இப் போட்டிகள் மே மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் முற்பகல் 11 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.
போட்டி நடாத்தப்படும் பிரிவுககளும் போட்டிகளும்
பிரிவுகள் |
பிறந்த திகதி விபரம் |
போட்டிகள் |
பாலர் ஆரம்ப பிரிவு |
01.08.2019 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி வர்ணம் தீட்டும் போட்டி |
பாலர் பிரிவு |
01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி வர்ணம் தீட்டும் போட்டி |
கீழ்ப்பிரிவு |
01.08.2015 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
மத்தியபிரிவு |
01.08.2012 க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
மேற்பிரிவு |
01.08.2009
க்கும் 31.07.2012 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
அதிமேற்பிரிவு |
01.08.2005
க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள் |
சமய அறிவுப் போட்டி திருமுறை ஒப்புவித்தல் போட்டி |
பெற்றோர்களின் முழுப்பெயர், அவர்களின் தொலைபேசி இலக்கம், மின்அஞ்சல் முகவரி, பங்குபற்றுவர்களின் முழுப்பெயர், பிறந்த திகதி மற்றும் பங்குபற்றும் போட்டிகள் ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம் 4ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacompetition@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் அங்கத்தவர்களுடன் தொடர்புகொள்ளவும்.
திரு கு கருணாசலதேவா 0418 442 674
திருமதி க ஜெகநாதன் 0434 098 842
------------------------------------------------------------------------------------------------------------
திருமுறை ஒப்புவித்தல் போட்டி - கீழ்ப்பிரிவு
மூன்று திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு திருமுறைகள் கேட்கப்படும்.
தேவாரம் (1)
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே
தேவாரம் (2)
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
திருவாசகம் (3)
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.
-------------------------------------------------------------------------------------------------------------------
திருமுறை ஒப்புவித்தல் போட்டி - மத்தியபிரிவு
நான்கு திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்று திருமுறைகள் கேட்கப்படும்.
1. தேவாரம்
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
2. திருவாசகம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
3. புராணம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
4. திருப்புகழ்
அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.
-------------------------------------------------------------------------------------------------------
திருமுறை ஒப்புவித்தல் போட்டி - மேற்பிரிவு
ஐந்து திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு திருமுறைகள் கேட்கப்படும்
1
தேவாரம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
2 திருவாசகம்
பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தான் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
கண்சுமந்த நெற்றி கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த மேனி பாடுதுங்காண் அம்மானாய்!
3 திருவிசைப்பா
ஒளிவளர்
விளக்கே உலப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ்
கடந்ததோர் உணர்வே !
தெளிவளர்
பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள்
தித்திக்கும் தேனே !
அளிவளர்
உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம்
ஆடரங் காக
வெளிவளர்
தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன்
விளம்புமா விளம்பே.
4 திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
5
திருப்புகழ்
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
-----------------------------------------------------------------------------------------------------
திருமுறை ஒப்புவித்தல் போட்டி - அதிமேற்பிரிவு
ஆறு திருமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து திருமுறைகள் கேட்கப்படும்
1 தேவாரம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
2 திருவாசகம்
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே
3 திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்ந் தனவே.
4 திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல் லாம் விளங்க
அன்னநடைமடவாள் உமைகோன் அடி
மோமுக் கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
5 புராணம்
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்
கைம்மல ருச்சி மேற்குவித்து
பண்ணிலால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்
6 திருப்புகழ்
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
செய்யகும ரேசத் திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமானே
No comments:
Post a Comment