உலகச் செய்திகள்


லாஸ் வெகாஸ் துப்பாக்கி சூடு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு  : 200 பேர் காயம்

பிரான்ஸில் 'அல்லாஹு அக்பர் ' எனக் கூறியபடி கத்திக்குத்து : இரு பெண்கள் பலி : உரிமை கோரியது ஐ.எஸ். அமைப்பு

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் ரஷ்­யா­வுக்கு முத­லா­வது முக்­கி­யத்­துவம் மிக்க விஜயம்

 59 பேரைக் கொன்று, 527 பேரை காயப்படுத்திய சூத்திரதாரி யார் தெரியுமா?




லாஸ் வெகாஸ் துப்பாக்கி சூடு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு  : 200 பேர் காயம்

02/10/2017 அமெரிக்காவின் லாஸ் வெகாஸில்  இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  50 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சில் குறித்த துப்பாக்கிதாரி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஆயுததாரி கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த இசை நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி   











பிரான்ஸில் 'அல்லாஹு அக்பர் ' எனக் கூறியபடி கத்திக்குத்து : இரு பெண்கள் பலி : உரிமை கோரியது ஐ.எஸ். அமைப்பு

02/10/2017 பிரான்ஸ் நகரின் தெற்கு பகுதியிலமைந்துள்ள மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கத்தியால் தாக்குதல் மேற்கொண்ட மர்மநபரை பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
குறித்த ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர், `அல்லாஹு அக்பர்` என உரக்கக் கத்தியவாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்னர்.

இறந்த இருவரும் 17 மற்றும் 20 வயதுடைய பெண்கள் என்றும், ஒருவர் கழுத்து அறுபட்டும், மற்றொருவர் கத்தியால் குத்தப்பட்டும் இறந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











நன்றி வீரகேசரி













சவூதி அரே­பிய மன்னர் சல்மான் ரஷ்­யா­வுக்கு முத­லா­வது முக்­கி­யத்­துவம் மிக்க விஜயம்
06/10/2017 சவூதி அரே­பிய மன்னர் சல்மான் ரஷ்­யா­வுக்கு தனது முத­லா­வது முக்­கி­யத்­துவம் மிக்க  உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு சென்­றுள்ளார்.

நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மாலை  மொஸ்கோ நக­ரி­லுள்ள வனு­கொவோ- – 2 விமா­ன­நி­லை­யத்தில்  தரை­யி­றங்­கிய மன்ன ரது விமா­னத்தின் நகரும் படிக்­கட்­டுகள் இடை­ந­டுவில்  செயற்­பட மறுத்­ததால் 81  வய­தான அவர், ஊன்­று­கோலின் உத­வி­யுடன் சுய­மாக படிக்­கட்­டு­களில் சிர­மப்­பட்டு இறங்க நேர்ந்­துள்­ளது.
சிரிய பிரச்­சினை குறித்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே முரண்­பா­டுகள் நிலவி வரு­கின்ற  போதும் அவர்  ரஷ்ய ஜனா­தி­பதி  விளா­டிமிர் புட்­டினை சந்­தித்து   சக்தி வள உடன்­ப­டிக்­கைகள் குறித்து கலந்­து­ரை­யாட எதிர்­பார்த்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அவரை ரஷ்ய பிரதிப் பிர­தமர்  திமித்ரி ரொகோ­ஸின்னும் இரா­ணுவ  குழு­வி­னரும் எதிர்­கொண்டு வர­வேற்­றனர். மன்­ன­ருடன்  இந்தப் பய­ணத்தில் 1,000 க்கு மேற்­பட்­ட­வர்­களைக் கொண்ட தூதுக் குழு­வொன் றும் பங்­கேற்­ற­தாக  கூறப்­ப­டு­கி­றது.
எண்ணெய் சந்­தையில் சவூ­தி ­அ­ரே­பி­யாவும் ரஷ்­யா வும் பங்­கா­ளர்­க­ளாக இருந்த போதும்  சிரி­யா­வி­லான போரில் இரு நாடு­களும் இரு துரு­வங்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றன.
ரஷ்யா, சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அஸாத்­திற்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்ற  நிலையில் சவூதி அரே­பியா எதிர்க்­கு­ழு­வி­ன­ருக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கி­றது.
இந்­நி­லையில் மொஸ்கோ நகரில்   விளா­டிமிர் புட்­டி­னுக்கும் சல்­மா­னுக்­கு­மி­டையில் இடம்­பெறும்  விசேட சந்­திப்பின் போது பாது­காப்பு மற்றும்  சக்தி வள உடன்­ப­டிக்­கை­க­ளுடன்  எதிர்­வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஒபெக் நாடுகளின்  கூட் டத்தையொட்டி  எண்ணெய் உற்பத்திகளி லான  குறைப்பை விரிவுபடுத்த நடவடி க்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.
விளாடிமிர் புட்டின் சவூதி அரே பியாவுக்கு 2007 ஆம் ஆண்டில் விஜயம் செய்திருந்தார்.  அவருக்கும் சவூதி அரேபிய மன்னருக் குமிடையிலான  இதற்கு முன்னரான சந் திப்பு 2015  ஆம் ஆண்டில்  இடம்பெற் றிருந்தது.   நன்றி வீரகேசரி










 59 பேரைக் கொன்று, 527 பேரை காயப்படுத்திய சூத்திரதாரி யார் தெரியுமா?

03/10/2017 லாஸ் வெகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி குறைந்தது 59 பேர் உயிரிழப்பதற்கும் 527 பேர் வரை காயமடைவதற்கும் காரணமான துப்பாக்கிதாரியான சூத்திரதாரி ஸ்டீஃபன் பேடக் என்பவர் வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
நேவாடாவில் உள்ள மெஸ்கியூட் பகுதியை சேர்ந்த 64 வயதான ஸ்டீஃபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்துள்ளார். அவர் மீது இதற்கு முன்னர் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், லாஸ் வெகஸ் தாக்குதலுடன் தொடர்புடையவராக கருதப்படும் இந்த சூத்தரதாரி ஒரு தீவிரமான சூதாட்டப் பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகில் முன்னர் குடியிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டீஃபன் பேடக், நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

லாஸ் வெகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும், பேடக்கின் இரு அறை கொண்ட வீட்டினை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்டனர்.
பொலிஸார் குறித்த சூத்திரதாரியான பேடக்கின் வீட்டினுள் நுழைந்து அறையை நெருங்கும் போது, அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மதக் கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனவும் இத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேடக் அறையில் தங்கியிருந்த, அவரது பெண் தோழியென நம்பப்படும் மரிலோவ் டென்லீயிடம் பேடக்கை கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகள் கோரியிருந்தனர்.
இந்நிலையில், மாண்டலே பே ஹோட்டலில் அறையை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டென்லீ அவருடன் இருந்திருக்கவில்லையெ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரிலோவ் டென்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதேவேளை, குறித்த பெண் பேடக்கின் தோழி எனவும் தனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை எனவும் அவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வெகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார் எனவும் சிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாகவும் சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி



No comments: