கடவுளும் கொரோனாவும் - ருத்ரா


கொரோனா முன் தோன்றினார்
கடவுள்.
"இப்படி நீ உயிர் குடிப்பது
நியாயம் தானா?"
என்றார்.

"அது சரி!
கையை சோப்பு போட்டு கழுவினீர்களா?
முக கவசம் எங்கே?"

"என்ன சொல்கிறாய்?"
அவர் "புலித்தோல்" ஆடை கூட‌
வெட வெடத்தது!

"அய்யோ..
இது ஏதோ புது பிரணவ மந்திரம்
போல் இருக்கிறதே.
"சண்முக கவசம் " தெரியும்.
அது என்ன வெறும் முக கவசம்?
நம் குட்டிப்பயலைத்தான் 
கேட்க வேண்டும்"
கடவுள்
உள்ளுக்குள் பேசிக்கொண்டார்.

கொரோனா
"பக பக"வென்று சிரித்தது.

___________________________________________

No comments: