மரண அறிவித்தல்


இளைப்பாறிய ஆசிரியை செல்லம்மா இரத்தினம்




யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  பெருவாழ்வு பெற்ற சீமாட்டி, இளைப்பாறிய ஆசிரியை செல்லம்மா இரத்தினம் அவர்கள் 05-03-2020  வியாழக்கிழமை அன்று தனது 100வது வயதில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செட்டியார் செல்லப்பா இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், ரவீந்திரன்,  மகேந்திரன்(தலைவர்- துர்க்கை அம்மன் கோவில்),  ரஜனி, காலஞ்சென்ற ராதா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராசம்மா,  அன்னம்மா, நடராஜா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், குமாரநாயகம்(லண்டன்),  விஜயகுமாரி, நிரஞ்சனா, மகேஸ்வரன் ஆகியோரின்  அன்பு மாமியும், Dr. கிருஷ்னி(லண்டன்),  சஞ்சீவ்(லண்டன்), Dr. வித்யா, Dr. அபிலாஷ்,  Dr. தர்சினி(லண்டன்), ராகுலன், Mitta, வினாயக், வைஷ்ணவி, சரவணன், சரண்யா, சாரங்கன், Dr. Sanjay, Dr. அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆரியன்(லண்டன்),  லஷ்மன்(லண்டன்), ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
  • Friday, 13 Mar 2020 9:00 AM - 12:00 PM
  • Residence 21 Francis Street, Strathfield, NSW2135
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு 


ரவீந்திரன் மகன்  61 411 647 824
மகேந்திரன் மகன்  61 297 429 746, 61 450 209 724 
மகேஸ்வரன் ரஜனி  61 280 210 545

சிட்னி துர்க்கா கோவில் - பூங்காவனம்


படப்பிடிப்பு: ஞானி    



யாழ் மத்திய கல்லூரியின் மதுரகானம் 14.03.2020

.


Innisai Malai 2020 - Forest Lake QLD குயீன்ஸ்லாந்தில் இன்னிசை மாலை 2020-15 03

.

நாத சங்கமம் - சிட்னி துர்கா கோவில் - 14/03/2020



உலக பிரசித்தி பெற்ற ஈழத்து இசைக்கலைஞர்களின்   
நாத சங்கமம்

இணுவில் தவில் வித்வான் திரு தட் ச ணா மூர்த்தி உதயசங்கர் 
நாதஸ்வர சக்ரவர்த்தி  இணுவில் திரு குமரன் பஞ்சமூர்த்தி 
யாழ் நாதஸ்வர கலைஞர்  திரு நாகதீபன் குமரதாஸ் 
யாழ் தவில் கலைஞர் நடராசா பிரசன்னா 

சிட்னி துர்கை அம்மன் கலாச்சார மண்டபம் 
14/03/2020 மாலை 6 மணி 


அனைவரும் வருக!!!   இசை அமுதம் பெருக !!!    






வானவில் 2020 - 28/03/2020

.

சிட்னி துர்க்கா கோவில் - தேர்த் திருவிழா


படப்பிடிப்பு: ஞானி 






சிட்னி துர்க்கா கோவில் - சப்பரத் திருவிழா


படப்பிடிப்பு: ஞானி 



.               .                



புகழேந்தி மேடை நாடக விமர்சனம் - ஈழன் இளங்கோ

29.02 2020 அன்று சிட்னிவாழ் இளைஞர்களினால் நடாத்தப்பட்ட "புகழேந்தி" என்ற தமிழ் இலக்கிய நடையிலானஏறக்குறைய அறுபது பெருக்குமேல் பாங்குபற்றிய, ஒரு வரலாற்று மேடை நாடகத்தை கண்டுகளித்தேன். கண்டேன்களித்தேன்சிரித்தேன் அழுதேன் ஆனந்தமடைந்தேன். எமக்கென்றோரு வலுவான தளம் இல்லையே என்ற கவைலையோடும் அக்கறையோடும் திரைத்துறையில் பயணிக்க முயன்றஆரம்பித்த எனக்குஇதுவரை பயணம் செய்து பெரியதொரு வெற்றியடையாமல்ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் வலுவான தளத்தை உருவாக்க முடியாமல் மறைந்த பலர்போல் எனது முயற்சியும் வாழ்க்கையும் முடிந்து விடுமோ என்ற ஐயத்தோடு இருந்த எனக்குஇல்லை நாம் இருக்கிறோம்எங்களால் முடியும்நாம் நிறைவேற்றுவோம் என்று கூறியது போல் இருந்தது இந்த இளைஞர்களின் படைப்பு. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய பெரும்பாலான இளைஞர்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இளைஞர்களின் கலைப்பயணம் என்பது அவர்களுடைய கல்விபுரியும் காலங்களில் அந்தந்த கல்விக்கூடங்களுக்குரிய குழுக்களால் ஆண்டுக்கொருமுறை  நடாத்தப்படும் கலைநிகழ்ச்சிகளோடு முடிந்துவிடும்ஆனால் கல்வியை முடித்துவிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கும் தருணத்தில் கடினங்களையும் கடமைகளையும் தாண்டிகலை ஆர்வத்தை தாண்டி ஒரு சமுதாய உணர்வுடன்தமிழ் மொழிமீது உள்ள பற்றை இலக்கியதமிழில் ஒரு சரித்திர நாடகத்தைகுறிப்பிடத்தக்ககுறிப்பிட முடியாத பல இன்னல்களைத்தாண்டிபலத்த கடினத்தோடுபல மாதங்கள் கடின பயிற்சி எடுத்துஅதில் பெரியவர்களையும் சேர்த்துஅவர்களை தகுந்த வகையில் உரிய இடத்தில்  உபயோகித்துபல ஆயிரம் பணத்தை செலவுசெய்துஒரு நெருக்கடியான சனிக்கிழமைஅரங்குநிறைந்த  நிகழ்வாக வெற்றிகரமாக மேடையேற்றிவெற்றியும் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது வெறும் பாராட்டுக்குரிய ஒரு விடயம் அல்ல. இந்த இளைஞர்கள் தமிழ் மொழியையும்கலை கலாச்சாரத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்வார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களை உற்சாகப்படுத்தி இவர்கள் மேலும் மேலும் படைப்புகளை படைக்கவும்சாதனைகளை புரியவும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கவேண்டியது சமுதாயத்தில் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

கொடுத்து வரும் தண்டனையே கொரோ நோவாய் வந்திருக்கு ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


                           இயற்கை யெனும் பெருமரணை
                           நொருக்கி நிற்கும் வகையினிலே
                            எடுத்து வரும் பொருத்தமிலா
                            முயற்சி யெலாம் பெருகுவதால்
                            இயற்கை அது சீற்றமுற்று
                            எல்லை இலா வகையினிலே
                            கொடுத்து வரும் தண்டனையே
                            கொரோ நோவாய் வந்திருக்கு   !

                            இயற்கை யெனும் பெருவரத்தை
                            புறக்கணிக்க பல வகையில் 
                            செயற்கை எனும் வழியினிலே
                            இறக்கை கட்டி பறந்ததனால்
                            பயன் உடைய அத்தனையும்
                            பயன் அற்ற தெனும்மாயை
                            உலகினிலே வந் வந்தமைந்து 
                            உலகை இப்போ உலுக்கிறதே  !


                            விஞ்ஞானம் எனும் பெயரால்
                            விந்தை பல விளைந்ததுவே 
                            அளவுக்கு மிஞ்சி விடில்
                            அவை அனைத்தும் ஆபத்தே 
                            எஞ் ஞான்றும் விஞ்ஞானம்
                            உதவிவிடும் எனும் எண்ணம்
                            மண்ணுள்ளார் மன மேறி
                            மரண வாசல் பார்க்கின்றார் !

                            

படித்தோம் சொல்கின்றோம்: பிரான்ஸ் ராணிமலர் எழுதிய நூல் அமரர் சின்னத்தம்பி சின்னையா செல்லையா வாழ்வும் பணிகளும் ரஸஞானி



எமது தமிழ் சமூகத்தில் அதிலும் வசதி படைத்தவர்கள் மத்தியில் ஒருவர் மறைந்துவிட்டால், பிள்ளைகள் அந்தியேட்டி வரும் சமயத்தில் மண்டபம் ஒழுங்கு செய்து உறவினர், நண்பர்களை அழைத்து மறைந்தவர் பற்றிய நினைவு மலரையும் வெளியிட்டு விருந்துபசாரம் நடத்துவார்கள்.
ஈழத் தமிழர் புகலிட  நாடுகளில் இந்த நிகழ்வுகளை பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட நினைவு மலருக்கு கல்வெட்டு என்றும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
அதில் மறைந்தவரின் சுருக்கமான வாழ்க்கைச்சரிதமும்,  மக்கள், பேரப்பிள்ளைகள் எழுதும்  நினைவுக் குறிப்புகளும் குடும்ப பின்னணி பற்றிய  Family Tree உம் பதிவுசெய்யப்பட்டிருக்கும்.
மறைந்தவர் சைவத்தமிழராயின், கல்வெட்டின் இறுதிப்பக்கங்களில்  தேவாரம், சிவபுராணம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா, திருப்புகழ் என்பனவும்  அச்சிடப்பட்டிருக்கும்.  இது வழக்கமான சம்பிரதாயமாகியிருக்கும் புகலிடச்சூழலில், ஒரு மகள் தனது அருமைத்தந்தையாரை நினைவுகூர்ந்து ஒரு சிறிய நூலை எழுதியுள்ளார்.
இந்த நினைவேட்டில் நாம் எதிர்பார்க்கும் கல்வெட்டு உள்ளடக்க சமாச்சாரங்களை பார்க்கமுடியவில்லை! அதனால் முற்றிலும் வித்தியாசமானது.
இந்த நூலை எழுதியிருப்பவர் கடந்த பலவருடங்களாக பிரான்ஸ் நாட்டில்  வாழ்ந்துவரும்  ஈழத்தவரான ராணிமலர் செல்லையா.  இவர் இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த பிரபல வர்த்தகரும் சமூகப்பணியாளருமான ( அமரர் ) சின்னத்தம்பி சின்னையா செல்லையாவின் இளைய மகள்.
தனது நெடுநாள் கனவை நனவாக்கும் பொருட்டு, தனது தந்தையார் பற்றிய தகவல்களை தேடித்திரட்டி இந்த நூலை படைத்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் காசுப்பயிராக விளங்கிய புகையிலை வர்த்தகம் சார்ந்த சுருட்டுத் தொழிலகத்தை நடத்தியவாறு, சமூகச்சிந்தனையுடன் இயங்கியிருப்பவர்தான் நீர்கொழும்பு பிரதேசத்தில் செல்லையா முதலாளி என்ற பெயருடன் வாழ்ந்திருக்கும் ராணிமலரின் தந்தையார்.
தமது தொழிலாளர்கள் சமூக மற்றும் நாட்டு நடப்புகளையும் உலக விவகாரங்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காக தான்  நடத்திவந்த தொழிலகத்தில் வித்தியாசமான வாசிப்பு அனுபவப்பயிற்சியையும் நடைமுறைப்படுத்தியவர்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் -03


கோயில் விழாக்கள்

மது கோயிலிலே திருவிழாக்களுக்குக் குறைவில்லை. கொடியேற்றிச் செய்யும் திருவிழாக்களும் தேர் தீர்த்தமும் இல்லை என்ற குறைதவிர, வேறு திருவிழாப் பல தாராளமாக இருந்தன. மாதந்தோறும் நிகழ்ந்தன. அவை எமதூர் மக்களின் ஒற்றுமையையும் சமய உணர்ச்சியையும் வௌிப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களாக அமைந்தன.
அவற்றை எல்லாம் இங்கு விபரித்தல் பொருந்தாது எனினும், இரண்டொரு விழாக்கள் பற்றிக் குறிப்பிட்டாற்றான் ஊர் மக்கள் ஒற்றுமையும் உணர்ச்சியும் புலனாகும். எனவே, கந்தசஷ்டி காலத்தில் இறுதி இரண்டு நாள்களும் நடைபெறும். சூரன்போர் விழா, திருக்கல்யாண விழா ஆகியன பற்றியும் கார்த்திகை மாதத்தில் நிகழும் திருக்கார்த்திகை விழா பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டு மனநிறைவு பெறுகிறேன்.
சூரன்போர் விழா கந்தசஷ்டி விரதகாலக் கடைசி நாள் திருவிழா. சூரன் கதையும் தாரகாசுரன் சிங்காசுரன் ஆகியோரை அவன் பலிகொடுத்த சுயநலன் பற்றியும் முருகன் வேல் எய்யும் வேளை அவன் தப்பிக் கொள்ளச் செய்த சாலங்கள்பற்றியும் கந்தசஷ்டி விரதகாலப் புராணப் படிப்பின்போது அறிந்துகொள்வோம். அது முழுக்க முழுக்க செவிப்புலனாற் பெறும் அறிவு.
செவிப்புலனாகப் பெறும் அறிவிலும் பார்க்கக் கட்புலன் மூலமாகப்பெறும் அறிவு காலத்தை வென்று நிலைக்கும் என்பது கல்வியியல் தரும் தகவல். காதாற் கேட்ட கதைகளை நாம் விரைவில் மறப்பது வழக்கம். ஆனாற் கண்ணாற் கண்ட காட்சிகள் அப்படியல்ல. பலநாள் அவை நினைவில் நிற்கும். அதானாலேதான் பாடசாலைக்கற்றல் அனுபவம் பலவற்றைச் செவிப்புலனாற் பெற்றாலும் கட்புல அனுபவத்தின் மூலம் உறுதிப்படுத்துதல் நற்பயன்தருமென்பர்.
அந்த வகையில், கோயிற் புராணப்படிப்பின் போது கேட்டுச்சுவைத்த  சூரன் கதைகளை சுவைத்து மனதில் நிறுத்த உதவியது சூரன்போர்த் திருவிழா.
சூரன்போர்த் திருவிழா கந்தசஷ்டி விரதகாலக் கடைசிநாள் நடைபெறும். விழாவுக்கான ஆயத்தங்கள் முற்பகல் ஒன்பது மணிக்கே துவங்கிவிடும். பகல் ஒரு மணியளவில், சூரனை வண்டி ஒன்றில் வைத்துத் தள்ளியவாறு கோயிலில் இருந்து ஒருமைல் தூரத்திலுள்ள நாவற்குழிச் சந்திக்குக் கொண்டு செல்வார்கள். அச்சந்தியை யாவகர்கோட்டை என்று ஊரவர் குறிப்பிடுவர். சாவங்கோட்டை என்று பேச்சுவழக்கிற் கூறுவதும் உண்டு. அச்சந்தியில் வைத்து, அலங்கரித்த சூரனை ஊர்வலத்துக்குத் தயாராக்குவர்.