அமரர் கவிஞர் அம்பி அவர்களுக்குக் கவிதையஞ்சலி!


 


கற்றாருக் கினியதொரு நண்ப னானாய்!

        காலமெலாம் நிலைத்துநிற்கப் புலம்பெயர் நாட்டில்

வற்றாது  வண்ணத்தமி;ழ் மொழியும் வாழ 

        வடிவமைத்துத் திட்டங்கள் வரைந்து நின்றாய்!

தற்பெருமை சிறிதுமின்றிச் சுற்றம் போற்றத்

        தவநெறியில் வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்தாய்!

பற்றறுத்தாய்! சிற்சபையோன் பாததா மரைகள்

        பரந்துகாலுஞ் சோதிதனிற் கலந்தாய் சாந்தி!


கள்ளமிலா வெள்ளைமனங் கொண்ட அன்ப!                

        கவியரங்கம் பலகண்டோம் மறக்கப் போமோ?     

அள்ளவள்ளக் குறையாது ஆயிரம் பிறைகள்               

        அன்பநீயும் கண்டுநின்றுந் தமிழ்ப் பணியாய்              

உள்ளமுவந் தாற்றியவுன் பங்க ளிப்பை                 

        உன்நினைவாய் என்றென்றும் நினைவு கூர்வோம்!  

மெள்ளத்தான் மூடியதோ விழிகள் பரமன்;          

        விரைமலர்த்தாள் நாடியதோ சாந்தி சாந்தி!


தஞ்சமளித் திட்டஅவுத் திரேலி யாவில்          

        தடம்பதித்துத் தமிழ்கற்று வாழும் எங்கள்  

பிஞ்சுமழ லையர்க்கென்றே பெரிதும் உவந்து            

        கொஞ்சும்மொழி"தமிழ்தந்தாய்! குவல யத்தில்             

விஞ்சுபுகழ் பெற்றதமிழப் புலவ ரேறே!            

        வேண்டிடாப் பிறப்பறுக்க விழைந்த உன்னை  

அஞ்சுமுகன் அழைத்தனனோ அகலா இன்பம்           

        அரனடியிற்; பெற்றுவிட்டாய் தெய்வம் தானே!



 ‘சிவஞானச் சுடர்’  

பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார்  

(வாழ்நாள் சாதனையாளர்)


No comments: