மகளைத் திருத்த முயன்ற தாயும், மகள் சொன்ன பதிலும்! கவிதை
.
-சங்கர சுப்பிரமணியன்.
குடும்பப் பெண்ணாக அடக்கமாய் இராது
எப்போதும் தலைமுடியை விரித்து போட்டபடி
இருக்கிறாயே என்ன இது?
நம் பண்பாடா இது என்று கேட்டாள் தாய்
நீங்கள்தான் பண்பாட்டை மறந்து விட்டீர்கள்
லட்சுமிகரமாக இருக்க வேண்டும் என்பீர்களே
தினம் அந்த லட்சுமியை வணங்கும் நீங்கள்
பூஜை அறையில் அவள் படத்தைப் பாருங்கள்
அப்புறம் கேள்வியை கேளுங்கள் என்றாள்
லட்சுமி தலைமுடியை விரித்துப் போட்டபடி
எப்போதும் இருப்பது தெரியவில்லையா
அவளென்ன பண்பாடு இல்லாதவளா என்றாள்
அவள் செய்ததைத்தானே நான் செய்கிறேன்
நான் செய்தால் மட்டும் பண்பாடற்றவளா?
பதில் சொன்னாள் மகள் தாயிடம்
எந்த வேலையும் செய்யாமல் வீணாய் குத்துக்கல்லாய் ஓரிடத்தில் நிற்கிறாயேயென
மீண்டும் கண்டித்துக் கேட்ட தாயிடம்
நானாவது தரையில்தான் நிற்கிறேன்
லட்சுமியோ மென்மையான பூவெனவும் பாராது
அதன்மீது ஓரிடத்தில் அசையாது நிற்கிறாளே
அவளென்ன குத்துக்கல்லா அம்மா என
திருப்பியே கேட்டாள் மகளும் தாயிடம்
பெண்ணாய் லட்சணமாய் சுறுசுறுப்பாயிராது
காதில் காதொலிப்பானை மாட்டிக் கொண்டு
ஒரே இடத்தில் அசையாமல் இருக்கிறாயே
என்று மறுபடியும் அலுத்துக் கொண்டாள் தாய்
கையில் வீணையை வைத்தபடி பாறைமீது
ஒரே இடத்தில் இருக்கிறாளே சரஸ்வதி
அதைத்தானே இங்கு நானும் செய்கிறேன்
நான் செய்தால் தவறா அம்மா என்றாள் மகள்
ஐயோ இந்தகாலத்து பெண்பிள்ளைகளிடம்
எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசுவார்கள்
எப்படிப் பேசினாலும் பதிலும் சொல்வார்கள்
மெல்லமாய் சொல்லியே தள்ளியே சென்றாள்
கலிகாலமென முணுமுணுத்தது அவள் வாய்!
காந்தி கண்ணாடி விமர்சனம்
.
காந்தி
கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?
காதலும்
காதல் மனைவியுமே முக்கியம் என வாழும் காந்தி, பணமே முக்கியமென ஓடிக்கொண்டிருக்கும் கதிர் என
வெவ்வேறு குணங்களையும், புரிதல்களையும்
கொண்ட இருவரின் பயணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் செரிஃப்.
சென்னையில்
செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா)
வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின்
மனதிலும் அதே ஆசை எழ, அதைக்
காந்தியிடம் சொல்கிறார்.
கண்ணாம்மாவின்
ஏக்கத்தைப் பிரமாண்டமாக நிறைவேற்ற முடிவெடுக்கும் காந்தி, அதற்காக விழா ஏற்பாட்டு நிறுவனம் வைத்திருக்கும்
கதிரை (கேபிஒய் பாலா) அணுகுகிறார்.
அப்பா எனும் பொழுது ஆண்டவனே தெரிகிறார் !
புரட்சிக் கவிஞனைப் போற்றி மகிழ்வோம்!
மகாகவி பாரதியார் (திசம்பர் 1882 - 11 செப்டம்பர் 1921)
பல் வைத்தியகலாநிதி பாரதி இளமுருகனார்
கலைமகளே பாரதியி;ன் காதல் தெய்வம்!
கவிதையென்றால்
அவனுக்கோ வற்றா ஊற்று!
விலையறியா இலகுநடை எளியோர்; போற்றும்
வித்துவத்தில்
மலர்ந்துவிட்ட புரட்சிப் புதுமை!
அலைகொஞ்சும் மணிகளைப்போல்
அருஞ்சொற் கூட்டம்
அவன்நாவில்
ஏவலுக்கு இரங்கி ஏங்கும்!
நிலைகொண்டு தமிழ்வாழும்
நிமிடம் மட்டும்
நீழாயுள்
கொண்டதன்றோ பாரதி பாடல்!
பொன்னேட்டுக் கவியேறு காளி தாசர்
புவிபோற்றும்
கவியின்பம் தந்த கம்பர்
பின்னாலே எழுந்தகவி பாரதி யாரும்
பிராமணர்கள்
எதிர்ப்பெல்லாம் தாண்டி யன்னார்
பன்நாட்டுப் பாவலர்கள் வியந்து போற்றப்
பாவாலே
சாதிவெறி கொண்டோர் நாண
என்நாட்டு மக்களெலாம் என்சோ
தரரென
இனவெறிக்குச்
சாவுமணி அடித்தவன்; அன்றோ?..
;
மொழிமீது அத்தனை உயர் அக்கறையே!
-சங்கர சுப்பிரமணியன்.
சிறப்பேதுமில்லா சிந்தனை வெளிப்பாடும்
இயந்திரம்போல் படைப்பின் எச்சமேயாம்
மொழியின் நடையோட்டம் முற்றுமிராதாம்
புகழடையவேண்டி படைப்பாரும் உண்டு
பற்றோடு படைப்பவரும் பாரினில் உண்டு
ஒன்று இயற்கையான மணமுள்ள மலராம்
மற்றதும் செயற்கையான காகிதமலராம்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவாரென கவிதை
கண்ணதாசன் சொன்ன கவிதையைப்போல
சிலர் மொழிக்காக படைப்பை படைப்பார்
சிலர் புகழுக்காகவும் படைப்பை படைப்பார்
கச்சத் தீவு , கச்சால் தீவு! - ச. சுந்தரதாஸ்
கச்சத் தீவு , கச்சால் தீவு! இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும்,
இலங்கைப் பிரதமர் சிறிமா பண்டாரநாயவுக்கும் இடையில் இருந்த நட்புறவின் அடிப்படையில் கச்சத் தீவு உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு ஒப்படைக்கப் பட்டது. எத்தனையோ ஆண்டுகள் எந்த தொல்லையும் இல்லாமல் இருந்த இந்தத் தீவு அண்மைக் காலமாக இந்தியா, இலங்கை இரு நாடுகளிடையேயும் பேசும் பொருளாக மட்டும் இன்றி, ஏசும் பொருளாகவும் மாறியுள்ளது. குறிப்பாக கச்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப் பட்ட போது அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று என்று அவருக்கு எதிறானோர் குற்றம் சாட்டத் தொடங்கிய பின் இப் பிரச்னை வேகம் எடுத்தது. டெல்லியில் இந்திரா எடுத்த முடிவை எதிர்ப்பதை விட , தமிழகத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடே பிரச்னைக்கு கரணம் என்பது இன்றைய அரசியலின் புது கணக்கு.
இளைய தளபதி விஜய். கச்சத் தீவை மீண்டும் இந்தியா கையகலப் படுத்த வேண்டும் என்று அவர் தனது கட்சி மகாநாட்டில் பற்ற வைத்த பொறி இலங்கையிலும் சுடர் விடத் தொடங்கியது. கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத்திடம் , விஜயின் அறைகூவல் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் பற்ற வைக்க , அமைச்சர் இலங்கையின் ஒர் அங்குல நிலம் கூட வேறு நாட்டுக்கு வழங்கப் படாது என்று கூறி விட்டார். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இலாபத்துக்கு இது போல் பேசுவது புரிந்து கொள்ளக் கூடியதே என்றும் முற்றுப் புள்ளி வைத்து விட்டார் அவர். இந்த கிழமை வட பகுதிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விஜயம் செய்திருந்தார். விஜயகாந்த் பட பாணியில் அதிரடி அரசியல் செய்து வரும் அனுர தன் வட பகுதி விஜயத்தின் போது கச்சத் தீவு பகுதிக்கும் சென்று பார்வையிட்டு அத் தீவு மீது இலங்கைக்கும், தன் அரசுக்கும் இருக்கும் பிடிமானத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது இலங்கை மக்கள் மத்தியில் அவரின் இமேஜை கூட்டியது. தன் மனதுக்குள் விஜய்க்கு அனுர நன்றி சொல்ல மறந்திருக்க மாட்டார் தானே!
எடுப்பார் கைப் பிள்ளை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அறிஞர் அண்ணாவினால்
பாராட்டப் பெற்றவர் பி. பானுமதி. தியாகராஜ பாகவதர், பி. யு . சின்னப்பா காலத்தில் இருந்து எம்.ஜி ஆர், சிவாஜி என்று பல நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று திரையுலகில் ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்ட பானுமதிக்கு இவ்வாண்டு செப்டம்பர் ஏழாம் திகதி நூற்றாண்டாகும்!
பரம்பரையில் பிறக்கிறானோ அந்த பரம்பரை புத்திதான் அவனிடம் இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவளாக திகழ்கிறாள். அதன் அடிப்படையில் குற்றப் பரம்பரையில் பிறக்கும் பிள்ளையும் குற்றவாளியாகவே வருவான் என்பதில் உறுதியாக இருக்கும் அவளினால் குற்றப் பரம்பரையை சேர்ந்த ராஜலிங்கத்தின் அப்பாவி மகன் பாடசாலையில் திருடனாக பழி சுமத்தப் படுகிறான். இதன் காரணமாக அதிர்ச்சியினால் அவன் இறக்க ராஜலிங்கம் இந்திராவை பழி வாங்க திட்டமிடுகிறான். இந்திராவின் ஒரே மகனை கடத்தும் ராஜலிங்கம் அவனை ஒரு கை தேர்ந்த திருடனாக வளர்க்கிறான். திருடனாக வளரும் மோகன் திருடுகிறான், காதலிக்கிறான், இன்னுமொரு திருடியை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். ஆனால் சந்தர்ப்ப சூழ் நிலையால் அவன் மீது கொலைப் பழி விழுகிறது. தன் மகன் என்று அறியாமல் அவனுக்கு எதிராக வழக்குப் பேசி தண்டனை பெற்று கொடுக்கிறாள் இந்திரா. ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த ஒருவனை குற்றவாளியாக்கி விட்டதை சொல்லி இந்திராவிடம் கொக்கரிக்கிறான் ராஜலிங்கம்.
செம்மணி மனித புதைகுழியின் வலி – உளவியல் பார்வை
05 Sep, 2025 | 02:09 PM
புதைந்த குரல்கள் கேட்காத காற்றில்,
புரியாத சுமையாய் மண்ணில் மறைந்த உயிர்கள்.
ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கும் நினைவுகள்,
மௌனக் கத்தல்கள் மனதை சிதைக்கும்.
மண்ணின் கீழ் அல்ல, மனதில் புதைந்தது,
மறக்க முடியாத காயங்கள், விழிகள் மூடும் கனவுகள்.
மன அழுத்தம் ஆழமாகக் குடிகொண்டது,
மறைந்தவரின் முகம் தினமும் கண்ணீராய் தோன்றியது.
குழந்தை சிரிப்பை காண முடியாத தாய்,
வழி தெரியாமல் துயரத்தில் உறையும் குடும்பம்.
அந்தக் குழிகள் வெறும் நிலம் அல்ல,
அவை உளவியல் புண்களின் உயிர்ப்புகள்.
இலங்கைச் செய்திகள்
செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்
காணாமல்போனர் குறித்த முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய 25 விசேட உப குழுக்கள்
செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம் ; புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, பங்கு மக்கள் பங்கேற்பு
செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் இன்று ஆரம்பம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு
செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்
Published By: Vishnu
05 Sep, 2025 | 03:27 AM
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே , அவை தொடர்பிலான விபரங்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதன்கிழமை (3) இரண்டு என்பு கூடுகளின் குறுக்காக காணப்பட்ட என்பு கூடும் , ஒரு என்பு கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறு காணப்பட்ட என்பு கூடும் இன்றைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
உலகச் செய்திகள்
உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு!
குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்
பாலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீதான விசா கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
சீனா சென்ற இந்தியப் பிரதமர் மோடி சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளை சந்தித்தார் !
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு!
Published By: Vishnu
01 Sep, 2025 | 05:44 PM
உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டு தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) இரண்டு நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உரையாற்றும் போதே, உக்ரைன் போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஈரான் ஜனாதிபதி உட்பட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !