இன்று புனித வெள்ளி தினம் 03 04 2015

.

புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் சமய ஆண்டில் ஒரு முக்கியமான நாளாகும். இது உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூருமுகமாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் கிறிஸ்தவர் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர். இவை பொதுவாக இயேசு சிலுவையில் அறையப்படுவதை நினைவுகூரும் வகையிலிருக்கும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுபது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.
 இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது. இயேசு மரித்த நாள்   விவிலியத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இயேசு மரித்த நாளை சரியாக கணக்கிட முடியாது. விவிலியத்தில் இயேசு நிசான் மாதம் 14 அல்லது 15 ஆம் நாள் மரித்ததாக கூறப்பட்டுள்ளது. டைபிரியஸ் சீசரின் காலம் என்பதை விட ஆண்டு பற்றிய குறிப்பேதும் இல்லை. அனால் நான்கு நற்செய்திகளின் படியும் இயேசு மரித்தது ஆயத்தப்படுத்தல் நாளிலாகும். (ஓய்வுநாளுக்கு முதல் நாளாகும்) இதன் படி இயேசு மரித்தது வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்பிரல் 3 ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும் ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23 க்கும் மே 7 க்குமிடையே ஒரு வெள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.

குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. வித்யாசாகர்

.

நான் குட்டையானவன்
குட்டையான கால்கள் எனது கால்கள்
நடந்து நடந்தே –
பாதி குட்டையாகிப் போனேன் நான்,
அந்தத் தெருவிற்குத் தான்
தெரியும் – எனது
நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும்
ஒரு வரலாறு இருக்கிறதென்று;
அப்போதெல்லாம் அங்கே
பனைமரம் அதிகம்
வேலமுள் காடுதான் எங்கும்..
நாங்கள் மாடு ஓட்டி
பனைமரப் பக்கம் கட்டிவிட்டு
நொங்கறுத்துத் தின்போம்
ஆடுஓட்டி
வேலங்காய் உலுக்கிப்போட்டு
கொடுக்காப்புளி பறிக்கப்போவோம்
உச்சிவெயில்
மண்டையில் இறங்கி
வயிற்றைக் கிள்ளினாலும்
கண்களுக்கு மாடு தின்னும் பச்சைப்பசேல்

திருமுறை முற்றோதல் 05 04 2015

.திருமுறை முற்றோதல்












அடிலெய்டில் தமிழர் ”ஆட்டம்”

.


அடிலெய்டில் தமிழர் ஆட்டம்
கலைகள் சிதறினகால்கள் ஆடின
கண்கள் நிலைத்தன கரங்கள் ஒலித்தன
 அரங்கம் விதிர்ந்ததுஅடிலெய்ட் அதிர்ந்தது
அனைவரும் கூடினர் அமைச்சர் ஆடினர்.
மார்ச் 27 ஆம் தேதி அடிலெய்ட் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டம் கலை நிகழ்ச்சி அடிலெய்டில் சிறப்பாக நடந்தது.விழாவுக்கு சார்ல்ஸ் ஸ்டூவர்ட் நகர மேயர் தலைமை வகித்தார். பல்லின கலாச்சார அமைச்சர் ஸோ பெட்டிசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சிட்னி வழக்கறிஞர்  கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன்  சிறப்புரை ஆற்றினார். விழாவினை ஏற்பாடு செய்திருந்த அடிலெய்ட் தமிழ் சங்கத் தலைவர் லாரன்ஸ் அண்ணாதுரை அறிமுக உரை ஆற்றினார்.

ஸ்ரீமத் பாகவத சப்தாக ஞான யக்ஞம் 02/ 04 /2015 முதல் 09/04/2015 வரை


ஈஸ்டர் விடுமுறை காலத்தில் ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்கள் பாகவத்தையும் அதில் அடங்கிய ரகஸ்ய தத்துவங்களையும் தமிழில் விளக்குவதை கேட்டு அனுபவிக்க உங்கள் எல்லோரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இடம் : St Joseph's Centre for Reflective Living

64 Mackillop Drive, Baulkham Hills NSW 2153

அனுமதி இலவசம் !!!
  .

மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க விளையாட்டு போட்டி

.
மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் - சிட்னி-கன்பரா கிளை
மறைந்த அதிபர் திரு பொன் கனகசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தும் அவரது நினைவு தினமும் விளையாட்டு போட்டிகளும்.

இந்த நிகழ்வு ஏப்பிரல் மாதம் 6ம் திகதி காலை 9.00மணியிலிந்து பி.ப 5மணிவரை ஹோம்புஷ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் நடைபெறும். 

இலக்கியப் பதிவுகளினூடாக நீர்கொழும்பூர் நினைவுகள்

   என்.செல்வராஜா -   நூலகவியலாளர்,
  (தொகுப்பாசிரியர்,   நூல்தேட்டம்:   ஈழத்துத்  தமிழ்  நூல்விபரப்பட்டியல் )

நீர்கொழும்பு,  தென்னிலங்கையின்  ஒரு  கடலோரத்  தமிழ்க்கிராமமாக,   தனித்துவமான  மொழி  வழக்குடன்  திகழும்  ஒரு வாழிடம்.    அதுவே   என்  இளமைக்காலத்தின்  வசிப்பிடம்.   தந்தையார் அமரர்   வ.நடராஜா -  அந்நாட்களில்  இந்து  வாலிபர்  சங்கத்துடன் தன்னை  இணைத்துத்  தமிழ்ப்பணியாற்றிய  ஒரு  பொது வேலைப்பகுதி     ஓவசியர்.     கடற்கரைத்தெருவில்,   தமிழகம்  என்ற பெயர் கொண்ட  எமதில்லத்திலேயே   எனது   இளமைக்காலம் கழிந்தது.     அன்றைய    விவேகானந்த   மகா   வித்தியாலயத்தில்   எனது பள்ளிக்காலம்  கழிந்து.    1970  இல்  எமது  தந்தையாரின்   மறைவின் பின்னர்  அந்த   மண்ணைவிட்டு,    பதினாறு    வயதில் யாழ்ப்பாணத்திற்குப்  புலம் பெயர்ந்து  செல்ல   நேர்ந்தது. அன்னையாரின்   ஊரான  ஆனைக்கோட்டையில்    எனது   எஞ்சிய பாடசாலை    வாழ்வு  தொடர்ந்ததும்    கடந்து  போன வரலாறு. அங்கிருந்து   திருநெல்வேலி,   கொழும்பு    என்றாகி  இன்று   லண்டன் வரையில்  தொடர்கின்றது    எனது  புலப்பெயர்வு.

அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடாத்தும் ‘ரேடியோத்தோன்”

.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடாத்தும் 13ஆவது ‘ரேடியோத்தோன்” நிதி சேகரிப்பு நிகழ்வு.

இந்த  ‘ரேடியோத்தோன்” நிதி சேகரிப்பு நிகழ்வு ஏப்பிரல் மாதம் 3ம் திகதி இன்பத்தமிழ் வானொலி ஊடாகவும், மெல்போர்ன் 3CR தமிழ்க் குரல் வானொலி ஊடாகவும் காலை 9மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடைபெறும்.

14 வருடமாக இயங்கி வருகின்ற அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம், உங்கள் நிதியுதவியுடன் 4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் மருத்துவ, பல் வைத்திய மற்றும் சுகாதாரத் தி;ட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.


சிட்னி முருகன் ஆலய கொடியேற்றத்திருவிழா Vidio 25.03.2015

.

சங்க இலக்கியக் காட்சிகள் 44- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

என்னை மறந்துவிடு, அவளோடாவது இருந்துவிடு!

வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதநிலத்து மக்கள் உளவுத்தொழிலில் உயர்ந்து விளங்கினார்கள். போதிய வருமானம், பொழுது போக்குதற்கு கிடைத்த அளவற்ற நேரம் என்பவற்றால் நிறைவான வாழ்க்கையிலே அவர்கள் மகிழ்ந்தார்கள். கலைகளிலே சிறந்தார்கள். களியாட்டங்களிலே மிதந்தார்கள். அத்தகையதொரு மருதநிலத்திலே காதல்வயப்பட்டு அவளும் அவனும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். அளவற்ற வசதியும் வாய்ப்பும் அவனுக்கு வீட்டுச் சாப்பாட்டைவிட வெளிச் சாப்பாட்டில் விருப்பத்தை உண்டாக்கின. பரத்தையரை நாடினான். அவர்களோடு கூடினான். மனைவியை மறந்தான். வீட்டைத் துறந்தான்.
அவன் பரத்தையரோடு இன்புறுகின்ற செய்தியை ஊர்மக்கள் கண்டகண்ட இடங்களில் எல்லாம் கதைக்கத் தொடங்கினார்கள்.

உலகச் செய்திகள்


'சிங்கப்பூரின் தந்தை" லீ க்வான் யூ மரணம்

பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

விமான விபத்து: கருப்பு பெட்டி மீட்பு, தீவிரவாத தாக்குதல் இல்லையாம், 6000 அடி உயரத்தில் மீட்பு பணிகள்

நைஜீரிய நகரிலிருந்து போகோ ஹராம் போராளிகளால் 500 சிறுவர்கள் கடத்தல்

கொக்பிட்டில் இருந்து வெளியேவந்த விமானி, மீண்டும் உள்ளே செல்ல முடியவில்லை, கொக்பிட் உள்ளே பூட்டப்பட்டிருந்தது :வெளியாகின அதிர்ச்சி தகவல்கள்



'சிங்கப்பூரின் தந்தை" லீ க்வான் யூ மரணம்

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ, தனது 91 வயதில் இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் காலமானார். 
நவீன சிங்கப்பூரை உருவாக்கி,  பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி பெற செய்த சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ, நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 

விழுதல் என்பது எழுதலே - பகுதி 44 எழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்

. 
திரு.மதுவதனன் மௌனசாமி அவர்களின் கலை இலக்கிய ஈடுபாடு கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளர்.
கதை தொடர்கிறது.........
"நேற்றோ முந்தநாளோ கனடாவில இருந்து ஒரு போன் வந்திருந்து. திருப்பி எடுக்க காசு இருக்கேல. காசு போட்டுட்டு எடுக்கோணும் எண்டு யோசிச்சானான். மறந்துபோனன். அதுக்கும் கலாவுக்கு ஏதும் சம்மந்தம் இருக்குமோ… சீ.. என்னை உப்பிடி கேவலமா யோசிசவளைப்பற்றி நானெதுக்கு யோசிக்கவேணும்… உவள்தான் தலையிடிக்கு காரணமா இருக்கும்" சீலன் ஏதேதோவெல்லாம் யோசித்தான்.

வீட்டுக்கு வந்து விவேக் அங்கிளிடம் வைத்தியரைச் சந்தித்தது பற்றியும் நடந்தவற்றையும் கூறினான்.

"ஓம் சீலன்இ தலையில ஸ்கான் பண்ணுறது நல்லதில்லை எண்டும் ஆக்கள் சொல்லுறவையள். உந்த யோசினைகளை குறைத்துப் பார்த்தால் தெரியும் தலையிடி குறையுதோ எண்டு."

"அங்கிள் உந்த ஸ்கானில வேற வேற வகையள் இருக்கு. எம்ஆர்ஐ ஸ்கான் பிரச்சினை குடுக்குறதில்லை. சீ.ரீ ஸ்கான் கொஞ்சம் அதிகமான கதிரியக்கத்தை தலைக்குள்ள செலுத்தும் அதுவும் கனதரம் தலையைக் கொண்டே குடுத்தாத்தான் பிரச்சினை" தான் படித்தவற்றில் தெரிந்ததைக் கூறினான்.

"சரிதான் சீலன்இ பேசாம தலையைக் கொண்டே குடுக்காம இருக்கிறது நல்லம். விசாவும் கிடைச்சுட்டுத்தானே. கொஞ்சம் யோசனைகளைக் குறைத்து தலையிடியையும் குறைத்துப் பார்க்கலாம்தானே."

தமிழ்முரசுஅவுஸ்திரேலியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது


.

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூ உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை 23.03.2015  அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் அதிகாலை 3.18 அளவில் பிரிந்ததாக அந்நாட்டு பிரதமர் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் தெரிவித்தார். லீ, கடந்த மாதம் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்முரசுஅவுஸ்திரேலியா  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது 

மூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலகத்துக்கு...‏

.

ஒரு தலைமுறைக்குள்ளாகவே தனது நாடு மூன்றாம் உலக நாடு என்ற நிலையிலிருந்து முதல் உலக நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு அதை சாதிக்கவும் செய்தார் லீ குவான் யூ.
லீ குவான் யூ குறைந்தபட்சம் 97 வயது வரையாவது வாழ்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியராக எனது விருப்பம். அப்படி வாய்ப்பிருந்தால், அதாவது 2020-ல், இந்தியாவைப் பற்றி சற்று நல்ல விதத்திலான கருத்து லீக்கு ஏற்பட்டிருக்கலாம். 2007-ல் ‘இந்தியாவின் அமைதியான எழுச்சி’யைப் பற்றி எழுதி இந்தியர்களின் அன்புக்குப் பாத்திரமானார் லீ. ஆனால், 2012-ல் ‘மேன்மையை அடைய முடியாமல் போன தேசம்’ என்று இந்தியாவை விமர்சித்தார்.
இந்தியாவைப் பற்றி அவரிடமிருந்து கடைசியாக நாம் அறிந்துகொண்ட கருத்து இதுதான் என்பது துரதிர்ஷ்ட வசமானது. அதற்குப் பிறகு உடல்நலக் குறைவினால் அவர் முடங்கிவிட்டார். இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில்லிடம் இந்தியாவைப் பற்றி லீ தெரிவித்த கருத்துக்கள் இவை: “சீனத்திலும் இந்தியாவிலும் உள்ள கட்டுமானத் தொழில்துறைகளைப் பாருங்கள்! ஒரு நாடு காரியங்களைக் கனக்கச்சிதமாக முடிக்கும் நாடு; இன்னொரு நாடு காரியத்தில் அப்படிக் கிடையாது என்றாலும் பேச்சு மட்டும் எப்போதும் பெரியதாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.” இந்தியாவைப் பற்றி அவர் சொன்னது எவ்வளவு உண்மை!