ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..
.
காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை 'இலங்கையின் இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்' வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்கு வேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
நீ பார்க்கும் பார்வையிலே..
அன்பும் வணக்கத்தோடும்..
வித்யாசாகர்
காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை 'இலங்கையின் இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்' வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்கு வேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
நீ பார்க்கும் பார்வையிலே..
அன்பும் வணக்கத்தோடும்..
வித்யாசாகர்
மௌனம் கலைகிறது 12 – நடராஜா குருபரன்
மரணத்தின் வாசல் வரை....
' புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள் முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக் கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன்.'
Wednesday 30th August 2006 The Island
வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 35 வளவளா குளகுளா
.
ஞானா: அப்பா…….அப்பா…..திருக்குறளிலை வளவளா குளகுளா எண்டு ஒரு குறள் இருக்குது, உங்களுக்குத் தெரியுமே?
அப்பா: ஞானா, உன்னைப் போலை பெம்பிளைப் பிள்ளையள்தான் வளவளா குளகுளா எண்டு பேசுறது. திருவள்ளுவப் பெருந்தகை சொற் சுருக்கமானவர் கண்டியோ.
ஞனா: இந்தாருங்கோ அப்பா, நீங்கள் வாங்கித் தந்த திருக்குறள் புத்தகம். 523 ஆவது குறளைப் பாருக்கோ.
அப்பா: எங்கை கொண்டா ஞானா பாப்பம். …..ம்….53ஆம் அதிகாரம் சுற்றந்தழால். சுற்றந்தழால் என்டால் கருத்து உனக்குத் தெரியுமே?
ஞானா: அதிலை போட்டிருக்குத்தானே. வாசிச்சுப் பாருங்கோவன்.
அப்பா: சுற்றந்தழால் என்பது, சுற்றம் தழுவுதல். உறவினர்களை ஆதரித்தல் என்பது பொருள். இதிலை நீ சொன்ன 523ஆம் குறளைப் பாப்பம்………எடி விசர்ப்பிள்ளை. இதிலை வளவளா குளகுளா எண்டே கிடக்குது?
சுந்தரி: அப்பா அவள் பிள்ளை ஞானா ஏதாவது குறும்புவிட சொல்லியிருப்பாள். நீங்கள் அந்தக் குறளை வாசியுங்கோ கேட்பம்.
அப்பா: இஞ்சை பாரும் சுந்தரி, இவள் என்ள விறுக்கா விட்டிருக்கிறாள் எண்டு. குறளைக்கேளும்.
“அளவளா இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று,”
ஞானா: மன்னியுங்கோ அப்பா. சும்மா ஒரு முசுப்பாத்திக்குச் சொன்னனான். இனிமேல் நான் உந்தமாதிரிக் குறும்பு விடுகிறதை நிறுத்தப் போறன். குறளிலை விளங்காத விஷயத்தை நேரடியாய் வந்து கேக்கிறன்.
அப்பா: அது நல்ல பழக்கம். இனிமேல் அப்பிடிச் செய் ஞானா.
ஞானா: அப்பா…….அப்பா…..திருக்குறளிலை வளவளா குளகுளா எண்டு ஒரு குறள் இருக்குது, உங்களுக்குத் தெரியுமே?
அப்பா: ஞானா, உன்னைப் போலை பெம்பிளைப் பிள்ளையள்தான் வளவளா குளகுளா எண்டு பேசுறது. திருவள்ளுவப் பெருந்தகை சொற் சுருக்கமானவர் கண்டியோ.
ஞனா: இந்தாருங்கோ அப்பா, நீங்கள் வாங்கித் தந்த திருக்குறள் புத்தகம். 523 ஆவது குறளைப் பாருக்கோ.
அப்பா: எங்கை கொண்டா ஞானா பாப்பம். …..ம்….53ஆம் அதிகாரம் சுற்றந்தழால். சுற்றந்தழால் என்டால் கருத்து உனக்குத் தெரியுமே?
ஞானா: அதிலை போட்டிருக்குத்தானே. வாசிச்சுப் பாருங்கோவன்.
அப்பா: சுற்றந்தழால் என்பது, சுற்றம் தழுவுதல். உறவினர்களை ஆதரித்தல் என்பது பொருள். இதிலை நீ சொன்ன 523ஆம் குறளைப் பாப்பம்………எடி விசர்ப்பிள்ளை. இதிலை வளவளா குளகுளா எண்டே கிடக்குது?
சுந்தரி: அப்பா அவள் பிள்ளை ஞானா ஏதாவது குறும்புவிட சொல்லியிருப்பாள். நீங்கள் அந்தக் குறளை வாசியுங்கோ கேட்பம்.
அப்பா: இஞ்சை பாரும் சுந்தரி, இவள் என்ள விறுக்கா விட்டிருக்கிறாள் எண்டு. குறளைக்கேளும்.
“அளவளா இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று,”
ஞானா: மன்னியுங்கோ அப்பா. சும்மா ஒரு முசுப்பாத்திக்குச் சொன்னனான். இனிமேல் நான் உந்தமாதிரிக் குறும்பு விடுகிறதை நிறுத்தப் போறன். குறளிலை விளங்காத விஷயத்தை நேரடியாய் வந்து கேக்கிறன்.
அப்பா: அது நல்ல பழக்கம். இனிமேல் அப்பிடிச் செய் ஞானா.
உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது? - காவிரிமைந்தன்
.
முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.
இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு,கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.
செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு,குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை. ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது. உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது. இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.
அகவு ஆறில் தடம் பதிக்கும் வானமுதம்" தமிழ் ஒலிபரப்பு.
.
நவரத்தினம் அல்லமதேவன்
அவுஸ்த்திரேலிய கண்டத்தில் மெல்பேர்ண் மாநகரில் உதித்த சமூகவானொலி தான் வானமுதம் எனும் தமிழ் ஒலிபரப்புச் சேவை. வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை சீராகவும், நேர்த்தியாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் அன்றாடம் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் சகல தேவைகளையும் சளைப்பின்றி, முழுமனதோடு நிறைவேற்றி வருகின்றது. வானமுதம் எனும் தமிழ் வானொலியின் முன்னேற்றம் வானுயர்ந்து வளர்வதைப் பார்க்க முடிகின்றது.
மெல்போர்ணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கம்(Whittlesea Tamil Association) 2006 ஆம் ஆண்டு அதன் செயற்பாடாக உதயமானது தான் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை.Plenty valley FM 88.6 எனும் பண்பலைவரிசையில் சமூக வானொலியின் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்ற போது பல்லின சமூகங்களுக்கும் பயன் பெறக் கூடிய வகையில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதியை நண்பனாக கருதும் அரபு நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கையை ஆதரித்தன
நீண்ட நாட்களுக்கு பின்
தெரிவுக் குழுவும் கூட்டமைப்பும்
தேசிய நல்லிணக்கம்' எப்போதுமே அழகிய கனவுதான்
அரசின் "புதிய எதிரிகள்"
பொன்சேகாவால் ஆவதென்ன ?
யுத்த்த்தில் இந்தியாவை இலங்கை சாமர்த்தியமாக சேர்த்த்து எவ்வாறு? இந்திய அரசியல் தலைவர்களின் முக்கிய பங்களிப்பை தவிர்த்துக் கொண்ட சாணக்கியம் விபரிக்கும் “கோதாவின் யுத்தம்’
பொன்சேகாவும் எதிரணியும்
நாணய மதிப்பிறக்கம் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்:கலாநிதி எம்.கணேசமூர்த்தி
தமிழ் சினிமா
ராட்டினம்

நாம் பார்த்த அல்லது அனுபவித்த வலியை, அந்தத் தன்மை மாறாமல் திரையில் மீண்டும் பார்க்கும் போது மனசெல்லாம் இனம் புரியாத உணர்வு ஆக்கிரமித்து நிற்கிறது.
எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும்
சினிமாத்தனமில்லாத இயல்பு இவை தான் ராட்டினத்தின் சிறப்புகள்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இதற்கு முன் வேறு எந்தப் படத்திலும் இத்தனை சிறப்பாக கதைக்களமாக்கியதில்லை என்பதற்காகவே இயக்குநர் தங்கசாமியைப் பாராட்ட வேண்டும்.
பள்ளி முடித்த ஜெயத்துக்கும்(லகுபரன்) பள்ளியில் படிக்கும் தனத்துக்கும்(ஸ்வாதி) காதல். ஜெயத்தின் அண்ணன் வளரும் இளம் அரசியல்வாதி.
அண்ணி லோக்கல் கவுன்சிலர். தனத்தின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன். தாய் மாமா பெரிய 'க்ரிமினல்'... லாயர். அரசியல் தொடர்புகள் எக்கச்சக்கம்!

பிரச்சினையை பக்குவமாகக் கையாள நினைக்கும் பெண்வீட்டுத் தரப்பு, நேராக ஜெயம் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி கண்டித்து வைக்கச் சொல்கிறார்கள்.
பெண்ணை கொஞ்ச நாள் வெளியூருக்கு அழைத்துப் போய் வைத்திருந்து, மீண்டும் வருகிறார்கள். ஆனால் காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். தனத்தின் அண்ணன் பார்த்துவிட பிரச்சினை வெடிக்கிறது.
பெற்றோரின் வெறுப்பு தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறும் தனம், தன்னை அழைத்துப் போய் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். குலசை தசரா விழாவில் வைத்து தாலி கட்டுகிறான் ஜெயம்.
அதற்குள் விஷயத்தை இருவீட்டாரும் அரசியலாக்கிவிடுகிறார்கள்.
ஜெயத்தின் அண்ணன் அசோக்கை, கட்சியின் அண்ணாச்சி அழைத்து எச்சரிக்க, பதிலுக்கு இவரும் கையை உயர்த்த, அது அசோக் கொலையில் முடிகிறது.

விஷயம் கேள்விப்பட்டு கதறிக்கொண்டு புது மனையியுடன் வீடு திரும்புகிறான் ஜெயம். அங்கே விதவை அண்ணி வெறுப்பை உமிழ, இன்னொரு பக்கம் காத்திருக்கும் தனத்தின் வீட்டினர், அவளை தரதரவென இழுத்துப் போகிறார்கள்.
ஜெயம் கட்டிய தாலி என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்!
ஜெயம் - தனம் திருமணம், அசோக் கொலை போன்ற சில காட்சிகள், திருப்பங்களை யூகிக்க முடிந்தாலும் எந்தக் காட்சியிலும், 'அட இது சினிமாத்தனமா இருக்கே' என்று சொல்ல முடியாததுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.
லகுபரன், ஸ்வாதி இருவருக்குமே இது முதல் படம் என்றாலும் நம்ப முடியாத அளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு இம்மி கூட மிகைப்படுத்தல் இல்லாத காதலையும் சோகத்தையும் திரையில் பார்ப்பது, நம்மை நாமே பார்த்துக் கொள்வதைப் போல புதிதாக உள்ளது.

கதை புதிதில்லை... 'காதல்' போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்படி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன. அப்படிப் பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதே கூட திரும்பத் திரும்ப அரங்கேறிய நாடகம்தானே!
படத்தின் முக்கிய பலம் க்ளைமாக்ஸ். ஆனால் இன்னொரு பக்கம் இது சர்ச்சைக்குரியதும் கூட. பள்ளி வயதில் வரும் எல்லா காதலுமே மாறுதலுக்குட்பட்டது என்று சொல்ல முடியாதே. அந்தக் காதலின் தொடர்ச்சி அடுத்தக் கட்டத்துக்குப் போய், வாழ்க்கையில் இணைந்தவர்களை என்னவென்பது!
ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு, மனு ரமேசனின் இசை என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் சோடை போகவில்லை. பின்னணி இசையில் மண்ணும் மனிதர்களின் மனமும் தெரிகிறது.
புதிய இயக்குநர்களில் தங்கசாமி நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் தெரிகிறார். வாழ்த்துகள்!
நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்.
ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்.
இசை: மனு ரமேசன்.
பிஆர்ஓ: நிகில்.
தயாரிப்பு: ஜே மகாலட்சுமி.
எழுத்து - இயக்கம்: கே எஸ் தங்கசாமி.
நன்றி விடுப்பு
‘மே 18’ அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ‘தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வுகள்
.
ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேண் நகரங்களில் நடைபெற்றுள்ளன.

சிட்னி சைவ மன்ற பரிசளிப்பு விழா
.
சிட்னி சைவ மன்றம நடாத்திய அறிவுப்போட்டி 2012 இல் பங்குபற்றி பரிசில்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சென்ற ஞாயிற்றுகிழமை பரிசில்கள் வழங்கப்பட்டது . பரிசில்கள் பெ
று ம் பிள்ளைகளை கீழே உள்ள படங்களில் காணலாம் .
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தடம் பதிக்கும் 11ம் ஆண்டு. 11k; Mz;L.
.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு பதினொராவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. ஆயல 15ம் திகதி இந்த பதிய ஆண்டிற்குள் புத்துணர்வோடு தடம்பதித்துள்ளதில் நேயர்களும் அறிவிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் நிர்வாகிகள் என்போரும் மகிழ்வோடு நினைவு கூர்ந்தார்கள். உயர்ந்த இலட்சியத்தோடும் ஒழுங்கு நெறியோடும். மக்கள் மனங்களில் தடம் பதித்து நிறைவான தரமான நிகழ்வுகளை உள்ளடக்கி இலக்கியம் ஆன்மீகம் அறிவியல் ஜனரஞ்சகம் என பல்முக பார்வைகளோடு நடைபயிலும் இந்த வானொலியில் 75 இற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அறிவிப்பாளர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் தொழில்நுட்பவியலாளர்களாகவும் பணிபுரிகின்றார்கள் என்பது வியக்கவைக்கும் உண்மையாக உள்ளது. நேயர்களின் ஒத்துளைப்பும் ஊக்கமும் தொண்டர்களின் சளைக்காத உளைப்பும் இந்த சாதனையை படைக்கின்றது என்றால் அது மிகையாகாது.
காயங்களிலிருந்து ஒளிரும் புன்னகை -
சிட்னி தமிழ் அறிவகத்தின் சேவையில் திரு லோகேந்திரன் - செ.பாஸ்கரன்
.
சிட்னி தமிழ் அறிவகம் நீண்டகாலமாக சிட்னியில் இயங்கிவரும் ஒரு தமிழ் நூலகம் மாத்திரமல்ல ஒரு ஆவண காப்பகமாகவும் இயங்கிவருகிறது. சுழற்ச்சி முறையில் தலைவர் செயலாளர் செயற்குழு அங்கத்தவர்கள் என்று ஆட்கள் மாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களை அவ்வப்போது நடைபெறும் அறிவக ஆண்டுவிழாக்களில் காணக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் மாறாமல் இருப்பவர்கள் தொண்டர்களாக இந்த அறிவகத்தை திறந்து வைத்திருந்து புத்தகங்களை பரிவர்த்தனை செய்யும் சில நல்ல மனிதர்கள்தான். இவர்கள் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாட்களோ கடமைபுரிவார்கள். பெரும்பாலும் வயதில் மூத்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் சேவை பலருக்கு தெரியவராமலே இருந்துவிடுகின்றது. இவர்களில் சிலரோடு தமிழ்முரசிற்காக பேசவேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருந்தபோதும் நேரம் பொருந்திவருவது சிரமமாகவே இருந்தது. அண்மையில் ஒருவாறு நேரம் ஒதுக்கி அங்கு சென்றபோது அன்றய நாளின் தொண்டராக இருந்தவர். திரு சிவக்கொழுந்து லோகேந்திரன் அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)