11/05/2018 வடகொரிய ஜனாதிபதியை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியவினால் விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்க பிரஜைகளை வரவேற்ற பின்னர் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு பெரும் வெற்றியை அளிக்கும் எனவும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அர்த்தபூர்வமான எதனையாவது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என  டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பினை உலக சமாதானத்திற்கான முக்கிய தருணமாக மாற்றுவதற்கு நாங்கள் இருவரும் முயற்சி செய்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி