இலங்கைச் செய்திகள்


இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் 118 நாடுகளில்

பதுளை அதிபருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

உல்லாச விடுதியாக பயன்படுத்திய வைத்தியசாலை 30 வருடங்களின் பின் இராணுவத்தால் விடுவிப்பு

வெலிக்கடை சிறைச்சாலை கலவரம்:கைதிகள் கொல்லப்பட்டமை விசாரணைகளில் அம்பலம்

யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

அதிபர் பவானிக்கு ஆதரவளித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!!!



இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் 118 நாடுகளில்

30/01/2018 இலங்கையின் 70 ஆவது  தேசிய சுதந்திர தின வைபவத்தை உலகிலுள்ள 118 நாடுகளில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுரக அலுவலகங்கள் மற்றும் நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புக்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடைபெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி










பதுளை அதிபருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

30/01/2018 பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (30) ஹட்டன் நகரில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் என்பனவற்றின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பாடசாலை அதிபர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரும் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, ஆசிரியர் சமூகத்தையும் அதிபர் சமூகத்தையும் கல்விச் சமூகத்தையும் பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நன்றி வீரகேசரி










உல்லாச விடுதியாக பயன்படுத்திய வைத்தியசாலை 30 வருடங்களின் பின் இராணுவத்தால் விடுவிப்பு

30/01/2018  இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. 
வலி வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற  இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர்  பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.
பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். 
இந்த வைத்தியசாலையானது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள காரணத்தினால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்குரிய சரியான இடம் இந்த வைத்தியசாலை என் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில், குறித்த வைத்தியசாலை விடுவிக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியான கோரிக்கைகள் பாதுகாப்பு தரப்பிடம் முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை படையினர் கையளித்துள்ளனர்.
இந்த வைத்தியசாலை அண்மைய தினம் வரையில் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தமையினால் தற்போது உடனயடியாக அதனை வைத்தியசாலையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. 
வைத்தியசாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன. எனவே வைத்தியசாலையாக புனரமைக்கப்பட்ட பின்னரே மருத்துவ சேவைகளை ஆரம்பிக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி











வெலிக்கடை சிறைச்சாலை கலவரம்:கைதிகள் கொல்லப்பட்டமை விசாரணைகளில் அம்பலம்

31/01/2018 வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனயவுப் பிரிவினரால் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
இந் நிலையில் விசாரணைகளின் போது வெளிபப்டுத்தப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் சிறையில் இருந்து கலவரத்தின் இடை நடுவே முச்சக்கர வண்டியில் தப்பியோடும் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் 8 பேரும், பொலிஸ் விஷேட அதிரடிப் படை மீது தாக்குதல் நடத்தும் போது பதில் தககுதலில் இருவரும் கொல்லப்ப்ட்டுள்ளதாகவும், கலகம் அடக்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்  குற்றப் புலனயவுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது.
 வெலிக்கடை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் விஷேட பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கரசிங்ஹ  இதனை நீதிவானுக்கு நேற்று அரிவித்தார். இந் நிலையில் சட்ட மா அதிபரின் அலஓசனை பிரகாரம் நீதிமன்றில் முன்னிலைபப்டுத்தப்ப்ட்ட இந்த விவகாரத்தில் தொடர்புபட்ட ரீ 56 ரக துப்பககிகள் 156, எம்.எம். ரக ரிவோல்வர்கள் 5 உள்ளிட்ட 161 துப்பககிகளையும் அரச இரசாயன பகுப்பயவுக்கு அனுப்ப நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தர்விட்டார்.
நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கரசிங்ஹ நீதிவானுக்கு சமர்பித்த மேலதிக விசாரணை அறிக்கையின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப் பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு சட்ட விரோதப் பொருட்களை கைப்பற்றும் நோக்குடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் சிறைப்பாதுகாப்பு அதிகாரிகளால் 2012.11.9 ஆம் திகதி விஷேட சோதனை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது கைதிகள் குழம்பியுள்ள நிலையில், நாளாந்த நடவடிக்கைகளுக்காக ஆயுதங்கங்களை விநியோகம் செய்யும் சிறை ஆயுத களஞ்சியத்தை அவர்கள் சூறையாடி அதில் இருந்த ஆயுதங்களைக் கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.  நிலைமையானது இதன்போது பெரும் கலவரமாக  மாறியுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.
 இந் நிலையிலேயே கலகத்தின் இடை நடுவே கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க வெலிக்கடை சிறைச்சாலையை பொலிஸ் விஷேட அதிரடிப் படை சுற்றிவளைத்துள்ளது. இதன்போது 2009 நவம்பர் 9 ஆம் திகதி இரவு 12.00 மணியளவில்  பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு, சிறை அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியூடாக தப்பிச் செல்ல சிலர் முயன்றுள்ளனர். இதன்போது அதிரடிப் படை நடாத்திய பதில் தாக்குதலில் இருவர் காயமடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்ற கைதிகள் மீது அதிரடிப் படை நடாத்திய துப்பாககிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சாட்சியங்களின் பிரகாரம், இந்த சிறைக் கலவரமானது இராணுவமும் தலையீடு செய்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின்னர் தெரிவு செய்யப்ப்ட்ட 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலன் எனப்படும் மலிந்த நிலேத்திர பெல்பொல, நிர்மல அத்தபத்து,மொஹமட் விஜேரோஹன, களு துஷார எனப்படும் துஷார சந்தன,அசரப்புலிகே ஜோதிபால,ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா,  சுசந்த பெரேரா, கொண்ட அமில எனப்படும் மலித் சமீர பெரேரா ஆகிய எட்டுபேருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சாட்சிகள் உள்ளன. 
சிறைக் கலவரம் அடக்கப்பட்ட பின்னர் அங்கு சிறைக்கு வந்ததாக கூறப்படும்  பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் மேலும் இருவர் இந்த கைதிகளை தெரிவு செய்ததாக  சாட்சிகள் உள்ளன. என குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் சுட்டிக்கடடப்பட்டுள்ளது.
 இந் நிலையிலேயே சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை மன்றில் சமர்பிக்கப்பட்ட ஆயுதங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதிவான் ரங்க திஸாநாயக்க, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் மீள விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்த சிறைக் கலவரத்தின் போது 27 பேர் மொத்தமாக உயிரிழந்த நிலையில் அவர்களின் பெயர் பட்டியலை அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயகொடி வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி
01. தொன் கயந்த புஷ்பகுமார (நுகேகொடை)
02. கமகே சமந்த பெர்ணான்டோ
03. குலவெல விதானகே தொன் சமீர மலித் விஜேசிங்க (தெஹிவளை)
04. தேவராஜா மல்வரகே சுகத் குமார (களுபோவில)
05. ரணசிங்க ஆராச்சிகே ஜனக வசந்த (ஹொரண)
06. அசித்த சஞ்ஜீவ திஸாநாயக்க (கிராண்ட்பாஸ்)
07. திலுக் சஞ்ஜீவ ராஜபக்ஷ (கல்கிசை)
08. ராமநாதன் பாலபெருமான் (பண்டாரவளை)
09. அசரப்புலிகே ஜோதிபால எனும் கபில (கிராண்ட்பாஸ்)
10. மலிந்த நிலேத்திர பெல்பொல எனும் மாலன் (கோட்டை)
11. ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா எனும் மஞ்ஜூ ஸ்ரீ (பிலியந்தலை)
12. நிர்மல அத்தபத்து (பிலியந்தலை)
13. துஷார சந்தன எனும் களு துஷார (நாவின்ன)
14. சுசந்த பெரேரா (ரத்மலானை)
15. மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)
16. மலித் சமீர பெரேரா எனும் கொண்ட அமித் (தெஹிவளை)
17. திஸ்ஸ குமார (கேகாலை)
18. லெஸ்ட டி சில்வா (ஹிக்கடுவ)
19. சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)
20. வெலிகம துப்பெஹிகே அசங்க உதயகுமார
21. வல்லகே லலத்த விஜேசிறி (காலி)
22. ரத்னவீர படபெதிகே வெஸ்லி (காலி)
23. சரத் விஜேசூரிய (கல்கமுவ)
24. சபு பிரசன்ன டி சில்வா (இரத்மலானை)
25. மொஹமட் ரம்சதீன் தௌபர் (அக்கரைப்பற்று)
26. கன்னலு பெருமாராச்சிகே பிரியந்த (கரத்தெனிய)
27. லியனாராச்சிகே அநுர (பொரலஸ்கமுவ) ஆகிய 27 பேர் கொல்லப்ப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 இது தொடர்பிலேயே தற்போது குற்றப் புலனயவுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்து அதனை நிறிஅவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி











யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

30/01/2018 யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்டவற்றில் ரி.56 துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் ஒரு தொகையும் அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன்றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார்ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலஸார் தெரவித்தனர்.

பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களை மீட்டுள்ளனர்.




நன்றி வீரகேசரி










அதிபர் பவானிக்கு ஆதரவளித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!!!

31/01/2018 பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியும் இன்று ஹட்டன் நகரில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு முன்பாக மதியம் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், ஆர்.இராஜாராம், சரஸ்வதி சிவகுரு என பலரும் பொது மக்களுடன் கலந்து கொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியாறு சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதேவேளை ஹட்டன் பொலிஸாரால் வீதியை மறித்து போராட்டத்தை நடத்துவதற்கும், ஊர்வலம் செய்வதற்கும் எதிர்த்து ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.    நன்றி வீரகேசரி





No comments: