சேர்த்தது.
தாலி பாக்கியம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் பட்ட போது இருந்த
கண்ணாம்பா படம் வெளி வரும் போது இல்லை. பூவும் பொட்டுமாக மறைந்து விட்டார். நாகபூஷணத்தின் டைரக்ஷன் குறை சொல்லும் படி அமையவில்லை. ஆனாலும் மாற்றான் மனைவி ஒரு தலை காதலாக எம் ஜி ஆரை காதலிப்பதும், அவளின் பெறா மகள் திருட்டு தாலி கட்டி விட்டார் என்று எம் ஜி ஆர் மீது புகார் சொல்வதையும் எம் ஜி ஆர் ரசிகர்கள் வரவேற்கவில்லை. ஏற்கெனவே இதே தாலி பிரச்சனையை கருவாகக் கொண்டு எம் ஜி ஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்தையும் எம் ஜி ஆர் ரசிகர்கள் நிராகரித்திருந்தார்கள். இப்போது இந்தப் படமும் அவர்களிடம் எடுபடவில்லை. அதனால் படத்துக்கான தங்கள் ஆதரவை மட்டுப் படுத்திக் கொண்டார்கள். எம் ஜி ஆரின் இமேஜுக்கு பொருந்தாத படமாக தாலி பாக்கியம் அமைந்து விட்டது!

4 comments:
எம்ஜிஆர் மேக்கப் மற்றும் நடிப்பு அற்புதமாக இருக்கும்
படம் தோல்வி அடைந்தது. கண்ணாம்பா வீடு கடனுக்கு போன போது தலைவர் அதை மீட்டுக்கொடுத்தார்
உண்மை !
படம் வெற்றி பெறாததால் படத்துக்கு நிதி வழங்கியவர் கண்ணாம்பா வீட்டை ஏலத்துக்கு கொண்டு வர அதை எம் ஜி ஆர் வாங்கினார். பின்னர் அதுவும் கை மாறி இன்று அந்த வீடு இடிக்கப்பட்டு அடுக்கு மாடி கட்டடம் ஆகி விட்டது!
Post a Comment