சிங்கப்பூர் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ் மொழி விழா 2019: “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்”


அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆறாவது ஆண்டு நிகழ்வு உமறுபுலவர் தமிழ்
மொழி நிலையத்தில் சனிக்கிழமை 20.04.19 மாலை சிறப்பாக நடந்தேறியது.‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’
என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் புத்தாக்கத்தை வெளிக்கொணறியதோடு, அவர்களின்
எதிர்கால எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தது.

மொத்தம் பதினாறு பள்ளிகளைச் சேர்ந்த நாற்பத்தி ஐந்து மாணவர்கள் இந்த ஆராய்ச்சி விளக்க போட்டியில்
கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் பரிசைப்பெற்ற மாணவர்கள் தங்களுடைய
படைப்புகளை மேடையில் படைத்தனர். தொழில்நுட்பத்தில் தமிழை வேறு எந்தெந்த வகையிலெல்லாம் புகுத்துவது
என்பதைப் பற்றி பல புதிய யோசனைகளை முன்வைத்த மாணவர்களின் படைப்புகள், பார்வையாளர்களை
வாயடைக்கச் செய்தது. உள்ளங்கை நெல்லிக்கனியாய் நம் வாழ்வை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு
எளிமைப்படுத்தி இருக்கும் தொழில்நுட்பத்தில், தமிழாக்கத்தின் அவசியத்தையும் மாணவர்கள் உணர்த்தினர். தமிழையும்
மற்ற ஆதிக்க மொழிகளைப் போல, அடிப்படை மொழியாக (Core Language) கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல
புதிய யோசனைகளை முன்வைத்தனர். அதோடு, விளையாட்டு, போட்டித் தேர்வு, கேள்வி- பதில் மன்றம் கொண்ட ஒரு
பொது வலைத்தளத்தை உருவாக்கி அதன் வழியாகக் கற்றல் கற்பித்தலைக் கொடுக்க வேண்டும் என்பதை யுவபாரதி
மாணவி சுபிக்க்ஷா விளக்கினார். மேலும் உலகளாவிய நிலைப்படுத்துதல் அமைப்பைத் (GPS) தமிழில் கொண்டு
வருதல், யதார்த்த மெய்நிகர் (VIRTUAL REALITY) வாயிலாக இதிகாசகதைகளை பள்ளி மாணவர்களுக்குக் கொண்டு
செல்லுதல் என்று கல்வி, சுற்றுலா, போக்குவரத்து போன்ற தொழில் நுட்பத்தளங்களில் தமிழை சேர்க்க வேண்டும் என்ற
சிந்தனையும் படைக்கப்பட்டது. தமிழ் மொழி உலக தரத்தில் இருக்க 100% தனி நபர் முயற்சி இருக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தி தங்கள் ஆராய்ச்சியை செருக்குடன் படைத்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்; என்ற பெருமைகளைக் கொண்டுள்ள தமிழர்களின் சிந்தனைகளும்,
செயல்களும், எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழை முன்னிறுத்த எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றியும்
மாணவர்கள் கருத்துரைத்தனர். இறுதியாக, விழாவிற்கு சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர் திரு. முத்து நெடுமாறன்
அவர்கள், இத்தலைப்பின் அடிநாதத்தை விளக்கினார். இதுவரை செய்த கண்டுபிடிப்புகளை நாம் அதிகம் பயன்படுத்தும்
போதுதான், தமிழ் மொழி உச்சத்தை அடைய முடியும் என்பதை நமக்கு நினைவூட்டிச் சென்றார்.
இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துரு வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் நீண்டகாலமாக ஈடுபட்டு
வரும் திரு. முத்து நெடுமாறன், முரசு அஞ்சல் மென்பொருளின் வடிவமைப்பாளர் என்பதோடு செல்லினம்
குறுஞ்செயலியின் வடிவமைப்பாளரும் நிறுவனரும் ஆவார். திரு. முத்து நெடுமாறன், மலேசியாவில் இருந்து,
குறுஞ்செயலி (மொபைல் எப்) தொழில்நுட்பத் தளத்தில் வெளிவரும் ஒரே தமிழ் இணைய ஊடகமான ‘செல்லியல்’
மின்னூடகத்தின் நிறுவனரும் வடிவமைப்பாளருமாவார்.

கம்பலாந்து தமிழர் கழகம் Celebrates ‘Aging with Care’ Sports Carnival 2019

.



அப்பர் குருபூசை 5/5/2019




சிட்னியில் சித்திரைத் திருவிழா 5/5/2019




பேர்த் பாலா முருகன் - நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி 02/06/2019






தமிழ் சினிமா - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம்

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் விஜய், அஜித் ரசிகர்கள் போல் ஹாலிவுட்டில் மார்வல், டிசி காமிக்ஸ் ரசிகர்கள் அடித்துக்கொள்வார்கள், ஆனால், இதில் மார்வல் கையே சில வருடங்களாக அதிகம் ஓங்கியுள்ளது, இதன் உச்சமாக இன்று அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் திரைக்கு வந்துள்ளது, அத்தனை எதிர்ப்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி பார் முடியும் போது தானோஸ் ஒரு சொடக்கில் உலகின் மக்கள் தொகையை பாதியை குறைப்பான், அதை தொடர்ந்து அவெஞ்சர்ஸும் இதையெல்லாம் விட்டு ஒதுங்கி தங்கள் குடும்பம் என வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த நேரத்தில் ஆண்ட் மேன் மூலம் டைம் ட்ராவல் என்ற விஷயம் இருப்பதை உயிரோடு இருக்கும் சூப்பர் ஹீரோக்கள் கண்டுப்பிடிக்க, அந்த சோதனை மூலம் கடந்த காலத்திற்கு சென்று கற்களை எடுத்து, அதை வைத்து தானோஸின் சதி திட்டத்தை தடுக்க நினைக்கின்றனர்.
அவர்கள் நினைத்தது போல் கற்களை எடுத்தார்களா? தானோஸை அழித்தார்களா? இதன் மூலம் அடைந்த லாபம், வலிகள் என்ன என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முதலில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை தமிழில் பார்க்க நினைக்கின்றீர்கள் என்றால் கொஞ்சம் யோசித்தே போங்கள், ஏனெனில் கொஞ்சம் கூட விஜய் சேதுபதி வாய்ஸ் அயன் மேனுக்கு செட் ஆகவில்லை, டோனி ஸ்டார்கை காட்டும் போது இருக்கும் கைத்தட்டல், விஜய் சேதுபதி வாய்ஸ் வரும் போது சிரிக்க தொடங்கிவிடுகின்றனர்.
சரி, படத்திற்குள் செல்வோம், படத்தின் ஆரம்பத்திலேயே மரண படுக்கையில் விண்வெளியில் இருக்கும் அயன் மேனை கேப்டன் மார்வல் காப்பாற்றி பூமிக்கு கொண்டு வருகின்றார், அதை தொடர்ந்து ஆண்ட் மேன் குவாண்டம் உலகில் இருந்து வெளியே வருகின்றார், அவர் யோசனை படி கற்களை தேட பிரிந்து இருந்த அயன் மேன், கேப்டன் அமெரிக்கா உலகின் நலனிற்காக ஒன்று சேர்ந்து டைம் ட்ராவல் செய்கின்றனர்.
இதில் மூன்று குழுக்களாக இவர்கள் செல்கின்றனர், அதிலும், கேப்டன் அமெரிக்கா, கடந்த கால கேப்டன் அமெரிக்காவுடன் மோதுவது, அயன் மேன் தான் பிறப்பதற்கு முன்பே தன் அப்பாவை பார்ப்பது என அந்த காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யம்.
ஆனால், இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மார்வல் சீரிஸிலேயே மிதந்தவர்களுக்கு மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், புதிதாக பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஏமாற்றமே மிஞ்சி இருக்கும், அதிலும் முதல் பாதி என்ன தான்பா செய்ய போறீங்க என்று பொறுமையை சோதிக்கின்றது.
காமிக்ஸ் வெறியர்களை விடுங்கள், ஒரு ஹாலிவுட் ஆக்‌ஷன் படம் பார்க்க போகிறேன் என்ற மனநிலையில் சென்றால், சண்டை இப்போது வரும், அப்போது வரும் என கிளைமேக்ஸ் வரை நம்மை ஏமாற்றிவிடுகின்றனர், கிளைமேக்ஸ் 30 நிமிடம் தானோஸுடன் மோதும் காட்சி மிரட்டல், ஆனால், அதிலும் எந்த ஹீரோவை பார்ப்பது என்று நமக்கே குழப்பம்.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தான் மிகப்பெரும் பலம், அதிலும் கிளைமேக்ஸ் காட்சி மிரட்டியுள்ளனர். தானோஸ் காலம் கடந்தும் மனதில் நிற்கும் ஆல் டைம் பேவரட் வில்லனாக இருப்பார்.

க்ளாப்ஸ்

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் மிக முழுமையாக இருந்தது. டோனி ஸ்டார்க் முடிவு ரசிகர்களை கலங்க வைக்கின்றது.
எமோஷ்னல் காட்சிகள், கண்டிப்பாக தீவிர மார்வல் ரசிகர்கள் கண் கலங்குவார்கள்.
ஆண்ட் மேன் காமெடி கவுண்டர்ஸ். கிளைமேக்ஸ் காட்சிகள்
பல்ப்ஸ்
முதல் பாதி மிக மெதுவாக நகர்கின்றது.
படத்தின் ரன்னிங் டைம். மேலும், தார், ஹல்க் போன்ற சூப்பர் ஹீரோக்களை முழுமையாக பயன்படுத்தாது.
மொத்தத்தில் மார்வல் ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஒரு அழகிய செண்ட் ஆப் விருந்தாகவும், புதிதாக பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கிறது இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.  நன்றி CineUlagam










மரண அறிவித்தல்

.
                                                      திரு.சுவாமிநாதன் பாலேந்திரா

மறைவு  24.04.2019

ஆதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும்,  சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் பாலேந்திரா (முன்னாள் வட மாகாண பணிப்பாளர்வீதி அபிவிருத்தி அதிகாரசபை,  இலங்கை) அவர்கள்  24.04.2019 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ் சென்ற சுவாமிநாதன்பூதாத்தைப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ் சென்ற சுன்னாகத்தைச் சேர்ந்த  மண்டலநாயகம் இரத்தின தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்
பத்மலோஜினியின் அருமைக் கணவரும்,
 பூம்பொழில் உமாபங்கன் கலாநிதி உமைமைந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்
அஜந்தன்வைத்திய கலாநிதி சௌமியா ஆகியோரின் அன்பு மாமனாரும் 
ஆகாஷ்அனிதாஹரன் ஆகியோரின் பாசமிகு  பேரனாரும்,  
காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி சிவராசாஇராஜராஜேஸ்வரி முதலியார்ஆனந்த குமாரசுவாமிமற்றும் புவனேஸ்வரி சண்முகலிங்கம் (சிட்னிஅவுஸ்திரேலியா),  காலஞ் சென்றவர்களான பரமேஸ்வரி சச்சிதானந்தன்,  ஸ்ரீ பாஸ்கரன்பேராசிரியர் சுசீந்திரராஜாவைத்திய நிபுணர் மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
வைத்தியகலாநிதிசெல்லப்பா,  திருஞானசம்பந்தன்விக்கினேஸ்வரன்கோணேஸ்வரன்,கமலலோஜினி,வரதராஜா,அம்பிகா  குகதாசன்நளினலோஜினி சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 28.04.2019 காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கமிலியா மலர்ச் சாலைமக்குவாரி பார்க்கில் (Camellia Chapel, Macquarie Park, NSW) வைக்கப்பட்டு, 10.30 மணி முதல் 12.30 மணி வரை கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்  என்பதனை உற்றார்உறவினர் நண்பர்களுக்கு அறியத்  தருகிறோம். 

தகவல் :உமை மைந்தன் 02 8840 9799





உயிர்த்தெழுந்த ஞாயிறு ஒன்றில் - செ .பாஸ்கரன்

.
Image result for sri lankan bomb blast

மனதை உருக்கும் 
மக்களின் ஓலம் 
ஒன்பது குண்டுகள் 
ஒன்றாய் வெடித்தது 
புனித ஞாயிறில் 
புவியெலாம் அதிர்ந்தது
கோவில் தரையில்  
குருதி குளித்த 
மனித உடல்கள்  
உயித்தெழுந்த 
தேவனின் கோவிலில் 
செத்து விழுந்த 
சேதிகள் வந்தன 
அமைதி வாழ்வை 
தேடிய மக்கள் 
உடலம் கருகி 
உயிர் விட்டிருந்தனர் 
கழுகுகள் மீண்டும் 
இரையினைத் தேடி 
அமைதியாய் இருந்த 
தீவினில் இறங்கிட 
அவலக்  குரல்கள் 
வானெலாம் எழுந்தது 

உயிர்த்த ஞாயிறில் வெடித்த குண்டுகள் சதியா? - செ .பாஸ்கரன்



.
கர்த்தர் உயிர்த்த ஞாயிறு இலங்கையில் கோர நாளாக மாறியது. வழிபாட்டிடற்கு சென்றமக்கள் கொடூரமாக கொல்லப் பட்டார்கள் 
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய 9 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று போலீஸ்  அதிகாரிகள் உள்பட 207 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் வெளிநாட்டவர்களாகும் மேலும் 450 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன, ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்து "இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள். என்று குறிப்பிடடார். அத்தோடு இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். என்றும் குறிப்பிடடார். 
இறுதியாக குண்டுவெடித்த தெமட்டகொடவில் சந்தேகநபர்களை கைதுசெய்ய போலீசார் சென்றபோது குண்டுத்தாக்குதல் மேட்கொள்ளப் பட்டதால் 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப் பட்டார்கள். 

சைவ மன்றத்தின் பண்ணிசை விழா 25 04 2019

.

உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொடக்கவிழா நிகழ்வு

.

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய  உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொடக்கவிழா  20.04.19 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  துர்கா தேவி தேவஸ்தான தமிழர் மண்டபத்தில் இடம் பெற்றது.  இதில்  உலகத் தொல்காப்பிய மன்ற தலைவர் முனைவர் இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய சமய அறிவுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டியில் பரிசில்கள் பெற்ற மானவர்களுக்கு பரிசளிப்பும் தலைவர் கலாநிதி இரத்தினம் மகேந்திரன் தலைமையில் இடம் பெற்றது.



பயணியின் பார்வையில் - அங்கம் 03 - முருகபூபதி

.


மயில்வாகனத்தில்  பவனிவந்த  மயில்வாகனனார்
" நினைவு நல்லது வேண்டும் - நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்-
கனவு மெய்ப்பட வேண்டும் - கைவசமாவது விரைவில் வேண்டும் "
                                                                 மகாகவி பாரதி
     
                                                                                       
தமிழர்கள் புதிதாக குடியேறும் எந்தவொரு தேசத்திலும் முதலில் தங்களுக்கென மதம்சார்ந்த வழிபாட்டிடங்களை உருவாக்குவார்கள். அதன்பின்னர் ஒன்றுகூடுவதற்காக ஒரு சங்கம் அமைப்பார்கள். கோயில்கள் பெருகும். அமைப்புகள் உருவாகும். வர்த்தக நிலையங்கள் தோன்றும்.
தமிழ்நாட்டில் இருக்கும்  சாதிச்சங்கங்கள் போன்று, ஊர்ச்சங்கங்கள் மலரும்.  பழையமாணவர் மன்றங்கள் உதயமாகும். கலை, இலக்கிய சங்கங்கள் துளிர்க்கும். அவற்றின் நிகழ்ச்சிகள் வருடாந்தம் நடக்கும்.
மக்களின் பெருக்கத்திற்கு ஏற்பவும் அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்றவாறும் சங்கங்கள், கோயில்கள், அமைப்புகள் உருவாகிக்கொண்டுதானிருக்கும்.
பனிக்குள் நெருப்பாக அன்றாடம் இயங்கிவரும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்கு வாழ்ந்துவரும் வடபுலத்தைச்சேர்ந்த மக்கள் மத்தியில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி ஊர்ச்சங்கங்களும் உருவாகி பல சமய பொதுப்பணிகள் பிரான்ஸிலும் அவர்களின் ஊர்களிலும் தொடருகின்றன.
அவர்களின் பேராதரவு பின்னணியில்தான் புலவர்மணி பண்டிதர் .மயில்வாகனனாரின் நூற்றாண்டுவிழா வெகுகோலாகலமாக நடந்தது.
எனது பாரிஸிற்கான  பயணமும்  புலவர்மணி பண்டிதர் .மயில்வாகனனாரின் நூற்றாண்டு விழாவுக்கானது என்பதை முதல் அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.  பண்டிதர் பன்னூலாசிரியர். இவர் குறித்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவியும் தற்போது யாழ். அராலி சரஸ்வதி வித்தியாலய ஆசிரியையுமான லயந்தினி பகீரதன், 2014 ஆம் ஆண்டில் ஆய்வுசெய்துள்ளார்.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 27/04/2019












இலங்கைச் செய்திகள்


கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நான்கு பேர் வைத்தியசாலையில்

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது


கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நான்கு பேர் வைத்தியசாலையில்


16/04/2019 கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.