பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - அன்னைவேளாங்கண்ணி - ச. சுந்தரதாஸ் - பகுதி 24


.


தமிழ்த் திரை உலகில் பிரபல நடன ஆசிரியராகத் திகழ்ந்தவர் கே தங்கப்பன்.புதுமை இயக்குனர் ஸ்ரீதர் கலரில் இயக்கி இளைய நடிகர்கள் நடித்து வெற்றி பெற்ற காதலிக்க நேரமில்லை படத்திற்கு இவர் அமைத்த நடன அசைவுகள் இளம் ரசிகர்களை சுண்டி இழுத்தன.அப்படத்தைத் தொடர்ந்து பிசி டான்ஸ் மாஸ்டரானார் தங்கப்பன்.கிறிஸ்துவரான இவர் நாகப்பட்டணத்தில் அமைந்துள்ள அன்னைவேளாங்கண்ணி மாதா மீது கொண்ட பக்தியால் 1971ம் ஆண்டு அன்னையின் அற்புதங்களை விளக்கும் வகையில் அன்னைவேளாங்கண்ணி எனும் படத்தை தயாரித்து இயக்கினார் .அத்துடன் படத்திற்கான கதை,நடனம் இரண்டையும் உருவாக்கியிருந்தார்.

அன்று திரை உலகில் பிரபலமாக இருந்த ஜெமினி கணேசன் , ஜெயலலிதா, சிவகுமார் , பத்மினி , சுந்தரராஜன்,மனோரமா , எஸ் வீ சுப்பையா,நாகேஷ்,சச்சு ,முத்துராமன்,கே ஆர் விஜயா ,ராமாபிரபா ,மாஸ்டர் சேகர் ,தேங்காய் சீனிவாசன் ,தேவிகா ,ஸ்ரீகாந்த் ,ஸ்ரீவித்யா என்று ஏராளமான நடிகர்கள் படத்தில் நடித்தார்கள்.இவர்களுள் பலர் இலவசமாகவோ அல்லது சொற்ப ஊதியத்திலோ இதில் நடித்திருந்தார்கள்.

வண்ணப் படமாக உருவான அன்னைவேளாங்கண்ணி , அன்னையின் மகிமையை விளக்கும் மூன்று கதைகளை கொண்டு தயாரானது.கால் ஊனமுற்ற சிறுவனுக்கு நடக்கும் சக்தியை அன்னையருளிய காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.இதில் சிறுவனாக மாஸ்டர் சேகர் அருமையாக நடித்திருந்தார்.நடக்க இயலாமல் அவர் தரையில் ஊர்ந்து ஊர்ந்து நடப்பது ரசிகர்களை வாட்டியது ,அவரின் தாயாக பத்மினி நடித்தார்.

போர் தின்ற எழுத்தாளர் நெல்லை க.பேரன் 75 நினைவுகளில்

 ஈழத்தில் ஒரு எழுத்தாளர் குடும்பமே ஒன்றாகப் படுகொலை


செய்யப்பட்டது என்ற அழியா வடு கொண்டது எழுத்தாளர் நெல்லை க.பேரனின் வாழ்க்கையில் தான்.


அது நடந்தது ஜூலை 15, 1991 இல்.
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான நெல்லை க.பேரன், அவரின் மனைவி உமாதேவி, மகன் உமா சங்கர், மகள் சர்மிளா என்று அந்த ஒட்டுமொத்தக் குடும்பமே அந்த ஜூலை 15 இரவில் இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுப் படுகொலையானதைப் படித்தது இன்றும் நினைவில் தங்கி ஈரக்குலையை வருத்தும்.

காரணம், அதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்னுடைய லைப்ரறி சேர்
"இந்தாரும் பிரபா! எந்த நேரமும் செங்கை ஆழியனைத் தேடாதையும்
இவரையும் படியும் என்று எடுத்துத் தந்த புதுப் புத்தகம் தான்
நெல்லை பேரனின் 'சத்தியங்கள்' என்ற சிறுகதைத் தொகுதி. எமது கொக்குவில் இந்து நூலகத்துக்குப் புதிதாக வந்திருக்கிறது என்பதை அந்த வாசனையே காட்டிக் கொடுத்தது.
எனக்கு அந்தப் புது எழுத்தும் பிடித்துப் போய் ஒரே மூச்சில் வாசித்து விட்டு லைப்ரறி சேருக்கும் நன்றி சொன்னேன் அப்போது.

இன்றைய நாள் டிசெம்பர் 18, நெல்லை க.பேரன் இருந்திருந்தால் அவருக்கு 75 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார் தன் குடும்பம் சூழ.

நெல்லை க.பேரனின் 'சத்தியங்கள்" சிறுகதைத் தொகுதியைப் படிக்க

நன்றி :
நூலகம் - ஈழநாடு, முரசொலி மற்றும் சிறுகதை ஆவணப்பகிர்வு
சிவவதனி பிரபாகரன் - நெல்லை க.பேரன் குடும்பப் படம்

கடனில் மூழ்கும் தேசம் ! மீண்டும் 1970 யுகத்திற்கு தேசம் செல்லுமா…? அவதானி


கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் – என்ற வரிகளை கம்பராமாயணத்தில் பார்க்கலாம்.  மாற்றான் மனைவியை கடத்திவந்து, இறுதியில் போர்க்களம் புகுந்து,  “ இன்று போய் நாளை வா….. “  என எள்ளிநகையாடப்பட்டு,  இறுதியில் நாட்டையும் இழக்கும் சூழ்நிலை வந்தபோதுதான்  இலங்கேஸ்வரனின் மன நிலையை கம்பர் அவ்வாறு வர்ணித்தார்.

அந்த இலங்கேஸ்வரன் ஆண்ட தேசம்தான் தற்போது கடனில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளிடம் நிதியுதவி கோரி செல்லவேண்டிய இக்காலத்தில், இன்றுபோய் நாளை வா..? என்று நிதியமைச்சரை திருப்பி அனுப்பும் சூழ்நிலை வந்துள்ளது.

பெருந்தொற்றினால், பெரிய வல்லரசுகளும் பொருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் காலப்பகுதியில் இலங்கைபோன்ற மூன்றாம் உலக, வளர்முக நாட்டின் கதி எவ்வாறிருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.

கடந்த 2020 தொடக்கத்தில் கொரோனோ பெருந்தொற்று வந்தவுடன்,  நாடு முடக்கப்பட்டு வர்த்தகமும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்தொன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

     இலங்கையில் பனைவளம் சிறப்பாகவே இருக்கிறது.


இலங்கையில் இருக் கும் பனையைவிட இந்தியா வில் காணப்படும் பனையின் பெருக்கம் மிகவும் அதிகம் என்றுதான் 
சொல்லலாம்.   இலட் சக்கண க்கில் இலங்கையில் பனை இருக்க  , இந்தியாவிலோ கோடிக்கணக் கில் இருக்கிறது பனை என்பது மிகவும் முக்கியமாகும்.இந்தியா எங் கணும் இருகின்ற பனைகளை ஒன்பது கோடி என்று கணக்கிட்டிருக் கிறார் கள். அப்படி இருக்கும் பனைகளில்  ஐந்து கோடிப் பனைமர ங்கள் தமிழ் நாட்டிலே இருக்கின்றன என்பது மிகவும் முக்கிய மான செய்தியாகும்.

    வட தமிழ்நாட்டில் வேலூர்ராணிப்பேட்டை,  திருப்பத்தூர்திருவண்ணாமலை,   தருமபுரி,   கிருஷ்ண கிரி,    மாவடங்களிலும் - தென் தமிழ் நாட்டில் ராமநாதபுரம்,   சிவகங்கை,   விருதுநகர்,   நெல்லை,   தேனீமற்றும் திண்டுக்கல்   மாவட்ட ங் களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இலங்கைச் செய்திகள்

2022 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆண்டாக பிரகடனம்

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு விடுதலை

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்; பக்தர்களுக்கு தடுப்பூசி அட்டை அவசியம்

வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி!

நல்லூர் ஆலயத்தில் சீனத்தூதுவர் வழிபாடு

யாழ். பல்கலைக்கு அருகில் வாள் வெட்டு


2022 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆண்டாக பிரகடனம்

பிரதமர் மஹிந்த அங்கீகாரம்

சைவத் தமிழ் உலகுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் (17) அலரி மாளிகையில் நடைபெற்றது.

உலகச் செய்திகள்

 அமெரிக்கா சூறாவளி: உயிரிழப்பு உயர்வு; அவசர நிலை அறிவிப்பு

பிரிட்டனில் கொரோனா தொற்று சாதனை அளவுக்கு அதிகரிப்பு

முன்னர் காணாத வேகத்தில் பரவிவரும் ‘ஒமிக்ரோன்’திரிபு

ஆப்கானிய தாக்குதல்: அமெரிக்க படையினருக்கு தண்டனையில்லை

சூரியனின் அருகில் சென்ற விண்கலம்

இரு கொரியாக்களின் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புதல்


அமெரிக்கா சூறாவளி: உயிரிழப்பு உயர்வு; அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டக்கூடும் என்று அந்த மாநில ஆளுநர் கூறியிருப்பதோடு, உயிர் தப்பியோரை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு


அவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக கலை, இலக்கியப் பணிகளையும் எழுத்தாளர் விழாக்களையும் முன்னெடுத்துவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும் கடந்த 12 ஆம் திகதி மெய்நிகரில் நடைபெற்றது.

சங்கத்தின்  தலைவர் மருத்துவர் ( திருமதி ) வஜ்னா இரஃபீக் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து நடப்பாண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு


நடைபெற்றது. திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி,  பதவிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களை வாசித்தார்.

அதன்பிரகாரம் பின்வருவோர் ஏகமனதாக தெரிவாகினர்: 

காப்பாளர் :  ( கவிஞர் ) திரு.  இ. அம்பிகைபாகர்.  

தலைவர் :  திருமதி சகுந்தலா கணநாதன்.

துணைத்தலைவர்கள் :  மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் , திரு. அருண். குமாரசாமி.  

செயலாளர் :   டொக்டர் நொயல் நடேசன்.  

துணைச்செயலாளர் :  திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம்.  

நிதிச்செயலாளர்  :   திரு. இப்ரகீம் இரஃபீக்.

துணை நிதிச்செயலாளர் : திரு.  லெ. முருகபூபதி.  

இதழ் ஆசிரியர்  திரு. பிரம்மேந்திரன் தாமேதரம்பிள்ளை.                      

செயற்குழு உறுப்பினர்களாக,   திருவாளர்கள்  சங்கர சுப்பிரமணியன்,  பார்த்தீபன் இளங்கோவன்,  ‘பாடும் மீன்                சு.  ஶ்ரீகந்தராஜா, தெய்வீகன், கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர் திருமதிகள்  சிவமலர் சபேசன்,  ஆழியாள் மதுபாஷினி ஆகியோர் தெரிவாகினர்.

உறுப்பினர் திரு. நடேசன் சுந்தரேசன் சமர்ப்பித்த தீர்மானங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் யாழ். பாஸ்கர் மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார்


மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட  எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70  ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும்  கதைத் தொகுப்பின் கதை    ( சிறுகதை )    நடந்தாய் வாழி களனி கங்கை  ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள்                      ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு  இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 )    ஞாயிற்றுக்கிழமை மாலை  4-00  மணிக்கு அவுஸ்திரேலியா   மெல்பனில்  Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806மண்டபத்தில் நடைபெறும்.   

மகாகவி பாரதியின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும்.

மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு,  திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.

திருமதி சரண்யா மனோசங்கர் தமிழ் வாழ்த்து பாடுவார்.

மூன்று பகுதிகளாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்றினால் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவின் உருவப்படத்திற்கு  விளக்கேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரைப்பற்றிய நினைவுரை நிகழ்த்தப்படும்.

வாழ்த்தியே நிற்பதுதான் மாண்புடைய வாழ்வாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



வாழுகின்ற காலமோ யாருக்கும் தெரியாது
வீழுகின்ற காலமோ யாருக்கும் தெரியாது
வாழுகின்ற காலமதை வரமாக மனமெண்ணி
வாழ்த்தியே நிற்பதுதான் மாண்புடைய வாழ்வாகும் !

மனமுடைய வைப்பதற்கு வாழ்வெமக்கு வரவில்லை
மற்றவரைக் குழப்பதற்கும் வாழ்வெமக்குச் சொல்லவில்லை
குறைபார்த்து குழப்புதற்கும் வாழ்வெமக்கு புகட்டவில்லை
குறைகாணா நிறைகாண வாழ்வெமக்கு வாய்த்துளது  !

மற்றவரின் கண்ணீரால் வாழ்வெமக்கு வாய்க்காது
வம்புதும்பு பெருகிவிடும் வாழ்வெமக்குச் சுவைக்காது
உற்றநட்பை உருக்குலைக்க வாழ்வெமக்குச் சொன்னதில்லை
உண்மையுடன் வாழ்வென்று உணர்த்துவதே வாழ்வாகும் !

ஆசானை அவமதிக்க வாழ்வெமக்கு சொல்லவில்லை
அறமிழந்து அவதிப்பட வாழ்வெமக்கு வாய்க்கவில்லை
பேசாத மொழிபேசி பெருங்கலக்கம் உருவாக்க 
வாழ்வெமக்குச் சொல்லவில்லை மனமிருத்தல் அவசியமே ! 

பால்வெளிப் பாதையில் - சுரேஷ் ராஜகோபால்

 .



பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன்

முதலில் கதிரவன் ஒளி

கொஞ்சம் துரத்தியது

உற்சாகம் தாங்கவில்லை

உத்வேகம் குறையவில்லை

 

சில பொழுது கடந்த பின்னே

கூட வந்ததோ கும்மிருட்டு

அச்சம் தலைதூக்க

மிச்சமும் கரைந்தோட

பயணம் மட்டும் தொடர்ந்து

 

வழியிலே இரவு பகல் கிடையாது

போகுமிடமும் தெரியாது

கடக்குமிடமும் புரியாது

போகும் வேகமும் குறையாது

தாகம் பசி கிடையாது

 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 71 யாழ். பல்கலைக்கழகமும் இனவிடுதலைப்போரும் ? ! பல்கலைக்கழக மாணவர் கடத்தலிலும் முரண்நகை ! செய்திகள் எழுதி செய்தியாகிப்போனவர்கள் ! முருகபூபதி


எனது எழுத்துலக வாழ்வு பற்றிய இந்தத் தொடரை எழுதும்போது, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தை பற்றிச்சொல்லாமல் கடந்து செல்லமுடியாது.

நான் பல்கலைக்கழகங்களில் படித்தவனல்ல. ஆனால், அவற்றின் படிகளில் ஏறி இறங்கியிருக்கின்றேன். சிலவற்றில் மாணவர் மத்தியில் இலக்கிய உரையாற்றியிருக்கின்றேன்.

எனது பல நண்பர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து  பட்டதாரிகளாக வெளியேறி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களாகவும் மிளிர்ந்தார்கள்.

மேலும் பல நண்பர்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும்


பணியாற்றினார்கள். தற்போதும் அவ்வாறு பணியாற்றுபவர்களுடன் நெருக்கமான நட்பையும்  உறவையும் பேணுகின்றேன்.

ஒரு காலத்தில் சேர். பொன். இராமநாதன் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட யாழ். பரமேஸ்வராக் கல்லூரிக்கு 1964 ஆம் ஆண்டு முதல் தடவையாக சென்றிருக்கின்றேன்.

அப்போது எனக்கு 13 வயது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த எனக்கும் எனது தாய் மாமனார் மகன் முருகானந்தனுக்கும் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியில்தான் அனுமதி கிடைத்தது. அச்சமயம் மாமாவின் மூத்த மகன் ஶ்ரீஸ்கந்தராஜா யாழ். இந்துக்கல்லூரியிலும், எங்கள் குடும்ப நண்பர் நடராஜா என்பவரது மகன் சண்முகநாதன் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் ஆண்கள் விடுதிகளில் தங்கிப்படித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் விடுமுறைக்கு வந்து திரும்பியவேளையில் நானும் முருகானந்தனும் யாழ். ஸ்ரான்லிக்கல்லூரிக்கு செல்லத்தயாராகியிருந்தோம்.

எங்கள் அப்பா லெட்சுமணன் ஒரு கம்பனியின் பிரதேச விற்பனை பிரதிநிதி       ( Sales Representative ) . அவர் எங்கள் நால்வரையும் தனது வாகனத்தில் அழைத்துச்சென்றார்.

பாரதி தரிசனம் - அங்கம் 12 பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் ! குயில் கூவுமா…? கத்துமா…? முருகபூபதி


 “ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று மொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது   “ என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக
துணைவேந்தர் மருத்துவர் சுதா ஷேசய்யன் தெரிவித்திருப்பதாக அண்மையில் சென்னை தினமணி இணைய இதழில் படிக்க நேர்ந்தது.

அந்த இணைப்பினை ஒரு இலக்கிய சகோதரி எனக்கு அனுப்பியிருந்தார்.


சென்னை ரயில்வேயில் முக்கிய பதவியிலிருக்கும் பூமா வீரவல்லி , பாரதியின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதன் தொகுப்பின் வெளியீட்டு அரங்கில்தான் மருத்துவர் சுதா ஷேசய்யன் மொழிபெயர்ப்பிலிருக்கக்கூடிய சவால்கள் பற்றி பேசியிருக்கிறார்.

பாரதி, பொருள் மயக்கம் தரக்கூடிய கவிதைகளையும் எழுதியிருப்பவர் என்பதை கடந்த அங்கத்தில் பார்த்தோம்.

அவ்வாறிருந்தும்,  தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத பலர் பாரதியின் கவிதைகளை தமது மொழிக்கு மாற்றியிருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு பொதுவான ஊடகமொழியாக இருந்திருப்பது ஆங்கிலம்தான்.

சோவியத் நாட்டில் உக்ரேயினை தாய்மொழியாகக்கொண்டிருந்தவர் கட்டிடத் தொழிலாளி விதாலி ஃபுர்ணிக்கா.  இவர் வேலை நேரத்தில் கிடைத்த மதிய உணவு வேளையில்,  அருகிலிருந்த நூலகம் சென்று படித்த புத்தகம் பாரதியின் கவிதைகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

நாவலரின் சிந்தனையில் மலர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் சேர்.பொன்னம்பலம் இராமநாதன்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா   
                                   

 

 கனவு காண்பது என்பது யாவருக்கும்

விருப்பமானதுதான்.அந்தக் கனவுக ளும் நல்ல கனவாக அமை ந்துவிட்டால் அதுவே பேரானந்தமாகிவிடும்.  " கனவு காணுங்கள் " என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அண்மையில் மறைந்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் " கனவு காணுங்கள் " என் பதை வலியுறுத்திச் சொல்லி நின்றார்.கனவு என்பது உண்மையா ? பொ ய்யா ? என்று ஆராய்ச்சிக்குள் போகவே வேண்டாம். நல்ல கனவுகளைக் கண்டால் அது நல்லதுதானே ! நல்லவர்கள் , வல்லவர்கள், ஞானிகள், கனவு கண்டார்கள். அவர் களின் கனவு தங்களின் நலன் சார்ந்தாக அமையாமல் சமூக நலன் சார்ந்ததாகவே காணப்பட்டது.அப்படி அவர்கள் கண்ட கனவுகள் , கனவாகமட்டுமே அமைந்துவிடாது நனவாயும் ஆகியே விட்டிருக்கிறது என்பது தான் முக்கியமாகும். அவர்களின் கனவுகள் பலித்து அதனால் மக்களின் வாழ்வில் நல்ல பல விளைவுகள் பெருகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

 நல்லைநகர் நாவலர் பெருமானை நாம் மறந்துவிட


முடியாது.அவரின் வருகை சமூகத்துக்குப் பெருவெ ளிச்சத்தைக் காட்டியது எனலாம். குறிப்பாகச் சைவ உலகுக்கும் , தமிழ்ப் பாரம்பரியத்துக்கும்உரமாய் , வரமாய் வாய்த்தது என்பதை எவருமே மறுத்துரைத்திட முடியாது. அந்த அளவுக்கு இம்மண்ணில் வாழ்ந் தகாலம் முழுவதும் அப்பெருமகனார் அளப்பரிய பணிகளை ஆற்றி நின்றார்.அதனால் அவர் ஒரு யுகபுரு ஷராகவே பார்க்கப்படுகிறார். அவரால் ஒரு புதுப்பாண்பாடு, ஒரு புதுக்கலாசாரமே தோற்றம் பெற்றிரு க்கிறது. அவராற்றிய பணிகள் வரலாற்றில் பெரும் பொக்கிஷமாய் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

“ காலம் கடந்து பேசப்படும் மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனம் காலத்தையும் முந்தியது “ மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்வில் எழுத்தாளர் முருகபூபதி கருத்துரை

 “ சமகாலத்தில் பாரதி, பாரெங்கும் பேசப்படுகிறார். தொடர்ந்தும்


பேசப்படுவார்.  எனினும் அவர் மறைந்த 1921 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், அதன்பின்னர் பல வருடங்களும் இவ்வாறு பேசப்படவில்லை என்பது பாரதி இயல் ஆய்வாளர்களின் முடிவாக இருக்கிறது. பாரதி மறைந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரே இந்தியா சுதந்திரமடைகிறது. குறிப்பிட்ட கால் நூற்றாண்டு காலத்திலும் பாரதி பெரிதாக பேசப்படாதமைக்கு அன்றிருந்த பிரித்தானிய ஆட்சி அதிகார சூழல் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கலாம்.


ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அதாவது ஏறக்குறைய இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பே,

 “ எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு

சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே  “ என்று கிடைக்கவிருக்கும் சுதந்திரம் குறித்து தீர்க்கதரிசனத்துடன் பாரதி பாடிவிட்டார். “

இவ்வாறு நேற்று முன்தினம்  11 ஆம் திகதி  பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை தமிழ்ச்சங்கம் ஆரம்பித்திருக்கும்  மகாகவி  பாரதி பன்னாட்டு கருத்தரங்கத்தின்  தொடக்க நாள் அரங்கில் உரையாற்றிய அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. முருகபூபதி கருத்துரை வழங்கும்போது தெரிவித்தார்.

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் லலிதா தலைமையில் மெய்நிகரில் நடந்த இந்த தொடக்கவிழாவில் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் முனைவர்  மன்னர்  மன்னர்  கோ. பாரதி ஆகியோரும் உரையாற்றினர்.