.
படித்து - முடித்து
வேலையில்லாமல்
சுற்றிகொண்டிருந்தபொழுது
அவர்
மட்டுமே சம்பாதித்த வேளையில்
ஒரு குண்டுமணி அளவு கூட
மரியாதை குறையவில்லை எனக்கு..!
பின்னதொருநாளில்,
நான் வேலைக்கு போக
அவர் ஓய்வெடுக்க (முன்பிருந்த என்னைப்போல் அல்ல..!)
என்னையும் அறியாமல்
அவரின் மதிப்பு குறைந்தது என்னிடம்..!
காரணம்
தனக்கென எதையும் சேர்த்து வைக்காமல்
எல்லாவற்றையும்
எனக்கென செலவழித்து
சுருக்கமாக சொன்னால்
தன்னை உருக்கி -
என்னை உருவாக்கியிருந்தார்
ஆக,
அவர் கணக்கில்
நான் தான்
அவரின் பிரதான சொத்து
ஆனால், என் கணக்கில் அவர்....!
சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை
அந்த
அவர் யாரென்று.....!
மறந்து போகத்தேவையில்லை
அந்த அவர்
நாமாக கூட இருக்கலாம்..,
மீண்டும் பின்னதொருநாளில்...!
No comments:
Post a Comment