எனக்குஅவர் வரமாகும் ! - ( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்.. அவுஸ்திரேலியா )

image1.jpeg
 பெற்றெடுத்தாள் அன்னை
பேணிநின்றார் தந்தை
கற்பதற்கு கைபிடித்து
கல்வியிலே ஏணியானார்
முற்றுமே துறந்தவராய்
முனிவராய் அவரிருப்பார்
சற்றுநான் சறுக்கிவிட்டால்
தான்தாங்க வந்துநிற்பார் !

எப்பவுமே எனைப்பற்றி
எண்ணியே இருந்திடுவார்
தப்பிதங்கள் செய்யாமல்
தடுப்பதிலே முன்னிற்பார்
அற்பத் தனங்களை
அறவே வெறுத்திடுவார்
அறவழியில் நான்வளர
அவரேயென் குருவானார் !


அப்பாவின் வார்த்தைகள்
அத்தனையும் மந்திரமே
அவர்செய்யும் அத்தனையும்
அரணாக அமைகிறதே 
எப்பவுமே இப்பிறப்பில்
என்தந்தை இறையெனவே
எண்ணியே தொழுகின்றேன்
எனக்குஅவர் வரமாகும் !No comments: