உலகச் செய்திகள்


முதன்முறையாக சவுதி பெண்கள்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை : இன்னும்  4 நாட்களுக்கு மழை நீடிக்குமென எச்சரிக்கை

 ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் பலி

எம்.எச் 370 விமானத்தின் தேடுதல் பணி முடிவுக்கு


முதன்முறையாக சவுதி பெண்கள்


புலம் பெயர்ந்து வாழும் இடத்தில் தமிழ் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா ? - கீதா மாணிக்கவாசகம்

.
( அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கியச்சங்கம்  அண்மையில் நடத்திய  15  ஆவது    தமிழ்   எழுத்தாளர்   விழாவில் இடம்பெற்ற   மகளிர்அரங்கில்   சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை)




" புலம் பெயர்ந்து வாழும் இடத்தில் தமிழ் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா ?  " என்ற தலைப்பில் எழுதுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நமது சமுகத்தில் "பெண்ணே நீ உனக்கென வாழ்வது எப்போது ? மாற்றம் வரும் இத்தரணியில் அப்போது " என்ற சிந்தனை நடைமுறையிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிந்திக்கும் பெண் நான்.

ஒருவருடைய வாழும்முறை மற்றும் சிந்தனைகள் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்தே பெரும்பாலும் அமைகின்றது. பல தலைமுறைகளாகப் படித்த குடும்பத்தில் பிறந்து,  முற்போக்கான சிந்தனைகள் உள்ள சூழ்நிலையில் வளர்ந்த பெண் புலம் பெயர்ந்த இடத்தில், அவள் தாய் நாட்டில் எவ்வாறு சுதந்திரமாக வாழ்ந்தாளோ அதைப்போலவே தான் இங்கேயும் வாழ்கின்றாள்.

தற்கொலைகளின் வீரவணக்கம்.

.

தன்னம்பிக்கைமனவுறுதிமனிதம்மனிதநேயம் அற்ற மனிதர்களேதற்கொலை செய்து கொள்கிறார்கள்எம்தமிழ்சமூகத்தில் தற்கொலைஎன்ற ஒன்று இல்லை அத்தனையும் கொலைகளே. தற்கொலை என்ற சொல்லிலேயே கொலை இருக்கிறது உறவுகளே!

கோப்பாயைச் சேர்ந்த கொக்குவில் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில்கல்விபயிலும் மாணவனான இராயேஸ்வரன் செந்தூரன் எனும்இளைஞன் கொலை இப்படி ஒரு கட்டுரையை மீண்டும் எழுதவைத்துள்ளதுகொலை என்று எதற்கு எழுதினேன் என நீங்கள்வினாவலாம்தற்கொலை என்றால் என்னதன்னுயிரைதன்விருப்புடன் மாய்த்துக் கொள்வது என்று ஒன்றை வரியில்சொல்லிவிட்டுப் போகலாம்கொலை என்பது ஒருவரின் உயிரைஇன்னொருவர் எடுப்பதுஇந்தச் இளைஞன் செந்தூரனின்கொலையையும் நான் அப்படியே பார்க்கிறேன்புலம்பெயர்ந்தநாடுகளில் .ம் முருகதாசன் போன்றோர் செய்ததும் தற்கொலைஅல்ல கொலைமாவீரத்தின் பெயரில் செய்யப்பட்ட தற்கொலைத்தியாகங்களும் எனது பார்வையில் கொலையேஇதை மாவீரர் நாளில்எழுதுகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015 - நவரத்தினம் அல்லமதேவன்

.
விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட
வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015

மெல்பேணில் கடந்த 05.12.2015 சனிக்கிழமை Epping Memorial Hall, Epping. மண்டபத்தில் வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை 2015 மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் வெகு கோலாகலமாக நடந்தேறியுள்ளது. தமிழ்க் கலாச்சாரத்தின் படி மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. ஸ்ரீமதி ரமா சிவராஜாவின் மெல்பேண் கவின்கலை இசைக்கல்லூரியின் மாணவிகளான சாருநிதா செல்வராஜா, அம்சவி கோபாலசிங்கம், சாம்பிகா ஈஸ்வரநாதன், ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார்கள். வாத்தியக் கலைஞன் வாசவன் பஞ்சாட்சரம் தபேலா வாசித்திருந்தார்.
விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர், அறிவிப்பாளர் திரு.வில்லியம் இராஜேந்திரம் அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்று தந்து வரவேற்புரையை வழங்கியிருந்தார். தலைமையுரையில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவர், அறிவிப்பாளர் திரு.எட்வேட் மரியதாசன் அவர்கள் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும், முக்கிய செயற்பாடான வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி பற்றியும் அத்துடன் அனைத்து நேயர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்

எழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா - மணிமாலா

.

 எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற மாதம்  பாராட்டுவிழா ஒன்று ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2015 இல் இந்த நிகழ்வு ரொறன்ரோ, 3300 மக்னிக்கல் அவென்யூவில் உள்ள பாபா பாங்குவிட் ஹோலில் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசிய கீதத்தை செல்வி சாலினி மணிவண்ணனும், தமிழ் தாய் வாழ்த்தை செல்வி சங்கவி முகுந்தனும் இசைத்தனர். அடுத்து மௌன அஞ்சலி இடம் பெற்றது.
இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவரும், தன்னார்வத் தொண்டருமான கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தனை கனடாவில் உள்ள பல தொடர்பு சாதனங்கள், மன்றங்கள், சங்கங்கள் என்பன ஒன்று சேர்ந்து கௌரவித்திருந்தன. இலக்கிய ஆர்வலர்களால் மண்டபம் நிறைந்திருந்தது அவரது சேவைக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது. கனடா எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் குரு அரவிந்தனுக்கு ஆசியுரை வழங்கினார். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்களின் தலைமை உரை அடுத்து இடம் பெற்றது.

மறைமலை அடிகள்

.

‘‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!’’
- ராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவின் திருமுறையில் உள்ள பாட்டை மகள் நீலாம்பிகை படிக்க, தந்தை வேதாசலம் கேட்டுக்கொண்டு இருந்தார்.
சுவாமி வேதாசலத்துக்கு அந்தப் பாடலில் ஒரு நெருடல் இருந்தது. மகளிடமே கேட்டார். ‘‘நீலா! இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு உடம்பாகிய யாக்கை என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் வேதாசலம்.
‘‘அப்படியானால் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை எடுத்துத் தந்தார். அன்றுதான் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. எதையும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உடைய சுவாமி வேதாசலம், தனது பெயரை ‘மறைமலை அடிகள்’ என்று மாற்றிக் கொண்டார். தனித்து நிற்கும் தகுதியை உடையது தமிழ் என்று மறைமலை அடிகளால் உலகுக்கு உணர்த்தப்பட்டது.

தமிழ் சினிமா


உப்பு கருவாடு





மொழி, அபியும் நானும், பயணம் என தரமான படங்களை நமக்கு தொடர்ந்து அளித்துக்கொண்டு வருபவர் ராதாமோகன். கௌரவம் படத்தின் தோல்வி இவரின் திரைப்பயணத்தை கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியது.
ஆனால், மீண்டும் தன் அழகிய தீயே ஸ்டைலில் கருணாகரன், நந்திதா என இளம் நடிகர், நடிகைகள் கூட்டத்தோடு ராதாமோகன் களம் கண்டுள்ள படம் தான் உப்பு கருவாடு.
கதைக்களம்
படத்திற்குள் படம் என்பதன் திரைக்கதை பாணியை மெட்டாஎன்பார்கள். இதை வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்றால் அது பார்த்திபனின் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் தான்
அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும்ராதாமோகன் தொட்டுள்ள மெட்டா தான் உப்பு கருவாடு.
சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார் கருணாகரன்.
மயில் சாமி உதவியுடன் மீன் வியாபாரி எம்.எஸ்.பாஸ்கர் தயாரிப்பில் படம் இயக்க கருணாவிற்கு வாய்ப்பு வருகிறது.
ஆனால், இதற்கு அவரின் மகள் நந்திதாவை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என உத்தரவு போட, வேறு வழியில்லாமல் படத்தை இயக்க சம்மதிக்கிறார். சுட்டு போட்டாலும் நந்திதாவிற்கு நடிப்பு வரவில்லை, இருந்தாலும் எப்படியாவது எடுத்தாக வேண்டும் என போராடி முதல் நாள் படப்பிடிப்பு செல்ல, இடியாக வந்து விழுகிறது ஒரு செய்தி.
பிறகு அந்த பிரச்சனையை சமாளித்தார்களா, படத்தை எதிர்பார்த்தது போல் கருணா எடுத்தாரா என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார் ராதாமோகன்.
படத்தை பற்றிய அலசல்
கருணா, இத்தனை நாள் காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் கலக்கி வந்த இவர், முதன்முதலாக முழு நீள ஹீரோவாக களமிறங்கியுள்ளார், வாய்ப்புக்காக ஏங்கும் சந்திரனாக.
கிடைத்த வாய்ப்பு நன்றாக இல்லாமல் போக, ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இயக்க முடிவு செய்யும் காட்சி என அனைத்து எக்ஸ்பிரசனிலும் பட்டையை கிளப்புகிறார். படத்தில் இவருக்கு ஜோடி கூட உள்ளது. ரொமான்ஸ் தான் கொஞ்சம் தடுமாற்றம்.
நந்திதா ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும் என்கின்ற கதாபாத்திரம் நடிக்க தெரியாமலேயே நன்றாக நடித்துள்ளார்.
ராதாமோகன் படம் என்றாலே திரையில் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் கதாபாத்திரம் கூட சின்ன வசனத்தில் கவர்ந்து இழுக்கும், அந்த வகையில் இதில் எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், டவுட்டு செந்தில், மயில்சாமி, குமரவேல், டாடி சரவணன், நாரயணன் என அனைவரும் செம்ம ஸ்கோர் செய்கிறார்கள்.
அதிலும் மயில்சாமியின் சகுனம் பார்க்கும் காமெடி வயிறு குலுங்க வைக்கின்றது. இது மட்டுமின்றி சாம்ஸின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் தான் இந்த படம், தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து மிஸ் செய்யும் மிகச்சிறந்த காமெடியன் சாம்ஸ்.
படத்தின் உயிரே பொன் பார்த்திபனின் வசனங்கள் தான் இந்த வசனத்தை ரசித்து முடிப்பதற்கு அடுத்த வசனம் வந்து விடுகிறது. குறிப்பாக ‘இவ ஆக்டிங்க பார்த்தா.. புத்தருக்கே கோபம் வந்துடும்’, ’காரி துப்புனன்னா நெஞ்சில ஓட்டை விழுந்துடும்’, ’டாட்ட சுமோல பஞ்சர் ஒட்டலாம், டைட்டானிக்கே பஞ்சர் ஒட்ட முடியுமா’ போன்ற காமெடி வசனமாக இருந்தலும் சரி, ”வலி இல்லாத மனுஷனே இல்ல, வலி இருந்தா தாண்டா அவன் மனுஷன்” என அர்த்தமுள்ள வசனமாக இருந்தாலும் சரி ’ராதாமோகன் இஸ் பேக்’ என்று சொல்ல வைக்கின்றது. ஸ்டீவின் இசை சுமார் ரகம் தான்.
க்ளாப்ஸ்
வசனம்..வசனம்...வசனம்...என 10 முறை கூட சொல்லலாம், கதையே இல்லை என்றாலும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வலுவாக உள்ளதால் ரசிக்க வைக்கின்றது.
டவுட்டு செந்தில் தவறாக பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கின்றது, நல்ல எதிர்காலம் உள்ளது செந்தில். கருணா தான் ஹீரோ என்றாலும் அனைத்து கதாபாத்திரமும் மனதில் பதிகிறது.
பல்ப்ஸ்
படத்தின் ஒளிப்பதிவு ஏதோ குறும்படம் போல் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சிலருக்கு நாடகம் பார்க்கும் எண்ணம் கூட தோன்றலாம்.
படத்தில் கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும், ராதாமோகன் படம் என்றாலே கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் இருக்கும், இதில் அது மிஸ்ஸிங். சில நேரங்களில் நாம் ஏதும் ஸ்டேண்டப் காமெடி ஷோ வந்திருக்கோமா என தோன்ற செய்கிறது.
மொத்தத்தில் உப்பு கருவாடு ஜாலியாக ஒரு முறை சுவைக்கலாம்.
ரேட்டிங்- 2.75/5  நன்றி  cineulagam








நம்பிக்கை வேண்டும் - பாத்திமா ஹமீத் ஷார்ஜா

.

என்னயிந்த வாழ்க்கையென்று
அலுத்துக்கொள்ளும் நேரங்களில்,
நம்பிக்கைதரும் நிகழ்வுகள்சில
என்கண் முன்பே!

அணைத்தகைக் குழந்தையோடு,
அழுக்கடைந்த உடையோடு, 
அடுத்தவீட்டு வாசலில்,
அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி!

வாழ்க்கை வாழ்வதற்கேவென நம்பிக்கை கொடுத்தாள்!

கல்லூரியில் படிக்கும்மகனை,
காலையில் எழுப்பும்போது,
கனமான எதிர்காலம்குறித்து,
கலக்கம் எனக்குள்!

Laughing-O-Laughing நாடகம் பற்றிய ஒரு கண்ணோட்டம் - இந்துமதி சிறினிவாசன்

.

"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்னப் பொடியன் பெரிய மனுசர் நடிப்பைப் பார்க்க சிரிப்பு வருது" என்பது போல அமைந்திருந்தது  Laughing-O-Laughing. கடந்த 14/15 ம் திகதிகளில் சிட்னி மாநகரில் இந்த நாடகத்தினை பார்த்து மகிழக் கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்திருந்தது. 'அறம் செய்ய விரும்பு' என்ற ஔவை மூதாட்டியின் வழிப்படி ஆண்டுதோறும் மருத்துவ நிதி சேகரிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டு வருகிறது. இன் நிகழ்வில் டாக்டர் ஜெயமோகனின் Laughing-O-Laughing நாடகம் கடந்த சில வருடங்களாக நடை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஜெயமோகன் அவர்கள் பன்முகங் கொண்ட ஒரு திறமையாளர் என்றே கூறலாம். நாடகத்தின் வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்து அம்சங்களையும் நேர்த்தியாகவே செதுக்கியிருந்தார். தனியே சிரித்துவிட்டு செல்லாமல் சிரிப்பினூடாக ஏதோவொரு சமூகத்தின் செய்தியினை பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது என்பதில் கவனம் எடுத்துள்ளார் என்பதை நாடகங்களினைப் பார்கின்ற போது துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.



ATBC அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள்

.
ஞாயிற்றுக் கிழமை  சிட்னியில் நடைபெற்ற அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள் .

1ம் பரிசு இலக்கம்   1093
2ம் பரிசு இலக்கம்    1522
3ம் பரிசு இலக்கம்    3251
4ம் பரிசு இலக்கம்    1972
5ம் பரிசு இலக்கம்    1749
6ம் பரிசு இலக்கம்     2002
7ம் பரிசு இலக்கம்    1549
8ம் பரிசு இலக்கம்     1781
9ம் பரிசு இலக்கம்     3334
10ம் பரிசு இலக்கம்    1650

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு

.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள கலை - இலக்கிய நிகழ்வுகள் - மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெறும்.
இதனையடுத்து அண்மையில் வெளியான இரண்டு புதிய நாவல்கள் மற்றும் இரண்டு புதிய சிறுகதைத்தொகுதிகள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் இடம்பெறும்.
வாசிப்பு அனுபவப்பகிர்வில் இடம்பெறும் நூல்கள்
பொக்ஸ் -- Box ( நாவல்) ஷோபா சக்தி - விமர்சன உரை: திரு. ஜே.கே. ஜெயக்குமாரன்
நிலவு குளிர்ச்சியாக இல்லை - (சிறுகதைத்தொகுதி ) - வடகோவை
வரதராஜன் -  விமர்சன உரை: டொக்டர் நடேசன்
ஆயுதஎழுத்து -- ( நாவல்) - சாத்திரி - விமர்சனஉரை: திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி
கோமகனின் தனிக்கதை -- ( சிறுகதைத்தொகுதி ) கோமகன் -விமர்சனஉரை: திரு. எஸ். அறவேந்தன்

கருத்துரை -- போருக்குப்பின்பான ஈழத்து இலக்கியவளர்ச்சி
                  திரு. சி. வன்னியகுலம்
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்