'கிட்டுவின் தியாகம், ரசிகர்களை ஈர்த்ததா..?' - மாவீரன் கிட்டு விமர்சனம்

.


கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்கிற விஷயத்தை நோக்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பயணமும், அந்த மூன்று விஷயங்களையும் தடுக்கிற ஆதிக்கசாதி சூழ்ச்சியும்தான் மாவீரன் கிட்டுவின் கதை. 
கதை முழுக்கவும் 1987ல் நடக்கிறது. பொதுவழியில் பிணத்தைக்கூட கொண்டு செல்லவிடாமல் தடுக்கிற ஆதிக்கசாதியினர் ஒருபக்கம், கல்விகற்று முன்னேறி தங்களுடைய வாழ்வை மாற்றிக்கொள்ள துடிக்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இன்னொருபக்கம். என்றாவது ஒருநாள் அந்தப் பொதுவழியில் நிமிர்ந்து நடப்பது ஒன்றுதான் ஒடுக்கப்பட்டமக்களின் ஒரே லட்சியம். 
பனிரெண்டாம் வகுப்பில் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, முதல்தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்குச் செல்கிறார் தாழ்த்தப்பட்ட சாதியைசேர்ந்த விஷ்ணு விஷால்.அவரை படிக்கவைப்பவர் ஊர்மக்களின் பிரச்னைகளுக்கெதிராகவும் குரல்கொடுக்கும் பார்த்திபன். தம் மக்களின் நிலை மாற வேண்டுமானால், விஷ்ணு விஷால் படித்து கலெக்டராக வேண்டும் என்ற பார்த்திபனின் வார்த்தைகளை சிரமேற்கிறார் விஷ்ணுவிஷால்.  

சிறைபட்ட மழை..வித்யாசாகர்

.

ழைபெய்த மறுநாள்
சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும்
இன்று பள்ளிக்கூடம் உண்டென்று..
விடாது பெய்த பேய்மழை
அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல
ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்..
தெருவோரம் தவளைமீன்கள்
பாதி இறந்திருக்கும், தவளைகள்
மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்..
சாலையோரமெலாம் தேங்கிய நீரில்
முகமெட்டிப் பார்த்து, காலலைய – விடுமுறை
விடாத மழையை மிதித்தவாறே செல்வோம்..
வேலிமுள் துளிர்களை
சாலையோர புங்கைமரக் கிளைகளை இழுத்துஇழுத்து
இலையுதிரும் மழைத்துளியை நெஞ்சுக்குள் சேமிப்போம்..
பச்சைபசேல் மரந் தாண்டி தாண்டி
உதிர்ந்தப் பூ வாசம் கடந்து
உள்ளே தேசியகீதம் ஒலிக்கத் துவங்கும்..

தமிழ் சினிமா


கவலை வேண்டாம்



ஜீவா-காஜல் அகர்வால் இருவருமே தற்போது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள். இந்நிலையில் யாருமிக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் கவலை வேண்டாம். இப்படம் ஜீவா-காஜலுக்கு ஹிட் கொடுத்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஜீவா-காஜல் ப்ரேக் அப்புடன் தொடங்குகின்றது. ஜீவா சொந்த ஊரில் இதையெல்லாம் மறந்து நண்பர்களுடன் ஜாலியாக இருக்கின்றார்.
காஜல் தன் ஸ்டேட்டஸுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக பாபி சிம்ஹாவை தேர்ந்தெடுக்கின்றார், அதற்காக ஜீவாவிடம் விவாகரத்து வாங்க செல்கின்றார்.
நண்பர்கள் கொடுக்கும் யோசனையால் ஜீவா ஒரு வாரம் என்னுடன் மனைவியாக சேர்ந்து வாழ் என்று சொல்ல, அதன் பிறகு காஜல் எடுக்கும் முடிவு என்ன? என்பதே இந்த கவலை வேண்டாம்.

படத்தை பற்றிய அலசல்

ஜீவா இது தான் நம்ம ரூட்டுன்னு பல வருஷம் கழிச்சு பிடிச்சிருக்கிறார். பெரும்பாலும் என்றென்றும் புன்னகை சாயல் நிறையவே தெரிகின்றது, என்ன சந்தானம் மட்டுமே மிஸ்.
காஜல் முதன் முதலாக படம் முழுவதும் ‘நடித்துள்ளார்’. ஆம், வெறும் பாட்டு மட்டுமில்லாமல் தன் குண்டு கண்களை உருட்டி ரசிகர்களை கவர்ந்து செல்கின்றார்.
பாலாஜி போன வாரம் என்ன பார்த்தோம், கடவுள் இருக்கான் குமாரு, அந்த வசனத்தின் அப்கிரேட் தான் இந்த கவலை வேண்டாம். சந்தானத்தை மிஸ் செய்கின்றோமோ என தோன்ற வைக்கின்றது.
படம் அடல்ட் ஒன்லீ என கூறிவிடலாம், ஏனெனில் பல இடத்தில் கத்திரி விழுந்துள்ளது. அதிலும் போலிஸ் ஸ்டேஷனில் செய்யும் அட்டகாசம் சிரிப்பு கேரண்டி.
படத்தின் ஒளிப்பதிவு ஏதோ பாலிவுட் படம் போல் உள்ளது. கலர்புல்லாக இருக்க, அனைவரும் அழகாகவும் நடித்துள்ளனர், லியோன் ஜேம்ஸ் இசையும் ரசிக்க வைக்கின்றது.

க்ளாப்ஸ்

ஜீவா-காஜலின் கலர்புல் ஜோடி.
மயில்சாமி எல்லாம் நிறைய கதாபாத்திரம் கொடுங்கப்பா..என்று கூறும் அளவிற்கு கலக்கியுள்ளார்.
படத்தின் முதல் பாதி, ஒளிப்பதிவு, இசை.

பல்ப்ஸ்

கொஞ்சம் இரண்டாம் பாதி மெதுவாக நகர்வது போல் பீலிங்.
பாபி சிம்ஹா உங்களுக்கு என்ன தான் ஆச்சு?
மொத்தத்தில் எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் ஒரு முறை கவலையை மறந்து ஜாலியாக சென்று வரலாம்.
Direction:
Production:
Music:

நன்றி  cineulagam

அணையாத சுடரேற்றுவேன்! - -கே. ரவி

.

அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்
அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்
கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்
கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்
அணையாத சுடரேற்றுவேன்!
விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான                             
விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற
எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்
விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள
அணையாத சுடரேற்றுவேன்!
பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்
போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி
பொய்யாகிப் போய்மறைய – எந்தப்
பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ
அணையாத சுடரேற்றுவேன்!

முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவு

.

கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro 9௦) காலமானார்.
13 ஆகஸ்ட் 1926ம் ஆண்டு பிறந்த இவர் 25 நவம்பர் 2016 இல் காலமானார் .  இந்த துயர சம்பவத்தை ராகுல் காஸ்ட்ரோ அவர்கள் அறிவித்திருக்கிறார்.
ஏறத்தாழ 50 வருடங்கள் கியூபா நாட்டை கட்டி காத்துவந்த பிடல் காஸ்ட்ரோ  உடல்  நலக்குறைவால்  2008ம் ஆண்டு தனது சகோதரனான ராகுல் காஸ்ட்ரோவிடம் ( Raúl Castro)ஆட்சியை ஒப்படைத்தார் . உலகத்தில் அதிக வைத்தியர்களை உருவாக்கி  உலக நாடுகளுக்கு வைத்திய உதவிக்காக வைத்தியர்களை அனுப்பி உதவி புரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் குல மாணிக்கத்தை  வைத்தியர்களால்கூட காப்பாற்ற முடியாமல் போய்  விட்டது என்பது கவலையே.


தினம் - (சிறுகதை) - முருகபூபதி

  .                                    
        " கழுத்தில்  சயனைற்  குப்பி, கரத்தில்  ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன்,  இப்போது எதுவுமே  இல்லாமல்  காற்றுப்போல்  அலைகிறான்."
                                                         
சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத்  தயாராகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட  அழகிய காருக்குப்பின்னால்  தத்தம்  கார்களில் அணிவகுத்து வருவார்கள்.
மயானத்திற்குச்சென்றபின்னர்,   எரிவாயுவில்  என்னை சாம்பலாக்கிவிடுவார்கள். செம்மணியிலும்  கோம்பயன் மணலிலும் மரக்குற்றிகளும் விறகுகளும் மண்ணெண்ணையும்  செய்யும் கைங்கரியத்தை கண்ணுக்குப்புலப்படாத  வாயு  இந்த நாட்டில் என்னை  தகனமாக்கப்போகிறது.
நாட்டுக்கு  நாடு  இந்த  அக்கினி  சங்கமத்தில்தான் எத்தனை வேறுபாடு...?
காராளசிங்கம்,  மருமகனிடமும்  மரணச்சடங்கிற்கு வந்தவர்களிடமும் சொன்னதையே  மீண்டும்  மீண்டும் அலுப்புத்தட்டாமல்,  வாய் ஓயாமல்  சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு  சொல்வதில் பெருமிதமும்  காண்கிறார்.


ஈழத்து இசை வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் வைசாலி.

.
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.


யார் இந்த வைசாலி? கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கொண்ட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த திரு. யோகராஜன், திருமதி. நீதிமதி யோகராஜன் ஆகியோரின் செல்வப்புதல்வி. 2014 ஆம் ஆண்டு ஈழத்தில் சக்தி தொலைக்காட்சியினரால் நடாத்தப்பட்ட “யூனியர் சுப்பர் ஸ்டார்”   என்கின்ற வெற்றி மகுடத்தைத் தன் இசை ஞானத்தினாற் தனதாக்கிக்;  கொண்ட  குட்டித் தேவதை. அப்போது இவளுக்கு வயது பதினொன்று.
அம்மம்மாவின் தாலாட்டில் மெய்மறந்து துயில்கொண்டும், பெரியம்மா ஹேமவதி கபிலதாஸின் இசை வகுப்புகளைத் தினமும் செவிமடுத்தும், வளர்ந்த இந்தக் குழந்தையிடம் குடி கொண்டிருந்த இசையாற்றலை, முதன் முதலிற் கண்டறிந்தவர் இவரின் அம்மம்மாதான். அம்மம்மாவின் அறிவுறுத்தலின் படி மூன்று வயதில் இருந்தே அப்பா யோகராஜனும், அம்மா நீதிமதியும் வைசாலிக்கு இசையைக் கற்பிக்க ஆரம்பித்து விட்டனர். வைசாலிக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஈழத்தின் மிகச் சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகர்களில் ஒருவரும், இராமநாதன் நுன்கலைக் கழகத்தில் மிக நீண்ட காலமாக மிகச்சிறந்த இசை விரிவுரையாளராகக் கடைமை புரிந்தவருமான திரு ஏ.கே.கருணாகரன் அவர்கள் வைசாலியின் இசை ஞானத்தினைக் கேள்வியுற்றுத் தனது “ஆலாபனா” சபையில் மும்மூர்த்திகள் விழாவிற் பாடவைத்தார்.

AMAF proudly presents முத்தமிழ் மாலை - 16




தாடியில் கூட விஷம் தடவினர்.. அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த மாவீரன் பிடல் காஸ்ட்ரோ

.


ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 முறை அமெரிக்கா முயன்றது. அவரது முக்கியத்துவத்தை இந்த சம்பவங்களே உலகத்திற்கு புடம் போட்டு காட்டும். அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளை சுவைப்பதற்காகவும் கியூபாவுக்கு படையெடுத்து வந்தனர் அமெரிக்க கணவான்கள். தங்கள் நாடு, அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதை பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறியவர்தான் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கா தனது கையாட்களை கியூபாவின் அதிபர்களாக நியமித்து, கால்பந்தாக உருட்டி விளையாடியது.

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே நூல் வெளியீடு 03 12 2016

.
கலாநிதி கா. ரூபமூர்த்தி அவர்களின் நூல் வெளியீடு 03 12 2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு  சிட்னி முருகன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற உள்ளது.


கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு

.

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் சங்கராகுப்தம் இவர் பிறந்த ஊர். இவருக்கு முரளி கிருஷ்ணா என்றே பெயர் சூட்டப்பட்டது. தனது 8-வது வயதிலேயே விஜயவாடாவில் தனது முதல் கச்சேரியில் பாடினார்.
அப்போது, ஹரிகதா புகழ் முசுநுரி சூரிய நாராயண மூர்த்தி பாகவதர் என்பவர் 8 வயதில் முரளி கிருஷ்ணாவின் முதல் கச்சேரியைக் கேட்டுவிட்டு ‘பால’ என்ற அடைமொழியைச் சேர்த்தார், அன்று முதல் இவர் பாலமுரளி கிருஷ்ணா என்று அழைக்கப்பட்டார்.

 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

திரிமுகி, பஞ்சமுகி, சப்த முகி, நவமுகி ஆகியவற்றின் மூலம் தாள அமைப்பில் புதியன புகுத்தினார் பாலமுரளி கிருஷ்ணா. 

பாடகர் என்பதுடன் வயலின், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பார் பாலமுரளி. 

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு

.


 அவுஸ்திரேலியாவில்  பலவருடங்களாக இயங்கிவரும்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்   ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (26 ஆம் திகதி) சனிக்கிழமை  மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House  மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால்  உயிரிழந்தவர்களுக்காகவும்  கடந்த  ஆண்டு இறுதியில்  மறைந்த   முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2015-2016 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் புதிய நடப்பாண்டுக்கான ( 2016 -2017) புதிய நிருவாகிகள் தெரிவு, கிடைக்கப்பெற்ற பரிந்துரைப்படிவங்களின் (Nominations) அடிப்படையில் நடைபெற்றது.


உலகச் செய்திகள்


ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 27 மணி நேர வரலாற்று சத்திரசிகிச்சை ; தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் முதல் தடவை சந்தித்த கண்கொள்ளா காட்சி

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : மறுபடி வாக்கு எண்ணிக்கை நடத்த ஹிலாரி அணி கோரிக்கை

 பக்தாத்தில் குண்டு வெடிப்பு :பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் கெஸ்ட்ரோ  காலமானார்



அப்போலோவிற்குள் சென்ற இயந்திரமும்... பிராதாப் ரெட்டியின் பேட்டியும்!

Chairman_18389.jpg“முதல்வர் ஜெயலலிதா மனவலிமை மிக்கவர் என்பதால் விரைவாக குணமடைந்துவிட்டார். இயல்புநிலைக்கு திரும்பி உள்ள அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் உடல்நிலை குறித்து பிரதாப் ரெட்டி இப்படிக் கூறுவது முதல்முறை அல்ல. “முதல்வர் நலமுடன் உள்ளார், வீடு திரும்புவதைப் பற்றி அவர்தான் முடிவு செய்யவேண்டும்” என்று முதலில் பேசியவர், அடுத்த முறை “முதல்வரின் உடல் உறுப்புகள் சீராவதற்கு ஏழு வாரங்கள் ஆகும்” என்று சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான் இன்று “பிசியோதெரபி சிகிச்சை” என்று மீண்டும் பிரதாப் ரெட்டி சொல்லியுள்ளார். முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபடும் தகவல், கடந்த மாதமே வெளியானது. குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து இந்த சிகிச்சை அளிக்க இரண்டு பெண் மருத்துவர்கள் அப்போலோவுக்கு வருகை தந்தனர். ஆனால், ஒரு மாதம் கடந்த பிறகும் ஏன் இப்போது பிசியோதெரபி சிகிச்சை பற்றி மீண்டும் பிரதாப் ரெட்டி பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.