மாதந்தோறும் கந்தபுராணப் படிப்பு - உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா

 முருகனடியார்களே,உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த பதினைந்து வருடங்களாக திருமுறை முற்றோதலை நடாத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

zoom வழியாக மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் சிட்னி நேரம் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கந்தபுராணப் படிப்பை ஆரம்பிக்க திருவருள் கூடியுள்ளது. ஆரம்பத்தில் வள்ளியம்மை திருமணப்படலமும் தொடர்ந்து ஏனைய படலங்களும் படிக்கவுள்ளோம். கந்தபுராணப் படிப்பில் மிகவும் அனுபவம் வாய்ந்த பெரியோர்கள் பொருள் சொல்லவுள்ளார்கள். முருகனடியார்கள் இந்நிகழ்வில் கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணப் பாடல்களைப் பாடுவதிலும் பொருளைக் கேட்பதிலும் பங்கு பற்றி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 ZOOM - தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
 

Join Zoom Meeting

No comments: