இலங்கைச் செய்திகள்

 .

சுமார் ரூ. 37 கோடி பெறுமதியான மாணிக்ககற்கள் மீட்பு

- பெளத்த தேரர் உள்ளிட்ட இருவர் கைது

நாட்டில் பிரதானமாக மழையற்ற வானிலை

- ஒரு சில பகுதிகளில் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

கைதானால் 5 வருட சிறைத் தண்டனை
சுமார் ரூ. 37 கோடி பெறுமதியான மாணிக்ககற்கள் மீட்பு


இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 நீலக் மாணிக்கக் கற்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்கள் சுமார் ரூ. 37 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணிக்கக் கற்கள் விகாரை வடிவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தினகரன் 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


நாட்டில் பிரதானமாக மழையற்ற வானிலைஇன்றையதினமும் (11) நாட்டில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா, தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கைதானால் 5 வருட சிறைத் தண்டனை


பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக 05 வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கமைய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மீது வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பாக சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்களை சிவில் உடையிலுள்ள பொலிஸார் கண்காணிப்பதுடன், தமது கமெராவின் உதவியுடன் அச்சம்பவங்களை சாட்சியமாக பதிவு செய்வர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை யாராவது ஒருவர் போலி முறைப்பாடு செய்வராயின், அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் போலி முறைப்பாட்டால் யாராவது பாதிக்கப்படுவாராயின், அது விசாரணையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் தமக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

No comments: