இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 – 2022 ) CSEF ஆண்டுப்பொதுக்கூட்டம்



அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும்
27 ஆம் திகதி ( 27-08-2022 ) சனிக்கிழமை மாலை  4-00 மணிக்கு மெல்பனில்,  வேர்மன் தெற்கு  சமூக  நிலையத்தில்  ( Vermont South Learning Centre - 1 Karobran Drive, Vermont South VIC 3133.) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.

இலங்கையில் முன்னர் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டின் கீழிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின்  குறிப்புகளையும் ஆண்டறிக்கையையும் நிதியத்தின் செயலாளர் திருமதி விதுஷினி அருளானந்தம்  சமர்ப்பிப்பார். நிதிச்செயலாளர் செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி நிதியறிக்கையை  சமர்ப்பிப்பார்.

துணை நிதிச்செயலாளர்  திரு.  விமல் அரவிந்தன், நிதிய உறுப்பினர் திரு. ரவி – ரவீந்திரன் ஆகியோர்,  நிதியத்தின் ஊடாக  பயனடையும் மாணவர்களின்  நிதிக்கொடுப்பனவு மற்றும் அவை  சார்ந்த நிருவாக நடைமுறைகள்  குறித்த விளக்கங்களை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பர்.

கல்வி நிதியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை நடைபெறவிருக்கும் ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு வருகை தருமாறு நிதியத்தின் பரிபாலனசபை அன்புடன் அழைக்கின்றது.

மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்கள் பின்வரும் இணைப்பில் தங்கள் விபரங்களை பதிவுசெய்துகொள்ளலாம்.

 https://csefund.org.au/membership/#account/join

----0----

No comments: