பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா ! பல்வேறு இலக்கியவிருதுகளைப்பெற்ற தாவரவியல் அறிஞர் ! ! முருகபூபதி

மது தமிழ் சமூகத்தில்  தமது தொழில்சார் அனுபவங்களை


படைப்பிலக்கியத்தில் வரவாக்கியிருப்பவர்கள் மிகவும் குறைவு.

எனினும், தமிழர்கள்  புலம்பெயர்ந்த  நாடுகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், மற்றும் தாவரவியல் பேராசிரியர் ஆசி. கந்தராஜா ஆகியோர், தாம் சார்ந்திருந்த தொழில் துறையில் தாம் கற்றதையும், பெற்றதையும் புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாண்டு தனது பவளவிழாவை கொண்டாடும் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவுக்கு எனது  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறே இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

எனக்கு அவரை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு தெரியும். 


அவரது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் அறிந்திருந்திருந்தமையால், 1997ஆம் ஆண்டு எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழாக்காலத்தில் மெல்பனில் நடந்த விழாவுக்கு அவரை தலைமை தாங்குவதற்கு அழைத்திருந்தேன்.

அந்த விழா மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் அவரது தலைமையில் நடந்தபோது,  மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, ஓவியர் கே.ரி. செல்வத்துரை, அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அன்று முதல் கந்தராஜா அவர்கள் மெல்பன் கலை, இலக்கிய வட்டாரத்திலும் நன்கு அறிமுகமானவர்.  சிட்னி இலக்கியப் பவர் அமைப்பிலும் இணைந்திருந்தார்.  அண்ணாவியார் இளைபத்மநாதனின்  ஒரு பயணத்தின் கதை கூத்திலும் பங்கேற்றிருந்தார். அந்தக் கூத்து மெல்பனில் அரங்காற்றுகை செய்யப்பட்டபோதும் வருகை தந்திருந்தார்.

சிட்னியில் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்ட வேளையில் அங்கிருந்த தமிழ் அறிஞர்கள், கல்விமான்களுடன் இணைந்து  செயல்பட்டவர்.

கந்தராஜா,  இலங்கை வடபுலத்தில் கைதடி கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு, புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த  தமிழ் ஆசான் ( அமரர் ) ஆறுமுகம் சின்னத்தம்பி – முத்துப்பிள்ளை தம்பதியரின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார்.

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி வவுனியா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 37 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையுடன்  புலமைப்பரிசில் உதவியை பெற்றுவரும்  மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு  இவ்வாண்டும் வழங்கப்பட்டது.

 கடந்த வாரங்களில்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாகவும்,

அண்மையில் வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வு,  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா தொடர்பாளர் அமைப்பான

நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின்    Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில்,  குறிப்பட்ட பணிமனையில் நடைபெற்றது.

சாதித்துக் காட்டிய எங்கட பெடியள் ❤️❤️❤️ கானா பிரபா


மூன்று மணி நேரம் கடந்த நிகழ்ச்சி, அரங்கமே வயது வேறுபாடின்றி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் காட்சி.

இதெல்லாம் தென்னிந்திய நட்சத்திரங்களைக் கண் கொண்டு பார்த்த அனுபவங்கள்.

ஆனால் ஈழ மண்ணின் இளவல்கள், எந்தவிதமான வர்த்தக அடையாளமும் இன்றி, இன்று சமூக வலைத்தளத்தையே தம் கருவியாகக் கொண்டு ஒட்டுமொத்த உலகத் தமிழரையே மயக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியம் பறைந்தது, ஐரோப்பிய மண்ணினைத் தொடர்ந்து ஆஸியில் மெல்பர்ன், அடலெய்ட், பேர்த் தொடர்ந்து சிட்னி என்று நான்கு நகரங்களில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இன்னிசைத் துள்ளல்.
இப்படிய ஒரு சேர ஆஸி நகரங்களில் நம்மவர் நிகழ்த்திக் காட்டுவதும் கூடப் புது வரலாறு.

சொல்லிசையைக் கையில் எடுத்துக் கொண்டு, உள்ளார்த்தம் பேசும்

வரிகளைப் பார்வையாளர்களிடமேயே ஊகிக்க வைத்துத் தமிழர் மொழி, இனம் மீதான காதலைக் கடத்துவது என்பது புதியதொரு உத்தி. அதை வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதைச் சான்று பகிர்ந்தது, அவையோர் அந்த மொழி ஊடாடல்களினூடே நமக்காக உயிர்ப்பூச் சொரிந்த அந்தத் தேசப் புதல்வர்களை நினைத்து ஆர்ப்பரித்த போது.

வாகீசன் ராசையா, திஷோன் விஜயமோகன், அட்விக் உதயகுமார் மூவருமே முப்பரிமாணங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆனால் கூட்டாக இணைந்தாலே ஒரு மாயாஜாலத்தை மேடையில் நிகழ்த்த வல்லவர்கள் என்று காட்டியது அவர்கள் சுரந்த பாடலும், ஆடலும்.

இப்படியான நிகழ்ச்சிகளில் தம்முடைய கச்சேரியையும் பாருங்கள் என்று கூப்பாடு போடும் ரசிகப் பெருமக்களும் இருப்பார்கள். சில சமயம் மேடையை மேவி அவர்கள் அந்த நிகழ்ச்சியைச் சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். ஆனால் இங்கே நடந்ததோ வேறு. சபையோரை அடக்கி ஆண்டார் வாகீசன். அவர்களோடு பேச்சுக் கொடுத்து நான் உங்கட பெடியன் என்ற உரிமையோடு அந்நியம் களைந்து அன்னியோன்யம் ஆக்கினார்.

அனுபவப்பட்ட பாடகர், இசைக் கலைஞர்களுக்கே இம்மாதிரியான சூழல் கைவரப் பெறுவது கடினம். ஆனால் இந்த இளம் வயதில் மதி நுட்பமாகப் பேசிக் கட்டுக்குள் கொண்டு வந்தது சபாஷ் போட வைத்தது.
தேவைப்படும் போது வந்து ஆடிச் சிறப்பித்த நடன மாந்தர், பொருத்தமான ஒளிக் கலவை, முரண்டு பிடிக்காத ஒலியமைப்பு என்று எல்லாமே கச்சிதமாக இயங்கியது.

ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்ற தீவிர நியதி நிலவிய 60 ம் ஆண்டுகளில் ஆங்கிலப் பெயரைக் கொண்டு ஒரு படம் வெளிவந்தது. அந்தப் படம்தான் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார். படத்தின் பேரே இது ஒரு காமெடி படம் என்பதை சொல்வது போல் அமைந்திருந்தது. உண்மையும் அதுதான். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதே சமயம் ஓரளவுக்கு செண்டிமெண்டலையும் தடவி படத்தை எடுத்திருந்தார்கள்.
 
படத்தின் பேர்தான் ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் என்றால், படத்தை

தயாரித்து டைரக்ட் செய்தவரும் ஜமிந்தாரைப் போன்ற குண இயல்புகளைக் கொண்டவர்தான். கே. ஜே . மகாதேவன் என்ற திரைப் பிரமுகரால் படம் உருவாக்கப்பட்டது. இந்த மகாதேவன் திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட ஒருவராவார். இவரது தந்தை கே எஸ் ஜெயராம் ஐயர் மைலாப்பூரில் வசித்த ஒரு பிரபல கிரிமினல் வழக்குகளுக்கு ஆஜராகும் வக்கீலாவார். தன்னுடைய மகன் மகாதேவனும் தன்னைப் போல் வக்கீலாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை லண்டனுக்கு சென்று சட்டக் கல்வி பயின்று வர அனுப்பினார் அவர். ஆனால் பல காரணங்களால் மகாதேவன் வக்கீலாகவில்லை. அதற்கு பதில் அவர் கவனம் சினிமாத் துறையின் பக்கம் திரும்பியது. பிரபல டைரக்டர் கே. சுப்பிரமணியம் இயக்கிய கல்கியின் நாவலான தியாக பூமியில் கதாநாயகனாக இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஜெமினி ஸ்டுடியோவில் சேர்ந்து படம் இயக்கும் வித்தைகளை எஸ் எஸ் வாசன், கே ராம்நாத் ஆகியோரிடம் கற்றார். சந்திரலேகா படம் தயாரான போது ரஞ்சன் நடித்த கொடுங்கோலன் வேடத்துக்கு இவர் பேர் முதலில் தெரிவானது. ஆனால் இவரது மென்மையான முகம் அவ் வேடத்துக்கு பொருந்தாது என்பதால் அவர் நடிக்கவில்லை.

நடை அழகு – குறுங்கதை - கே.எஸ்.சுதாகர்


குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள்.

திரு! எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது 'நியூ வேவ்' பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. நேற்றுக்கூட வானொலியில் திருவின் 'பழைய பானைக்குள் புதிய கள்ளு' என்ற இசையும் கதையும் ஒலிபரப்பாகியிருந்தது.

அவரைச் சந்திப்பதற்காகத்தான் அந்தக்கூட்டம் ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தது. காதல் சுவை சொட்டும் கள்ளு, சாந்தியைக் கவர்ந்திருந்தது. அவள் திருவின் படைப்புகளை ஆய்வு செய்து கலைத்துறையில் பட்டம் பெற இருக்கின்றாள். அவளை ஆய்வு செய்வதற்காக மற்றைய நால்வரும்.

ஐந்து பெண்களும் சைக்கிளில் சவாரி செய்து 'சடின் பிறேக்' போட்டு திருவின் வீட்டிற்கு முன்னால் புழுதி கிழப்பினார்கள். புழுதி அடங்குவதற்கு முன் நாய் ஒன்றின் ஆரவாரம் தொடங்கியது. படலை திறந்து கிடந்தபடியால் உள்ளே புகுந்தார்கள். உள்ளேயிருந்து ஒரு நாய் ஓடிவந்தது. மாமரத்திற்குக் கீழே இருந்த ஒருவன் 'றெக்ஸ் றெக்ஸ்' என்று அதைக் கூப்பிட்டான். அவர்கள் பாவாடையை இழுத்துப் பிடித்தபடியே சைக்கிளை மாமரத்திற்குக் கிட்ட ஓரம் கட்டினார்கள். முற்றத்தில் புளுக்கொடியல், மிளகாய் வத்தல், ஊறுகாய் என்பன காய்ந்து கொண்டிருந்தன. மாமரத்திற்குக் கீழே மரக்குற்றி ஒன்றின்மீது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் அவற்றிற்கு காவலாக அமர்ந்திருந்தான். பக்கத்திலே கொஞ்சம் குறுணிக்கற்கள். அவன் அந்தப் பெண்களை நிமிர்ந்து பார்த்தான். பரட்டைத்தலை. 'சேவ்' செய்யப்படாத முகம். கசங்கிய ஆடை. பாக்கு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான்.

"நாங்கள் றைற்ரர் திருவை மீற் பண்ணவேணும்."

சத்தமில்லை. மீண்டும் கொஞ்சம் இறுக்கமான தொனியில் வந்தவர்களில் ஒருத்தி கேட்டாள்.

`பறவைகள்’ நூல் அறிமுகம் - கே.எஸ்.சுதாகர்


மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில் பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப் பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல், தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.


`பறவைகள்என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன.

பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது. `எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. `புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்ற கதை இது.

சிறுவர் சிறுகதைகளில் `கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

`மர்ம மாலைஎன்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது. கனடாவில் பிறந்து வளர்ந்த 18 சிறுவர்களுடன் நூல் ஆசிரியரும் சேர்ந்து தொடரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். மொத்தம் 20 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரின் முதல் - இறுதி அத்தியாயங்களை நூலின் ஆசிரியர் எழுத, ஒவ்வொரு சிறுவர்களும் அந்தத் தொடரை வாசிக்கத் தூண்டும் வகையில் மிக அழகாக எழுதியிருந்தார்கள். நூல் ஆசிரியர் அவர்களை வழிநடத்தி தானும் எழுதியிருப்பது சிறப்பு. இந்தத் தொடரின் இறுதி அத்தியாயமும், நடந்தவை அனைத்தும் கனவு என்று சொல்லவருவது ஏமாற்றமாக உள்ளது.

ஊதியம்



சங்கர சுப்பிரமணியன்.





நான் ஒரு நடிகன். பெரிய நடிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கை நிறைய சம்பாதித்து எல்லோருக்கும் தெரிந்தவன். எல்லோருக்கும் உதவியதால் சேர்த்து வைக்காமல் வறுமையில் வாழ்பவன்,


அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் வாய்ப்பை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்த பிரபலமான நகைச்சுவை நடிகர் என் வீடு தேடி வந்தார்.

"என்ன தம்பி எவ்வளவு பெரிய நடிகர் நீங்க, இந்த ஏழையின் வீடு தேடி வந்திருகிறீர்களே?" என்றேன்.

"ஒன்னுமில்ல அண்ணே! ஒரு சிறிய வேடம் இருக்கு. அதில் நடிக்க முடியுமா என்று கேட்டு விட்டு போகலாம் என்று வந்தேன்" என்றார்.

"இன்று நான் உள்ள நிலையில் வீடு தேடி வந்து இதைக்கேட்கணுமா, தம்பி?" என்றேன்.

"ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, நாளை படப்பிடிப்புக்கு வந்துடுங்க," என்று நேரத்தயும் படப்பிடிப்பு தளத்தயும் சொல்லி விட்டு சென்றார்.

 

அவர் சென்றதும் அப்படியே பிரமித்து அதே இடத்தில் இருந்தேன். என் மனைவி என்னை உலுக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தாள்.

 

"என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பித்து பிடித்தது போல் இருக்கீங்க?"

"இல்ல, எவ்வளவு பெரிய மனிதர் நம் வீடு தேடி வந்து நடிக்க கூப்பிட்டுட்டு போறாரே என்று நினைத்துப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன்."

"எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைங்க," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

இலங்கைச் செய்திகள்

இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது ; வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் தடைகளை விதிக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி இன்று ஆரம்பம் !

தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல,இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீங்களும் இதற்கு ஆதரவோ –என்ற சந்தேகம் எழுக்கின்றது-; தேசிய மக்கள் சக்தியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் காணி உரிமையாளர்



இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

Published By: Digital Desk 3

28 Mar, 2025 | 11:03 AM

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரவின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 முதல் 4 ஆம் திகதிகளில் தாய்லாந்தின் பேங்கொக்கிற்கு விஜயம் மேற்கொள்வார். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 4 முதல் 6 திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.

உலகச் செய்திகள்

 கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணக்கம் என அமெரிக்கா அறிவிப்பு - தடைகளை முதலில் நீக்கவேண்டும் என ரஸ்யா தெரிவிப்பு

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு: உளவு அமைப்பு குற்றச்சாட்டு

இடிபாடுகளிற்குள் இருந்து அலறல்களை இன்னமும் கேட்க முடிகின்றது -மியன்மாரின் மீட்பு பணியாளர்

மியன்மார் பூகம்பம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம் முடிவிற்கு வந்துவிட்டது - கனடா பிரதமர்

செங்கடல் பகுதியில் கடலில் மூழ்கியது சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி- ஆறுபேர் பலி



கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணக்கம் என அமெரிக்கா அறிவிப்பு - தடைகளை முதலில் நீக்கவேண்டும் என ரஸ்யா தெரிவிப்பு

Published By: Rajeeban

26 Mar, 2025 | 01:57 PM

கருங்கடலில் யுத்தநிறுதத்தைகடைப்பிடிப்பதற்கு ரஸ்யாவும் உக்ரைனும் இணங்கியுள்ளன.

சவுதிஅரேபியாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் இந்த வாக்குறுதியை இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளன.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கா இரண்டு தரப்பினரும் தொடர்ந்தும்நிரந்தர சமாதானத்தை நோக்கி பாடுபடவுள்ளனர் என தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 

இறையின் நினைப்பை இருத்து மனத்தில் !

 



 
















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …  அவுஸ்திரேலியா 



சினமதை அடக்கு சிறந்திடும் வாழ்வு
மனதை ஒடுக்கு மகிழ்ச்சியும் பெருகும்
தனமதை நாடிநீ ஓடா நில்லு
மனமதில் அமைதி மலர்வதைக் காண்பாய்

அறவழி இருப்பதை அகமதில் அமர்த்து
மறவழி செல்லா மனமதைத் திருப்பு
கறையுடை அனைத்தையும் களைந்துமே நில்லு
நிறையுனை அடைவதாய் நீயே உணர்வாய்

இன்சொல் என்றுமே இன்பமே நல்கும்
வன்சொல் என்பது வன்முறை காட்டும்
நன்செய் நிலமே நற்பயிர்க் குதவும்
நாளும் பொழுதும் நல்லதை நாடு

உதவும் எண்ணம் உயர்வினை அளிக்கும்
உதவா உள்ளம் ஒழிந்தே போகும்
அன்பு என்றுமே ஆனந்தம் அளிக்கும்
அளித்தால் அதுவே பேரின்ப மாகும் 

உருமாறும் உண்மைகள்!



 -சங்கர சுப்பிரமணியன்.





லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஜேலன் டாசன் என்ற பத்தொன்பது வயது கருப்பினச் சிறுவன் 2022 A6 மாடல் ஆடி காரைத் திருடினான் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிவான் வால்டர் கிரேசன் முன் நிறுத்தப்பட்டிருந்தான்.

ஆனால் அந்த குற்றம் பொய்யாக சித்தரிக்கப்பட்டு தன் மீது போடப்பட்ட வீண்பழி என்பதை வழக்கறிஞர் உதவியின்றி தானாகவே வாதாடி தான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தான்.

எங்கிருந்து அவனுக்கு அநீதியின் முகத்திரையை கிழிக்கும் மனவலிமையும் தன்னம்பிக்கையும் வந்தது? காரணம் அவனது தாயார். அவர் இருபது ஆண்டுகளாக வழக்கறிஞரிடம் உதவியாளராக பணி புரிபவர். அவர் தினமும் வழக்குகளில் சந்தித்த பல்வேறு அனுபவங்களை ஜேலனிடம் கூறுவார்.

இதனால் அரசு வழக்கறிஞர் எப்படி வாதிடுவார் அதற்கு எதிரணி வக்கீல் எப்படி
பதில் கொடுப்பார். வழக்குகள் எப்படி திசை திருப்பப்படும் சாட்சிகள் சரிவர இல்லாவிட்டால் எப்படி வழக்கு வலுவின்றி தோல்வியடையும் என்ற விபரங்கள் அனைத்தும் ஜேலனுக்கு ஒரு வழக்கறிஞரை விட நன்றாகவே தெரியும். இதுவே அவனை வழக்கில் வெற்றிபெற வைத்தது.

கீழேயுள்ள கதையை நான் எழுதக் காரணம் நான் படித்தறிந்த மேற்குறிப்பிட்ட அந்ந
வினோத வழக்குதான். உண்மை எவ்வாறு உருமாறி உலகை நம்ப வைக்கிறது என்பதை இப்புனைவு நம்மை நன்றாய்ப்
புரியவைக்கும்.

கீழ் நீதிமன்றத்தில் சக்கையனின் வழக்கில் கொடும்நாட்டுக்கு நாடுகடத்த வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததால்
அந்த வழக்கு பெரிய பரபரப்புடன் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த கொடும்நாடு என்பது நரகத்தைப் போன்றது. நரகத்தில் எண்ணெய்க் கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருப்பதுபோல் இங்கு வேறுவிதமான ஏற்பாடுகள் இருக்கும்.

நீதிமன்றத்தில் வழக்கைப் பற்றி பார்வையாளர்கள் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த படியால் நீதிமன்றம் சந்தையாக மாறியிருந்தது.

வீர அபிமன்யு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 மகாபாரதத்தில் அபிமன்யு, வத்சலா காதல் மிகவும் பிரசித்தமானது.


இந்தக் காதலை அடிப்படையாகக் கொண்டு மூன்று முறை அபிமன்யு கதை தமிழில் படமானது. 1940களில் ஜுபிடர் தயாரிப்பில் அபிமன்யு படமாகி வெற்றி கண்டது. தொடர்ந்து 1950களில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாயா பஸார் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. 1960களில் இதே அபிமன்யு, வத்சலா காதலும் , அபிமன்யுவின் வீரமும், வீர அபிமன்யு என்ற பேரில் படமானது.


முதல் அபிமன்யுவின் யூ ஆர் ஜீவரத்தினம், குமரேசன் ஜோடியாக

நடிக்க , எம் ஜி ஆர் அர்ச்சுனனாக நடித்தார். இரண்டாவதில் ஜெமினி, சாவித்திரி ஜோடியாக நடிக்க, எஸ் வி ரங்காராவ் கடோஜ்கஜானாக நடித்தார். மூன்றாவதில் ஏவி எம் ராஜன், காஞ்சனா ஜோடி சேர்ந்தார்கள். மாயா பஸாரில் அபிமன்யுவாக நடித்த ஜெமினி இதில் கிருஷ்ணராக நடித்தார். படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக வீர அபிமன்யு அமைந்தது.

அபிமன்யுவை வயிற்றில் சுமந்த படி அரைத் தூக்கத்தில் கதை கேட்கிறாள் அர்ச்சுனன் மனைவி சுபத்திரை. போர் நடக்கும் போது பத்ம வியூகத்தை உடைத்துக் கொண்டு அதனுள் நுழைந்து போரிடுவது எப்படி என்பதை அர்ச்சுனன் சொல்ல தாயின் கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு அதனை கேட்டு உம் கொட்டுகிறான் . உள்ளே நுழைந்த பத்ம வியூகத்தில் இருந்து வெளியேறுவது எவ்வாறு என்பதை அர்ச்சுனன் சொல்லத் தொடங்க திடீரென அங்கு வரும் கிருஷ்ணா பகவான் இடையூறு செய்து அவ்வாறு சொல்வதை தடுத்து விடுகிறார். அபிமன்யு வளர்ந்து உத்திரையை சந்தித்து இருவரும் காதலில் மூழ்குகிறார்கள் . கல்யாணமும் நடை பெறுகிறது. அஞ்ஞான வாசம் முடித்து நாடு திரும்பும் பாண்டவர் தங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தருமாறு கேட்டு கிருஷ்ணரை கௌரவர்களிடம் தூது அனுப்புகிறார்கள். கிருஷ்ணா தூது தோல்வியில் முடிகிறது. பாண்டவர், கௌரவர்களிடையே குருஷேத்திர போர் வெடிக்கிறது. போரில் புயல் என கலந்து கொள்ளும் அபிமன்யு பத்ம வியூகத்துக்குள் ஊடுருவிச் சென்று போரிடுகிறான். ஆனால் பத்ம வியூகத்தை தகர்த்து வெளியேறும் வித்தை அவனுக்குத் தெரியாமல் போகிறது. எதிரிகளால் சூழப்படுகிறான் அவன்.

இலங்கைச் செய்திகள்

 யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி பாராட்டு

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம் இனரீதியானதல்ல - அமைச்சர் உபாலி பன்னிலகே

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை!

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு !

அமைச்சர் எங்களை கொழும்பிற்கு அழைத்து விகாரை விவகாரத்திற்கு தீர்வை விரைவில் முன்வைப்பதாக தெரிவிக்கின்றார் - ஆனால்இங்கே புதிய கட்டிடத்தை திறக்கின்றனர் - தமிழ் மக்கள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் - தையிட்டிகாணி உரிமையாளர்


யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

21 Mar, 2025 | 09:37 AM

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தனர். அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேட்சை குழுக்களும் நியமன பத்திரத்தை தாக்கல் செய்தனர். 

உலகச் செய்திகள்

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க தயார் - உக்ரைன் ஜனாதிபதியிடம் டிரம்ப்

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள் - பிள்ளைகளின் உடல்களை சுமந்தபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்" - காசாவில் மீண்டும் பெரும் அவலம்

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து ஆராய்கின்றார் டிரம்ப்

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ - உலகின் மிகவும் மும்முரமான ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது.

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை பலவந்தமாக அகற்றிய பொலிஸார் - கூடாரங்கள் இடித்தழிப்பு

 பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் : உடல்நிலை நிலை எவ்வாறு உள்ளது..? 



உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க தயார் - உக்ரைன் ஜனாதிபதியிடம் டிரம்ப் 

Published By: Rajeeban

20 Mar, 2025 | 11:26 AM
image

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஒரு மணிநேரம் நல்லதொரு தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுடன் இணையவழிச் சந்திப்பும், அல்பெர் கமுயின் 'அயலான்' தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் குறித்த உரையாடலும்”


நாள்:
         சனிக்கிழமை 29-03-2025    

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

ஒருங்கிணைப்பு:  பேராசிரியர் க. பஞ்சாங்கம்


பேச்சாளர்கள்:

பேராசிரியர்  சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

பேராசிரியர்  ப.விவேகானந்ததாசன்

பேராசிரியர்  பா.இரவிக்குமார்


மேலதிக விபரங்களுக்கு: அகில்  சாம்பசிவம் -  001416-822-6316



அபயகரம் வழங்கும் 33வது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்வு 29/03/2025