இதே நாளில் எம் ஈகைச் சுடர் தியாகி திலீபன் அண்ணாவின் நினைவிரங்கலைச் செய்யும் போது இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.வர்ணராமேஸ்வரன்என்ற "ஈழமண் தந்த குயில்" பறந்தது
"ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அண்ணாவின் பேரிழப்போடு இன்றைய காலை விடிந்திருக்கிறது.
ஈழத்தில் அவரின் தாயக எழுச்சிப் பாடல்களைக் கேட்ட காலம் தொட்டு அவரின் ரசிகனாகத் தொடர்ந்த பந்தம் கடல் கடந்த பின்னும் வாட்சாப் வழி தன் புதுப் புது இசைப் படைப்புகளைப் பகிர்வது வரை தொடர்ந்து இப்படிச் சடுதியாக ஓயுமென்று நினைப்பேனா?
வர்ணராமேஸ்வரன் அண்ணாவுடன் 2008 இல் நிகழ்த்திய வானொலிப் பேட்டியில் எழுத்து வடிவம்
பேட்டியின் ஒலி வடிவம்
பாகம் 1
பாகம் 2
மாவீரர் துயிலுமில்லப் பாடல், எழுச்சிப் பாடல்கள் மற்றும் ஈழத்துப் பக்தி இலக்கியங்களின் வழி அவர் எம்மில் வாழ்வார்.
கானா பிரபா
26.09.2021
“ஈழத்து இசைவாரிதி” வர்ணராமேஸ்வரன்
No comments:
Post a Comment