திருக்குறள் மனனப் போட்டிகள் -5 May 2024


இப்
போட்டிகள் மே மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2019 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2015 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2012 க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2009 க்கும் 31.07.2012 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2005 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 

பெற்றோர்களின் முழுப்பெயர்,  அவர்களின் தொலைபேசி இலக்கம், மின்அஞ்சல் முகவரி, பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம்  4ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு:

திரு கு கருணாசலதேவா           0418 442 674

திருமதி ஜெகநாதன்             0434 098 842   


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாலர் ஆரம்பப் பிரிவு

 

 

கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் இரண்டையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

 

 1      ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

              எழுமையும் ஏமாப் புடைத்து.

 

2   பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.


 ---------------------------------------------------------------------------------------------

 திருக்குறள் மனனப் போட்டி - 2024

பாலர் பிரிவு

 

கீழே கொடுக்கப்பட்ட குறள்கள் மூன்றையும் மனனம் செய்து  ஒப்புவித்தல் வேண்டும்.

1.   பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

 

2.   தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

 

3.   எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

 -------------------------------------------------------------------------------------------- 

திருக்குறள் மனனப் போட்டி - 2024

கீழ்ப்பிரிவு

கீழே கொடுக்கப்பட்ட நான்கு குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

 

1         யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

 

2         எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

 

3        எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

4        தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.


------------------------------------------------------------------------------------------------

திருக்குறள் மனனப் போட்டி  - 2024

மத்திய பிரிவு

கீழே கொடுக்கப்பட்ட ஐந்து குறள்களையும் மனனம் செய்து ஒப்புவித்தல் வேண்டும்.

1        இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

 

2         வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

 

3        முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

 

4        ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

 

5        பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

-----------------------------------------------------------------------------------------------

 திருக்குறள் மனனப் போட்டி - 2024

மேற்பிரிவு   

கீழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும். (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது. பொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது)

1             செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
   நல்வருந்து வானத் தவர்க்கு.

வந்த விருந்தனரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன் வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான்

 

2         செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

கேள்விச் செல்வமே மற்றைய எல்லாச் செல்வங்களினும் உயர்வானதுஆதலால் ஒருவனுக்குச் செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும்..

 

3         அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்று                    பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.


4        சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

          சொல்லிய வண்ணம் செயல்.

இதனை இப்படி முடிக்கலாம் என்று கூறுவது

யாருக்கும் எளிய காரியமாகும்ஆனால் கூறியபடியே செய்து         முடித்தால் அரிய செயலாகும்.

 

5        வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

குளங்களில் பூக்கள் உயர்ந்திருக்கும் மட்டம் அதில் நீர் நிறைந்திருக்கும் அளவாகும்அதேபோல் மாந்தர் பெற்றிருக்கிற வாழ்வின் உயர்வும் அவர்கள் கொண்டிருக்கிற ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே ஆகும்.

 

6        ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

விதியை விட வலிமையுடையது வேறு ஒன்றும் இல்லை.  விதியை விலக்கும் வேறொரு வழியை ஆராய்ந்து செயல்பட்டாலும் அங்கும் அவ்விதியே முன் வந்து நிற்கும்


 -----------------------------------------------------------------------------------------------

திருக்குறள் மனனப் போட்டி – 2024

அதிமேற்பிரிவு 

கீழே கொடுக்கப்பட்ட ஏழு குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும். (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது. பொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது.)

1.       1.     ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
           ஊதியம் இல்லை உயிர்க்கு.

வறியவர்க்கு ஈதல் வேண்டும்.  அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும்.  அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்னும் இல்லை.

 

2.       2.     யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
            சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும்; எந்த ஊரும் சொந்த ஊராகும்.  அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால்?

 

3.   3.    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
       தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் யாவற்றுள்ளும் தலையாய அறமாகும்.

 

4.   4.    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
       கற்றனைத் தூறும் அறிவு.

மணலைத் தோண்ட தண்ணீர் ஊறுவது போல், நூல்களைப் படிக்கப் படிக்க மக்களுக்கு கல்வி யறிவு வளர்ச்சியுறும், வளம் பெறும்.

 

5.   5.     வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
       ஈண்டு முயலப் படும்.

தவத்தினால் வேண்டிய பயன்களை வேண்டியவாறே அடைய முடியுமாகையால், செய்வதற்குரிய தவத்தைச் செய்ய இல்லறத்தானும் முன்வரலாம்.

 

6.   6.    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
        குத்தொக்க சீர்த்த இடத்து.

ஒன்றைச் செய்ய ஏற்ற காலம் வரும் வரை கொக்கைப் போல் அமைதியாக இருக்க வேண்டும்.  வாய்ப்பான காலம் கிடைத்தவுடன் கொக்குபோல் பாய்ந்து காரியம் ஆற்ற வேண்டும்.

 

7.   7.    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
       தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றங்கண்டு குறை கூறுதல் போல, தன்னிடத்தே உள்ள குற்றங்களையும் கண்டு திருத்திக் கொள்ள முடியுமானால் மனித வாழ்விலே துன்பம் உண்டாகாது.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

 



No comments: