புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது இந்திய சாகித்திய அகாதெமி

.
இந்திய சாகித்திய அகாதெமி, தெரிந்தெடுத்த 10 புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது. 

அதில் எழுத்தாளர் ஆசி கந்தராஜாவின்  'ஒட்டுக்கன்றுகளின் காலம்' என்னும் சிறுகதையும் அவுஸ்திரேலியா சார்பாக தெரிவுசெய்யப்பட்டு பதிப்பக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.




பேராசிரியர் சி.மௌனகுருவின் நொண்டி நாடகம் - இருவர் பார்வைகள்....

.

மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில்  ஆற்றுகைப் படைப்புக்கள் பல அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் உருவான நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. அவரது படைப்புக்களில் சக்தி பிறக்குது, சங்காரம், இராவணேசன் முதலியவை கலாரசிகர்களினதும், விமர்சகர்களினதும் வரவேற்பைப் பெற்ற பிரசித்தமான படைப்புக்களாகும்.

 நொண்டி நாடகம் முதன் முதலாக 1962ஆம் ஆண்டு ஆற்றுகை செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. அதில் பாத்திரமேற்று நடித்த நடிகர்களில் பேராசிரியரும் ஒருவர் என்பது கவனத்திற்குரியது. 
52 வருடங்களின் பின்னர் மீண்டும் புத்தாக்கம் பெற்ற  நொண்டி நாடகம் பேராசிரியரின் படைப்புக்களில் ஒரு புதுவிதமானது என்று கூடச்சொல்லமுடியும். ஏனெனில், நாடகத்தினை அடிக்கட்டுமானமாகக் கொண்டு மரபு வழி இசையாலும், செந்நெறி சார் இசையாலும் இசைக் கலைஞர்களாலும் பிரமிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளமையாகும் 

மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழா புத்தகக் கண்காட்சி

.
         மெல்பனில்  கடந்த  20  வருடங்களுக்கும்  மேலாக  இயங்கும்  பாரதி பள்ளியின் 20  வருட  நிறைவு  விழா  எதிர்வரும்  26-04-2015  ஆம்   திகதி   ஞாயிற்றுக்கிழமை   முற்பகல்  10   மணியிலிருந்து   மாலை  6   மணிவரையில்  Dandenong High School    மண்டபத்தில் (Ann Street, Dandenong - 3175 )  நடைபெறும்.   இவ்விழாவில்  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்   தமிழ்  புத்தகக்  கண்காட்சியும்  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில்  தங்கள்  வெளியீடுகளையும்  தங்களிடமிருக்கும் அவுஸ்திரேலியா   அன்பர்களின்  வெளியீடுகளையும்  இடம்பெறச்செய்யலாம்.   கண்காட்சி  10  மணிக்கு ஆரம்பமாகவிருப்பதனால்  நூல்களை   காலை  9   மணியளவில்  கண்காட்சி  அரங்கில்    சேர்ப்பிக்குமாறும்  விழா  நிகழ்ச்சிகளில்  கலந்து  சிறப்பிக்குமாறும்  கேட்டுக்கொள்கின்றோம்.
கண்காட்சி  முடிவுற்றதும்  தங்கள்  நூல்களை   பெற்றுச்செல்ல  முடியும்.
மேலதிக   விபரங்களுக்கு:

லெ.முருகபூபதி :-   04 166 25 766  -   letchumananm@gmail.com

கனவுகளை விட்டுச்சென்றவர் ஜெயகாந்தன் - ஜெயமோகன்

.

ஜெயகாந்தன் மறைந்தார். எழுத்தாளரின் மறைவு என்பது ஒரு தொடக்கம். அவரை முழுமையாகத் தொகுத்துக்கொள்ள, அனைத்துக் கோணங்களிலும் அவருடைய பங்களிப்பைப் பற்றி அறிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பு. அத்தனை பேரிலக்கியவாதிகளும் இறந்த பின்னர் உயிர்த்தெழுபவர்கள்தான்.
நமக்கு சங்க காலத்துக்குப் பிறகு, இலக்கியவாதி என்ற அடையாளம் மட்டும் கொண்ட பெரிய ஆளுமைகள் இல்லாமலாயினர். இலக்கியமும் மதமும் ஒன்றாக ஆயிற்று. நாயன்மார்களோ சேக்கிழாரோ ஆழ்வார்களோ கம்பனோ மதம் சார்ந்த மரியாதையையே பெற்றனர். மற்றபடி இலக்கியவாதிகள் என்றால் அதிகாரத்தை அண்டிப் பிழைப்பவர்கள், பரிசில் வாழ்க்கை வாழ்ந்த மொழிநுட்பத் திறனாளர்கள். இலக்கியவாதி என்பவர் பிரபுக்களின் அவையிலுள்ள பலரில் ஒருவர் என்ற எண்ணமே மக்களிடமும் இருந்தது.
இந்த மனநிலை காரணமாக இங்கு இலக்கியவாதிக்கு மதிப்பு இருந்ததில்லை. 

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 26 04 15

.













.

ந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படு பவரும் வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Mahapandit Rahul Sankrityayan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
lகிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார் (1893). இவரது இயற் பெயர் கேதார்நாத் பாண்டே. இளம் வயதிலேயே தாய் இறந்துவிட்ட தால். பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஆரம்பக் கல்வி மட்டுமே கற்றார்.
l10 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுற்றி ஏராளமான விஷயங்களைக் கற்றார். காசி சென்று சாதுக் களுடன் மடாலயங்களில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு ராம் உதார் தாஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
lதமிழகம் வந்து சைவ, வைணவ நூல்களைக் கற்றார். தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் இவரது அறிவு விரிவடைந்தது. இலங்கை முதல் லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.

காலம் சொல்லும் கதைகள்! தங்கர் பச்சான்

.

காலையில் விழித்தெழுந்ததும் கண் திறந்து நான் பார்க்கும் இரண்டு முகங்கள் என் அப்பாவும், அம்மாவும்தான். முன்பின் அறிமுகமில்லாத சென்னையில் என்னைப் போட்டுவிட்டு, இருவரும் என்னைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே சுவரில் தொங்கும் படத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு விதம் விதமாக நான் எடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு இருப்பது ஒரே படம்தான்.
50 திரைப்படங்களுக்கு மேல் பல லட்சம் அடிகள் யார் யாரையெல்லாமோ ஓடும் படமாகப் பிடித்துள்ளேன். அப்பா நடப்பது போன்றோ, பேசுவது போன்றோ ஒரே ஒரு நொடிகூட என் பிள்ளைகளுக்குக் காண்பிக்க எதையும் நான் பதிவுசெய்து வைக்கவில்லை.
சினிமா கேமராவைத் தொடுவதற்கு முன் எனக்கும் கேமராவுக்கும் தொடர்பே இல்லை. அதுவரை நான் எடுத்துக்கொண்டப் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, ஐந்தாம் வகுப்பு பயிலும்போது கடைசி நாளில் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்துக்கொண்ட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் அந்தப் படமும், சென்னைக் கல்லூரியில் படிக்கிறபோது பேருந்தில் பயணிக்க அடையாள அட்டைக்காக எடுத்துக் கொண்ட மார்பளவுப் படமும்தான்.

இலங்கைச் செய்திகள்


ஜனா­தி­ப­திக்கு பாகிஸ்­தானில் செங்­கம்­பள வர­வேற்பு

எதிர்பார்க்கப்பட்டவை நடைபெறவில்லை: ஆஸி.யிடம் சி.வி. முறையீடு!

  '2000 பேரின் கதை கேட்க ஒன்றரை வருடங்கள் எனில் 18000 பேரின் கதை கேட்கப் 10 வருடங்களா?"

 '200 பேர் இறந்ததாய் சொல்லிய நீங்கள், கொன்றவர் யார் என ஏன் சொல்லவில்லை?" 2ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலிருந்து திரும்பியவர்கள் காணிகளை கோரி ஆர்ப்பாட்டம்

ஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு

 பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 570 ஏக்கர் காணியை 2ஆவது கட்டமாக விடுவிக்க நடவடிக்கை




குணம் எமக்கு மாறவில்லை ! (. எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் )

.        

      காசெல்லாம் செலவு செய்து
      கடவுளை நாம் வணங்குகிறோம்
      நீசக்குணம் போயிட  நாம்
      நினைத்து என்றும் பார்த்தோமா

      ஆசைவார்த்தை கூறி நின்று
      அனைவரையும் மடக்கு கின்றோம்
      அல்லல் பட்டு நிற்பவரை
      அரைக்கணம் நாம் பார்த்ததுண்டா

      மோசடிகள் பல செய்து
      முழுவதையும் சுருட்டு கின்றோம்
      காசில்லா நிற்கும் அவர்
      கஷ்டமதை பார்த்த துண்டா

'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - 2015' 01 08 2015

.
'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - 2015'  பின்வரும் திகதிகளில் விக்டோரிய மாநிலத்தில் நடைபெறவுள்ளது. மேலும் , தேசியப் போட்டியும் இவ்வருடம்  விக்டோரிய மாநிலத்தில் நடைபெறவுள்ளது.  
The dates for 'The Tamil Competition 2015' have been finalized as mentioned below. The National Competition also will be held in Victoria this year.

விக்டோரிய மாநிலப் போட்டிகள் (Victorian Competition)
ஆகஸ்ட் 01,  2015   (01/08/2015 - சனிக்கிழமை / Saturday))
ஆகஸ்ட் 09,  2015   (09/08/2015 - ஞாயிற்றுக்கிழமை / Sunday))
ஆகஸ்ட் 15,  2015   (15/08/2015 - சனிக்கிழமை / Saturday))

தேசியப் போட்டி (National Competition)
செப்டெம்பர்  26,  2015   (26/09/2015 - சனிக்கிழமை / Saturday)

தேசிய மற்றும் விக்டோரிய மாநில பரிசளிப்பு விழா
(National and the Victorian Awards Ceremony)
செப்டெம்பர்  27,  2015   (27/09/2015 - ஞாயிற்றுக்கிழமை / Sunday)

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ராமசாமி

.

ரண்டு வாரங்களுக்கு முன்  எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.
பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் கிராமங்களையும் பார்க்கத்தூண்டியது.  அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள்.  பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும்  பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.

தனிநாயகம் அடிகளின் பேத்தி யாம் , அவள் அனந்னியா

.
அனந்னியா  வின் பேச்சை  கேட்டு பாருங்கள் . தனிநாயகம் அடிகளின்  பேத்தி யாம்  அவள் . ​



கம்பன் விழா 2015 - சிட்னி



தமிழ் சினிமா - சி.எஸ்.கே




தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் தான் தற்போது கலக்கி வருகின்றனர். அந்த வகையில் சத்ய மூர்த்தி சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சி.எஸ்.கே.
பெரிய நடிகர்களை நம்பி எடுக்காமல் இளம் நடிகர்களை மட்டும் கையில் எடுத்து கொண்டு சூப்பர் த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளது இந்த படக்குழு.
கதை
வைரங்களை வியாபாரம் செய்யும் ஒரு காப்பரேட் கம்பெனியில் பணிபுரிபவர் நாயகி கார்த்திகா. சென்னை சூப்பர் கிங்ஸில் எப்படியாவது இடம் பிடித்து கிரிக்கெட் வீரராக வலம் வரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர் சார்லஸ். கார்த்திகாவிடம் காதலில் விழுந்த சார்லஸ், இலட்சியங்களை விட்டு தன் காதலை நிறைவேற்றத் துடிக்கிறார். காதலில் இருவரும் கலந்துவிட, மதம் தடையாக வந்து நிற்கிறது.
இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் கடத்தல் தொழிலை செய்து வரும் ஒரு தாதா. பல கோடி ரூபாய்க்கான ஒரு கடத்தல் பிசினஸ் நடக்கிறது. போலிஸுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால், வைரங்களை கடத்திவர புதிதாக ஒருவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். தன் குடும்ப சூழலால் இந்த வேலை செய்ய ஒப்புக்கொள்கிறான் ஷஃபிக்.
கார்த்திகா பணிபுரியும் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் இரண்டு முக்கிய புள்ளிகள் தான் இந்த கடத்தலுக்கு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது. கம்பெனியில் குடைச்சல் அதிகமாகிக்கொண்டே போக, வைரம் எப்போது கைக்கு வரும் என்ற டென்ஷனோடு பதபதைக்கிறார்கள்.
ஷஃபிக்கை போலிஸ் துரத்திக்கொண்டு வர, திடீரென சந்திக்கும் கார்த்திகாவிடம் வைரங்களை கைமாற்றுகிறான். உள்ளே இருப்பது என்ன என்றே தெரியாமல், அந்த டப்பாவை வாங்கி பைக்குள் போடுகிறாள். வைரங்கள் கைக்கு வந்து சேராத கோபத்தில் தூத்துக்குடி தாதா ஆத்திரமடைய, ஷஃபிக் என்ன ஆனான்? கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது? சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது? என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையால் நமக்கு திரில்லிங்கை கொடுக்கிறது படத்தின் இரண்டாவது பகுதி.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை அடுத்த காட்சி என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. கதையில் வரும் அந்த மூன்று கதாபாத்திரங்களும் இளம் நடிகர்கள் என்றலும், மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.
படத்தில் அவ்வபோது வரும் டுவிஸ்ட் வெகுவாக ஈர்க்கிறது. படத்தின் வசனங்கள் மிகவும் ஈர்க்கும் படி உள்ளது.
பல்ப்ஸ்
கடந்த சில வாரங்களாக இது போன்ற கடத்தல் சார்ந்த பல கதைகளை பார்த்து விட்டோம், இதனால் இப்படம் முந்தைய சில படங்களை நியாபகப்படுத்துகிறது.
மொத்தத்தில் கிரிக்கெட்டில் மட்டுமில்லை சினிமாவிலும் CSK கவனிக்க வைக்கின்றது.
ரேட்டிங்-3/5
நன்றி cineulagam