ஓலமிட்டு அழுகின்றோம் ! எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

      ஜெயமென்னும் பெயர்கொண்டு 
       ஜெயித்துவந்த ஜெயாவம்மா
       ஜெயாமுதல்வர் பதவியுடன்
       ஜீவனையே கொடுத்துவிட்டார்
       ஜெகமதனில் ஜெயிப்பதற்கு
       ஜெயலலிதா ஆகிநின்றார்
       ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்
       ஜெயாவம்மா வாழுகிறார் !
        துணிவுகொண்ட பெண்ணானார்
        துயர்பலவும் தான்கண்டார்
        தனிமையிலே தவித்தாலும்
        தமிழ்நாட்டை நினைத்துநின்றார் 
        அமுதான தமிழோடு
        ஆங்கிலமும் பேசிநின்றார்
        அதிமுகாவினது ஆணிவேராய்
        அவர் இருந்தார் !
        அஞ்சாமல் ஆட்சிசெய்த
        அம்மாவைக் காண்பதெப்போ
        அவருடைய துணிவான
        அழகுதமிழ் கேட்பதெப்போ 
         புன்சிரிப்பு பூத்துநிற்கும்
         பூமுகத்தைக காண்பதெப்போ 
         புகழ்பூத்த பெண்மணியே
         உனைக்காணா அழுகின்றோம் !
         ஆளுமைமிக்க அரசியல் தலைவியே
         ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை
          போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை 
          காலனைவென்றிடும்  வல்லமை இழந்ததேன் !
           உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா
           உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே
           என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்
           உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு ழுகின்றோம் ! 

No comments: