மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பனை விதைகளை எடுத்து நோக்கினால் அவை
தொண்ணூறு விகிதத் துக்குக்கு மேல் முளைக்கும் நிலை யிலேதான் இருக்கின்றன என்று அறந் திட முடிகிறது.பாத்தியிலே அடுக்கப்பட்ட பனங்கொட்டைகள் நிலத் தில் விடுகின்ற வேரானது நாங்கள் சுவைத்து உன்னும் கிழங்காகவே வருகிறது என்பதுதான் மிகவும் முக் கிய நிலையாகும்.பாத்தியில் அடுக்கப்பட்ட பின்னர் கிழங்கு பிடுங்கும் நிலை மூன்று மாதங்களின் பின் னரே வாய்க்கிறது.
நிலத்திலிருந்து பனக்கிழங்கினைப் பிடுங்கி வெளியே எடுக்கும் பொழுது பேரானந்த மாகவே இருக்கும். தோலுடன் கிழங்கு வந்து எம்மைப் பார்ர்த் தபடி நிற்கும்.கிழங்கினைப் பாதுகாக்கும் கவசத்தைப்போலவே மேல்த் தோலிருக்கும். அந்தத் தோலினைத் தோகை என்று பெயரிட்டு அழைப்பார் கள்.வெளித்தோலான தோகையினை உரித்தபின் கிழங்கினைப் பார்க்கை யில் பரவசமே ஏற்படும். அதன் திரட்சியும், நிறமும் மனத்தை நிறைத்தே விடும்.
பனங்கிழங்கினைக் பச்சையாகவே இரண்டாகக் கிழித்து வெய்யிலில் காய விட்டு , பின்னர் அதனை மாவாக்கி பலவிதமாகச் சாப்பிடுகிறோம்.இது ஒரு முறையாகும். பானைகளில் நீரில் வைத்து அவித்தும் சாப்பிடுவதும் ஒரு முறையாகும். அவித்த கிழங்கினை வெய்யிலில் காயவைத்து பின் எடுத்துச் சாப்பிடு வதும் ஒரு முறையாகவே இருக்கிறது.மூன்று நிலைகளில் பனங்கிழங்கினை சாப்பிடுவதற்கு பழக்கப் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இங்கு முக்கிய கருத்தெனலாம்.
பச்சைப் பனங்கிழங்கினை வெய்யிலில் காயவைத்து எடுத்த பின்னர் அத னை மாவாக்கி எடுக்கும் பொழுது , அந்த மாவினையே ஒடியல் மா என்கி றோம். இந்த மாத்தான் பல உணவுப் பதார்த்தங்களைச் செய்வதற்கு மூல மாக வந்தமைகிறது என்பது முக்கியமாகும்.
ஒடியற் கூழ் என்றவுடன் நாவெல்லாம் ஊறுகிறதல்லவா ? ஒடியல்
மா தான் இக்கூழின் கதாநாயனாகும். ஒடியல்மாவுடன் அவரவர்க்கு விரும் பிய காய்கறிகளைச் சேர்த்து மரக்கறிக் கூழ் காய்ச்சுவார்கள். பயற்றங்காய், கீரை, பலாக்காய்,
ஒடியல் மாவிலே கூழ் காய்ச்சிக் குடிப்பதை ஒரு கூட்டமாகவே
சேர்ந்து மகிழுவதையும்காணக் கூடியதா கவே இருக்கிறது. கூழ் காய்ச்சவேண்டும் என்னும் எண்ணமானது எழுந்தவுடனேயே அங்கு ஒன்று சேர்க்கும் நிலை தான் முதலில் அமையும். அதன் பின்னர்தான் எத்தகைய கூழினைக் காய் ச்சுவது என்று - அதாவது மரக்கறிக் கூழா அல்லாத கூழா என்று தீர்மா ன ம் எடுக்கப்படும். மேற்குலக நாடுகளிலே கூட்டமாகச் சேர்ந் திருந்து குடி த்து மகிழ்வதுபோல , எங்கள். பிரதேசங்களிலே ஒடியற் கூழ் காய்ச்சிச் சேர் ந்தி ருந்து குடித்து மகிழும் நிலையினை எடுத்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு ஒயற் கூழானது ஒரு சமூகத்தின் உணவாக விரும்பி எடுக்கும் உண வாக வே அமைந்திருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும். உறவின ர்கள் ஒன்றுகூடிக் ஒடியற் கூழ் குடித்து மகிழ்வதும் நிகழ்ந்த படியே இருப் பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையுற்று இரத்தினபுரி அண்டி அப்பாலே நிவிற்றிக்கொல்லை
ஈழத்தைச் சேர்ந்த ஆசுகவியான கல்லடி வேலுப்பிள்ளை என்பவர் கூழை யும் ,தனக்குக் கூழ்குடிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் சுவையாக இப்பா டலின் வாயிலாக வெளிப்படுத்தி நிற்கிறார்.
பனங்கிளங்கானது பல மருத்துவ குணங்களைக் கொண்டதாகவே இரு க்கிறது என்பதை மனமிருத்தல் அவசியமாகும். பச்சைக்கிழங்கினைச் சுத் தம் செய்தெடுத்து
பின்னர் அதனை உரலிலிட்டு இடித்து எடுக் க வேண்டும். இடித்து எடுத்ததை நீரில் கரைத்து பின்னர் அந்தக்கலவையினை வடித்து எடுக்க வேண் டும். வடித்தெடுத்ததை வெய்யிலில் உலரவைக்க வேண்டும். உலர்ந்த பின்னர் வருகின்ற அந்தமாவனது பாலூ ட்டும் தாய்மார்களுக்கு உகந்ததாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத் தாகும். ஒடியற் கூழா னது உணவாக இருக்கிறது. நல்ல சுவையினையும் கொடுக்கிறது. அதற்கு அப்பாலும் உடலின் ஆரோக்கி யத்துக்கும் கைகொடுக்கும் நிலையி லும் இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கி யமாகும்.ஒடியற் கூழி னைக்
குடிப்பதால் பல நன்மைகளையும் தருகிறது என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். வாயுத் தொல் லைகள் அனைவரையும் வாட்டி வதைக்கும் ஒன் றாகும்.வாயுவினால் உடம்பில் உளைவுகள் ஏற்படும் நிலை உருவாகிறது. வாயு அல்லாத நிலையில் வேறு காரணத்தாலும் உடலில் உளைவு ஏற்ப டவும் கூடும். கை கால்களில் பிடிப்பு ஏற்படும். மலமானது வெளியேறாமல் பெரும் வேதனையும் ஏற்படும். இப்படியான வேளைகளில் கைகொடுத்து உதவிடும் கைகண்ட மருந்தாக ஒடியற்கூழ் விளங்கு கிறது என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும். இதன் காரணமாக " தாலமூல கீரசூரண தை லம் " என்று ஒடியற்கூழைச் சொல்லுவதும் நடைமுறையில் இருக்கிறது என்றும் அறிந்திட முடிகிறது. அந்த அளவுக்கு ஒடியற்கூழ் மருந்தாகவும் அமைகிறது என்பதுதான் முக்கியமாகும்.
கொழுக்கியெனு
கூழினையுண் புழுக்கொடியல் கொறிநீமாலை
வழுக்கிவிழுங் காலைமல வாசலூடே
வைத்தியனுந் தேவையிலை வயிற்றின் கண்ணே
அழுக்கணுவுங் குடலகத்தி லணுகிடாது
ஆகாரம் பசிகடுப்ப வதிகஞ் செல்லும்
கொழுப்பொடியற் புட்டினையுண் கூடவேறும்
குறுமுனிவர் கூற்றிவைகைக் கொள்ளுவீரே
கிண்டிப் பிடுங்கிக் கிழித்து உலர்த்தி
வாலொடுத்துததன் பின்
துண்டப் படுத்தி இடித்து அரித்து
நற் கூழுமிட்டே
வண்டுக்கடி கிழங்காகிடாப்
பூரானதையு மிட்ட
சண்டக் குழம்புக்கு எதிர்வருமோ
சின்னப் பொடியனுமே
என்று ஒடியற் கூழினைப்பற்றி பனை இராசன் நாடகம் பார்க்கும் பார்வை யும் ஒடியற்கூழின் மகத்துவத்தை வெளிக்காட்டி நிற்கிறதல்லவா!
கூழ் குடித்து மகிழ்ந்தோம். அதுவும் ஒன்றாகவே கூடியிருந்து நண்பர்கள் கூட்டத்துடனும் கூழ் குடித்தோம். உறவுகளுடன் இணைந்தும் கூழினைக் குடித்து மகிழ்ந்தோம். ஒடியல் மாவில் கூழ் மட்டுமல்ல பிட்டும் அவை த்துச் சுவைத்துச் சுவைத்து உண்டு மகிழலாம்.ஒடியல் மாவிலே பிட்டு அவித்தால் நல்ல வாசனை அங்கே வரும். அதுவும் பனை ஓலையினால் செய்யப்பட்ட நீத்துப்பெட்டியில் அவிக்கும் பொழுதுதான் அந்தச் சுக மான சுவையான வாசனை வந்து நிற்கும்.அந்த வாசனையினை நுகர்ந்தாலே ஒரு தனி இன்பமாகத்தானி ருக்கும். அனுபவித்தர்களுக்கு மட்டுமே அது தெரியவரும். கீரை போட்டு பிட்டு அவிக்கும் முறையும் இருக் கிறது.கீரை சேர்க்கும் பொழுது பிட்டின் சுவை மேலும் அதிகரிக்கும் என்பதை அதனைச் சாப்பிட் டவர்க ளுக்கே தெரியும்.குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் நிலையில் தாய்மார்களுக்கு பால் சுரப்பதில் சிக்கல் ஏற்படும் நிலையி னைக் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியான நிலையில் ஒடியல் பிட் டினைச் சாப் பிட்டால் தாய்ப்பால் நன்றாகவே சுரக்கும் நிலை ஏற்படுகிறது என்பது மிகவும் முக்கியமாகும்.
ஒடியல்மா பிட்டு ஏழைகளின் உணவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடப் படவேண்டிய ஒரு முக்கிய செய்தியாகும். ஏழைகளின் உணவாக மட்டும ன்றி பசியினைப் போக்கும் உணவாயும், வலிமைதரும் உணவாயும் அமை கிறது என்பதையும் கருத்திருத்தல் வேண்டும். தேங்காய்ப்பாலினைச் சேர்த் தும் சிலர் ஒடியற் பிட்டினை அவிக்கிறார்கள். நெய்யினைக் கலந்தும் அவி ப்பதும் நடை முறையில் காணப்படுகிறது. இதனைவிட இன்னுமொரு மு றையும் ஒடியற் பிட்டு அவிப்பதில் கையாளப்படுகிறது. தேங்காய்ப்பூ, மிள கு, உப்பு, மிளகாய், சீரகம், அரி
எண்பத்து ஒரு விகித அளவில் மாச்சத்தினையும், நான்கு புள்ளி எட்டு விகித அளவில் புரத சத்தினையும், இரண்டு விகிதம் அளவில் உலோகப் பொருள் சத்தினையும், சைபர் புள்ளி மூன்று விகிதம் அளவில் கொழுப் புச்சத்தும் ஒடியல் உணவில் இருக்கின்றது என்று அறியக்கூடியதாக இருக்கிறது.
ஒடித்துய ரொடியலென்ன உரலிட்டு லக்கை கொண்டு
சீவசத்தில் உணவுகளின் சிரசாய் நின்று
தீங்குதரு சலரோகம் பாண்டு குன்மம்
ஆயகெட்ட நோய்களென்றும் அணுகிடாது
ஆதரிக்கு மரிய பெரும் ஆற்றலுற்றுத்
தாயகத்தி லரியபெரும் உணவாய்த் தோன்றித்
தஞ்சமிலா ஏழைமக்கள் தமையுந் தேற்றி
மாயவித்தை போன்றேனென் மாவின் சத்தை
மாநிலத்தில் உணராதார் மாக்கள் தானே
என்று இப்பாடல்களும் ஒடியல் மாவின் மகத்துவத்துக்குச் சான்று பகரு வதாய் வந்தமைகிறது என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.
பனங்கிழங்கினை உணவாக எடுப்பது மட்டுமேதான் எங்களுக்குத் தெரி யும். ஆனால் அதில் அடங்கியிருக் கும் மருத்துவ குணங்களை அறிந்திட் டால் பனங்கிழங்கினப் பொக்கிஷமாகவே நாங்களனைவருமே போற்றி நிற் போம்.பனங்கிழங்கினைப் பற்றி பழைய வைத்திய நூல்கள் சிறப்பாக எடுத் துக் கூறுகின்றன. அந்த வகையில் சித்தவைத்தியத்தில் முன்னணி வகித்த வர்களான போகர் , புலிப்பாணியார், கொங்
நேர்ந்தவுட் சூடும் நீஅர்ந்தபன் மேகமுடன்
No comments:
Post a Comment