என்றுமே வாழ்வு இன்பமாய் மிளிரும் !

  • மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா

           

             அதிகமாய்  பேசினால் அகன்றிடும் அர்த்தமே 

             அதிகமாய் உண்டால் ஆபத்தே நெருங்கிடும்

             அறியாமை நிறையின் அகமிருள் ஆகும்

             அளவுடன் நின்றால் அனைத்துமே அமைந்திடும் 

 

             ஆசையை வளர்த்தால் அவதியே நிறையும்

             ஆணவம் மிகுந்தால் அழிவுதான் கிடைக்கும்

             அலைந்திடும் மனத்தால் அனைத்துமே தொலையும்

             அனைவரும் குருவை நாடினால் விடியும் 

 

             தெளிந்த நன்னீராய் இருந்திடல் நலமே

             தேர்ந்துமே கருத்தை கேட்டிடல் நலமே

             வலிந்துமே நோன்பை நோற்றிடல் நலமே

             வாழ்வினில் சுமையைக் குறைப்பது சுகமே 

 

             கண்ணிலே கருணை காட்டிடல் வேண்டும்

             கருத்திலே வறுமை ஒழித்திடல் வேண்டும்

             மண்ணிலே தருமம் ஆற்றிடல் வேண்டும்

             வாழ்விலே கயமை அழித்திடல் நலமே 

 

             இறையது நினைப்பை இருத்திடல் வேண்டும்

             இல்லறம் துறவறம் மதித்திடல் வேண்டும்

             எளிமையாய் வாழ எண்ணிடல் வேண்டும்

             என்றுமே வாழ்வு இன்பமாய் மிளிரும்  




No comments: