கொடுமையிலும் கொடுமை வறுமை கொடுமை அதிலும் கொடுமை இளமையில் வறுமை இப்படி வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒருவன் அப்பாவியாகவும் வெகுளியாகவும் இருந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை உருக்கமாகவும், உணச்சிகரமாகவும், நகைச்சுவையோடும் சொல்ல கை நிறைய காசு படத்தின் மூலம் முயன்றிருக்கிறார்கள் . தமிழ், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியவர் எ .பி ராஜ். இவர் சிங்களத்தில் டைரக்ட் செய்த வனமோஹினி என்ற படம் சக்கை போடு போட்டது. பிரபல அம்மா நடிகையான சரண்யாவின் தந்தையான இவர் 1974ம் ஆண்டு இந்த படத்தை இயக்கி இருந்தார்.
நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த
நாகேஷின் கால்ஷீட்டை எப்படியோ பெற்று கொண்டவர்கள் படத்துக்கு அவரையே ஹீரோவாக்கி விட்டார்கள். அவருக்கு ஜோடி பிரமிளா. இவர்களுடன் மற்றுமொரு ஜோடி ஸ்ரீகாந்த், எல் காஞ்சனா. இவர்களுடன் எம் ஆர் ஆர் வாசு, எஸ் என் லஷ்மி, மௌலி, தேங்காய் சீனிவாசன், சச்சு, சி ஐ டி சகுந்தலா, ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

படத்தில் நாகேஷுக்கு நல்ல வேடம். சிரிக்கவும், கலங்கவும் வைக்க நல்ல சந்தர்ப்பம். அதனை நிறைவாக செய்திருந்தார். பிரமிளாவுக்கு குடும்பப் பெண்மணியான வந்து தவிக்கும் ரோல் . நடிப்பை மீறி அவரின் சத்தம்தான் அதிகம் கேட்கிறது. ஸ்ரீகாந்த் நல்லவனாக வந்து டூயட்டும் பாடுகிறார். அவருக்கு இணை எல் காஞ்சனா நன்றாக அசடு வழிகிறார். சகுந்தலாவின் பாத்திரம் சஸ்பென்ஸ். வாசு, தேங்காய் , சச்சு அவ்வப்போது வந்து வந்து போகிறார்கள்.
படத்தின் கதை நடுத்தர குடும்பத்தில் நடக்கும் அவலங்களையும், வறுமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது . தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வக்கில்லாத அண்ணன் தங்கை தன் நண்பனை காதலிப்பது தெரிந்த பின்பும் அதனை ஏற்காமல் வறட்டு கௌரவம், பிடிவாதம் பிடித்து காதலை எதிர்ப்பது நடுத்தர குடும்பத்தின் திரிசங்கு நிலையை எடுத்து காட்டியது.ஏழ்மையில் தவிக்கும் நாகேஷ் பணம் வந்த பின்பும் ஏனோ அதனை அனுபவிக்காமல் தத்தளிக்கிறார். அனுபவிக்க தயாராகும் போது சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதில் தான் கதையின் திருப்பமும் தங்கியுள்ளது. படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் மௌலி. மேடை நாடகங்களில் புகழ் பெற்ற அவருக்கு இதுவே முதல் படம். வசனங்கள் ஆங்காங்கே ரசிக்கும் படி இருந்தன.
பாடல்களை கண்ணதாசன் எழுத , சங்கர் கணேஷ்
இசையமைத்தனர். கணேஷின் குரலில் ஒலிக்கும் கை நிறைய காசு பை நிறைய நோட்டு வெளுத்துக் கட்டு ராஜ வெற்றி நடை போட்டு பாடல் ஜாலி டைப். உன் சொல்லில் உள்ள நாணயத்தை எவன் மதிப்பான், அது பை யில் வந்து சேர்ந்ததும் பல்லை இளிப்பான் என்ற வார்த்தைகள் அனுபவ முத்துக்கள் . இது தவிர கல்லில் ஊறிய காவியம் இதுவோ பாடலும் இனித்தது.

சிவாஜியின் புகழ் பரப்பும் பத்திரிகையான மதிஒளி பத்திரிகையின் ஆசிரியரான மதி ஒளி சண்முகம், மின்னல் என்ற சினிமா விளம்பர நிறுவனம் நடத்திய எம் உதுமான் முகையதீன் என்ற மின்னல் என்ற இருவரும் இணைந்து கையில் இருந்த பணத்தை போட்டு கை நிறைய காசு படத்தை தயாரித்தார்கள். படத்துக்கு தயாரிப்பாளர்கள் வைத்த பெயரின் ராசியொ என்னவொ படம் முடியும் தருவாயில் தயாரிப்பாளர்களுக்கும், பிரமிளாவுக்கும் இடையில் காசு விஷயமாக தகராறு வந்து விட்டது. படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது தொண்னூறு வீதமான சம்பளம் கொடுக்கப் பட்டு விட்ட நிலையில் மீதி பணத்தையும் உடனடியாக தந்தால் தான் நடிப்பேன் என்று பிரமிளா பிடிவாதம் பிடிக்க , தயாரிப்பாளர் அங்கும் இங்கும் அலைந்து கடன் வாங்கி கொடுத்து பிரமிளாவை நடிக்க வைத்தார்கள். இப்படி படம் எடுத்தவர்கள் கை நிறைய காசு பார்த்தார்களா என்பது தெரியவில்லை!
No comments:
Post a Comment