இயற்கை யெனும் பெருமரணை
எடுத்து வரும் பொருத்தமிலா
முயற்சி யெலாம் பெருகுவதால்
இயற்கை அது சீற்றமுற்று
எல்லை இலா வகையினிலே
கொடுத்து வரும் தண்டனையே
கொரோ நோவாய் வந்திருக்கு !
இயற்கை யெனும் பெருவரத்தை
புறக்கணிக்க பல வகையில்
செயற்கை எனும் வழியினிலே
இறக்கை கட்டி பறந்ததனால்
பயன் உடைய அத்தனையும்
பயன் அற்ற தெனும்மாயை
உலகினிலே வந் வந்தமைந்து
உலகை இப்போ உலுக்கிறதே !
விஞ்ஞானம் எனும் பெயரால்
விந்தை பல விளைந்ததுவே
அளவுக்கு மிஞ்சி விடில்
அவை அனைத்தும் ஆபத்தே
எஞ் ஞான்றும் விஞ்ஞானம்
உதவிவிடும் எனும் எண்ணம்
மண்ணுள்ளார் மன மேறி
மரண வாசல் பார்க்கின்றார் !
செயல் களைய முன்வருவோம்
இயற்கை தனை இறுகணைக்க
இதயம் அதை திறந்திடுவோம்
அவசரமாய் நாம் அனைத்தும்
ஆக்கி விடும் மனநிலையை
அகற்றி நிற்க எண்ணிவிடின்
அகிலம் அதைக் காத்திடலாம் !
No comments:
Post a Comment